வாட்ஸ் அப் கொடுக்கப்போகும் சூப்பர் அப்டேட்..அனுப்பிய மெசேஜ்களை எடிட் செய்யலாம்..எப்படி வொர்க் ஆகும்?
அனுப்பிய மெசேஜ்களை எடிட் செய்யும் வகையில் புதிய அப்டேட்டை விரைவில் வாட்ஸ் அப் வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன்: அனுப்பிய மெசேஜ்களை எடிட் செய்யும் வகையில் புதிய அப்டேட்டை விரைவில் வாட்ஸ் அப் வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அனுப்பிய மெசேஜை எடிட் செய்யவும், அதில் கூடுதல் தகவல்களை பயனர்கள் சேர்க்க முடியும். எனினும் இந்த வசதி எப்போது அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்ற விவரங்கள் வெளியாகவில்லை.
தகவல் தொழில் நுட்பத்தின் அபரிமிதான வளர்ச்சியால் இன்று உலகமே உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்டது.
உலகின் ஒரு மூலையில் இருந்து மற்றொரு மூலைக்கு கூட சில வினாடிகளில் நாம் அனுப்பும் தகவல் சம்பந்தப்பட்ட நபருக்கு சென்று சேர்ந்து விடும். அளவுக்கு தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. சமூக வலைத்தளங்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய பிறகு தகவல் பரிமாற்றம் இன்னும் ஒரு படி மேலே போய்விட்டது என்று சொல்லலாம்.

குறுஞ்செய்தி அனுப்புவதற்கு
கட்டணம் செலுத்தி பயன்படுத்தி வந்த மெசேஜ் வசதிகளை எல்லாம் இலவசமாகவே சமூக வலைத்தளங்கள் அளிக்கத் தொடங்கின. அதுவும் வாட்ஸ் அப் வந்த பிறகு பயனர்கள் தகவல் பரிமாற்றம் மேலும் எளிதாகிவிட்டது. குறுஞ்செய்தி அனுப்புவதற்கு பல சமூக ஊடக செயலிகள் இருந்தாலும் வாட்ஸ் அப் உலக அளவில் முன்னணி தளமாக உள்ளது. காலையில் விழித்ததும் செல்போனை எடுத்ததும் பலரும் முதலில் பார்க்கும் செயலி வாட்ஸ் அப் செயலியாகத்தான் இருக்கும்.

புது புது அப்டேட்கள்
வாட்ஸ் அப் இல்லாத ஸ்மார்ட் போன்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு வாட்ஸ் அப் செயலி பயனர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. உலகம் முழுவதும் 2.26 பில்லியன் பேர் வாட்ஸ் அப்பை பயன்படுத்துகின்றனர். வாட்ஸ் அப் போலவே வேறு சில செயலிகளும் இருப்பதால் போட்டி போட்டுக் கொண்டு பயனர்களுக்காக அவ்வப்போது இந்த நிறுவனங்கள் புது புது அப்டேட்களை கொடுத்து வருகிறது. இதிலும் வாட்ஸ் அப் தான் முன்னோடியாக உள்ளது.

எடிட் செய்யும் வசதி
வெறும் குறுஞ்செய்தி அனுப்புவது மட்டும் இல்லாமல், புகைப்படங்கள், வீடியோக்கள், பைல்கள் என பல வசதிகளை வாட்ஸ் அப் தனது பயனர்களுக்கு அளித்து வருகிறது. அதேபோல், ஸ்டேடஸ்கள் வைப்பது வாய்ஸ் மெசேஜ் அனுப்புவது என சமூக வலைத்தள பயனர்களுக்கு அசத்தல் வசதிகளை கொடுத்து வருகிறது. அந்த வகையில், தற்போது பயனர்கள் தாங்கள் அனுப்பிய மெசேஜ்களை எடிட் செய்யும் வசதியை வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ-போன் beta வெர்சனிலும்
இது தொடர்பான வேலையில் வாட்ஸ் அப் டெவலப்பர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஏற்கனவே ஐமெசேஜிங் மற்றும் டெலிகிராம் ஆகிய செயலிகள் அனுப்பப்பட்ட மெசேஜ்களை எடிட் செய்யும் வசதியை அளித்து வருகின்றன. இந்த நிலையில், கடந்த ஆண்டு வாட்ஸ் அப் இந்த ஆப்ஷன்களை சோதனை செய்து வந்தது. ஆண்ட்ராய்டு beta வெர்சனில் இந்த ஆப்ஷன் சோதித்து பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஐபோன் beta வெர்சனிலும் பரிசோதிக்கப்பட்டு வருகிறதாம்.

சிறிது நேரம் பிரஸ் செய்தால்
அனுப்பப்பட்ட மெசேஜ்களை சிறிது நேரம் பிரஸ் செய்தால் அதில் எடிட் ஆப்ஷன் வரும் என்றும் அதை கிளிக் செய்து அனுப்பப்பட்ட மெசேஜ்களை எடிட் செய்து கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது. 15 நிமிடங்கள் வரை அனுப்பிய மெசேஜ்களுக்கான எடிட் ஆப்ஷன் வசதியை யூசர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. அதேவேளையில், இந்த வசதி பயனர்களுக்கு எப்போது கிடைக்கும் என்ற தகவலும் வெளியாகவில்லை. வாட்ஸ் அப்களின் புது அப்டேட்கள் குறித்த தகவல்களை வெளியிடும் wabetainfo- இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications