ரெடியான டிரம்ப்.. மீண்டும் ஈரான் - அமெரிக்கா இடையே வெடிக்கும் போர்? பறந்துபோன பகீர் வார்னிங்
வாஷிங்டன்: அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் நிலையில் ஈரான் உடனடியாக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை தொடங்கும். குண்டு வீச நானும், ராணுவமும் தயாராக இருக்கிறோம் என்று வார்னிங் செய்துள்ளார்.

ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் தற்காலிகமாக 2 வாரம் காலம் நிறுத்தப்பட்டது. இந்த போர் நிறுத்தம் இன்றுடன் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது ஒருநாள் தள்ளிப்போய் உள்ளது.
இதற்கிடையே தான் ஈரானின் அணுஆயுத தயாரிப்பு முயற்சியை தடுக்கும் வகையில் அந்த நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பேச்சுவார்த்தை சென்று கொண்டிருக்கிறது.
2ம் கட்ட பேச்சுவார்த்தை
அதன்படி ஈரானும், அமெரிக்காவும் பாகிஸ்தானில் முதற்கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து 2வது கட்ட பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க குழு பாகிஸ்தான் புறப்பட ரெடியாகி உள்ளது. ஆனால் ஈரான் குழு இன்னும் பாகிஸ்தான் செல்லவில்லை.
இதனால் ஈரான், அமெரிக்காவின் பேச்சுவார்த்தையை விரும்பவில்லை என்பது உறுதியாகி உள்ளது. இது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
டிரம்ப் வார்னிங்
இந்நிலையில் தான் அவர் ஈரானுக்கு கடும் வார்னிங் செய்துள்ளார். இதுபற்றி சிஎன்பிசி செய்தி நிறுவனம் சார்பில் 'ஸ்க்வாக் பாக்ஸ்' எனும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று டொனால்ட் டிரம்ப் கூறியதாவது:
''ஈரான் மீது குண்டு வீச நான் தயாராக இருக்கிறேன். அதுதான் சிறப்பானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். ராணுவமும் ஆர்வமுடன் இருக்கிறது. ஏனென்றால் அமெரிக்காவுடனான 2வது கட்ட பேச்சுவார்த்தையில் ஈரான் ஒப்பந்தம் செய்ய வேண்டும்.
பல குண்டுகள் வெடிக்கும்
ஒருவேளை இதில் ஒப்பந்தம் செய்யாவிட்டால் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை எல்லாம் நடத்தமாட்டோம். எங்களிடம் அவ்வளவு காலம் இல்லை. இதனால் ஈரான் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
நாங்கள் சிறந்த ஒப்பந்தத்தை பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. ஈரானுக்கு ஒப்பந்தம் செய்வதை தவிர வேறு வழியில்லை. இந்த ஒப்பந்தம் செய்தால் ஈரான் நல்ல நிலையை அடைய முடியும். அதேவேளையில் போர் நிறுத்தம் நிறைவு பெற்றால் ஈரானில் பல குண்டுகள் வெடிக்கும்'' என்று வார்னிங் செய்துள்ளார்.
ஈரான் கொடுத்த வார்னிங்
இதற்கு ஈரான் அரசின் செய்தி தொடர்பாளர் ஃபாத்திமா மொஹஜெரானி (Fatemeh Mohajerani) கூறுகையில், ''நாங்கள் மீண்டும் அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஆளாக விரும்பவில்லை. அதேவேளையில் அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் நாங்களும் பதிலடி கொடுப்போம். இந்த பதிலடி இதற்கு முன்பை விட உறுதியாகவும், அதிரடியாகவும் இருக்கும்'' என்றார். இதனால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
மீண்டும் போர்?
முன்னதாக, ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் நிறுத்தம் இன்றுடன் முடிவுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் டிரம்ப் தரப்பில் போர் நிறுத்தம் நாளை வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் ஈரான், அமெரிக்காவின் விருப்பத்துக்கு ஏற்ப ஒப்பந்தம் செய்யாவிட்டால் நாளை முதல் மீண்டும் போர் வெடிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
-
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications