ஆன்லைன்ல 6 வெட்டிங் டிரஸ் வாங்கியாச்சு.. ஆனா மாப்பிள்ளைதான் கிடைக்கலை! 90ஸ் கிட்ஸ் நோட் பண்ணுகப்பா!
வாஷிங்டன்: போக்கிரி திரைப்படத்தில் வடிவேல் காமெடிதான் நினைவுக்கு வருகிறது. எதையும் பிளான் பண்ணாம செய்யக் கூடாது என்பார்.
ஆனால் இங்கு ஒரு பெண்ணுக்கு எல்லாத்தையும் பக்காவாக பிளான் செய்தும் அவர் நினைத்தது நடக்கவில்லை. இதனால் அந்த பெண் மிகுந்த மனவருத்தத்தில் இருக்கிறாராம்.
திருமணம் என்றாலே பெண்களும் ஆண்களும் முன்னேற்பாடாக தங்களுக்கு தேவையான நகைகள், ஆடைகள், ஆபரணங்கள், உள்ளிட்டவற்றை வாங்கி வைத்துக் கொள்வார்கள்.

அலைச்சல்
திருமண தேதி நெருங்குவதற்கு முன்பே வாங்கி வைத்து கொள்வதால் கடைசி நேர அலைச்சல் குறையும். பிரபல ஆடை நிறுவனம் ஒன்று திருமண ஆடைகளை விளம்பரம் செய்தது. பெண்களுக்கு தேவையான அனைத்து சைஸ்களிலும் தங்களிடம் ஆடை இருப்பதாக அறிவித்தது. பொதுவாக ஆன்லைனில் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அதற்கான மக்கள் கருத்தை (ரிவியூ) பார்ப்பது வழக்கம்.

6 திருமண உடைகள்
அது போல் நிறைய பேர் ரிவியூ பார்த்த போது ஒரு பெண்ணின் போஸ்ட் இருந்தது. அதில் "நான் 6 திருமண உடைகளை வாங்கியுள்ளேன். அதில் இதுவும் ஒன்று. ஆனால் என்னை திருமணம் செய்து கொள்ள யாரும் முன்வரவில்லை. ஆனால் அது எப்போதாவது நடக்கும் என்பதால் தயாராக வாங்கி வைத்தேன்.

ரெடி
அந்த திருமண கவுனின் நீளம் 5 அடி 6.5 அங்குலமாகும். தற்போது ஆணையோ பெண்ணையோ திருமணம் செய்து கொள்ள நான் ரெடியாக இருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ஒரு நபர், "அந்த பெண் மிகவும் பாவம். கணவரை தானே தேடி திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதே" என்கிறார்.

6 திருமண உடைகள்
இன்னொருவரோ இது போல் பைத்தியகாரத்தனமான விஷயங்களை செய்வதன் மூலம் நீங்கள் எப்படி துணையை கண்டுபிடிப்பீர்கள் என எனக்கு புரியவில்லை" என்கிறார். இன்னும் சிலர் அந்த பெண்ணை விமர்சனம் செய்யாமல் நம்பிக்கையுடன் காத்திருங்கள், பாசிட்டிவ் எனர்ஜி இருந்தால்தான் திருமணம் கைக் கூடும் என அறிவுறுத்தியுள்ளார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications