Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீண்டநேரம் உதட்டு முத்தம்.. சிறையிலேயே இறந்துபோன காதலன்.. காதலி அதிரடி கைது.. அதிர வைக்கும் காரணம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள சிறையில் உதட்டு முத்தம் கொடுத்த காதலியால், காதலன் மயங்கி விழுந்து இறந்தார். இதுதொடர்பாக காதலியை போலீசார் கைது செய்துள்ள நிலையில் விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

Recommended Video

    246 ஆண்டுகளில் வெறும் 17 ஆண்டுகள் மட்டுமே போரின்றி இருந்த அமெரிக்கா; போரை வணிகமாக மாற்றிய கதை

    இந்தியா உள்பட உலக நாடுகளில் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இருப்பினும் சிறையில் கூட பலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

    குறிப்பாக போதைப்பொருள், செல்போன் பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவில் காதலனுக்கு போதைப்பொருள் வழங்கும் நோக்கில் காதலி முத்தம் கொடுத்தார். இதில் அந்த காதலன் இறந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

    11 ஆண்டு சிறை தண்டனை

    11 ஆண்டு சிறை தண்டனை

    அமெரிக்காவின் டென்னசி பகுதியை சேர்ந்தவர் ஜோசுவா ப்ரவுன். இவர் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் ஜோசுவா ப்ரவுனுக்கு 11 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவர் 2029ம் ஆண்டு வரை சிறையில் இருக்க வேண்டும். தற்போது அவர் டென்னசியில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    சிறையில் முத்தம்

    சிறையில் முத்தம்

    சிறையில் உள்ள ஜோசுவா ப்ரவுனை அவரது காதலியான ராச்சேல் டொலார்ட் (வயது 33) அடிக்கடி பார்க்க சென்று வந்துள்ளார். இந்நிலையில் அவர் வழக்கம்போல் காதலன் ராச்சேல் டொலார்ட்டை பார்க்க சென்றார். அப்போது சிறையில் இருவரும் நலம் விசாரித்து கொண்டனர். அதன்பிறகு இருவரும் நீண்டநேரம் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்தனர். இந்த வேளையில் திடீரென்று ஜோசுவா ப்ரவுன் சுருண்டு விழுந்தார். இதனால் ராச்சேல் டொலார்ட் அதிர்ச்சியடைந்தார்.

    காதலியிடம் விசாரணை

    காதலியிடம் விசாரணை

    இதையடுத்து சிறை போலீசார் வந்து பார்த்து ஜோசுவா ப்ரவுனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் இறந்தார். இது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் அவரது காதலி ராச்சேல் டொலார்ட்டை பிடித்து விசாரித்தனர். இந்த விசாரணையில் திடுக்கிட வைக்கும் சம்பவம் வெளியானது.

    போதைப்பொருள் கேட்ட காதலன்

    போதைப்பொருள் கேட்ட காதலன்

    அதாவது சிறையில் இருந்த ஜோசவா ப்ரவுனுக்கு போதைப்பழக்கம் உள்ளது. தற்போது சிறையில் உள்ளதால் அவருக்கு போதைப்பொருள் கிடைக்கவில்லை. இதனால் அவர் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். இதுபற்றி அவர் தன்னை பார்க்க வந்த காதலியான ராச்சல் டொலார்ட்டிடம் கடந்த முறை கூறியுள்ளார். இதையடுத்து சிறைக்குள் போதைப்பொருள் எடுத்து வந்து வழங்குவதாக அவர் உறுதி அளித்துள்ளார்.

    போதைப்பொருளால் மரணம்

    போதைப்பொருளால் மரணம்

    அதன்படி சிறைக்கு வந்த ராச்சேல் டொலார்ட் தனது வாயில் ‛அரை அவுன்ஸ்' அளவுக்கு ‛மெத்தம்பீட்டாமைன்' எனும் போதைப்பொருளை கடத்தி சென்றார். அதன்பிறகு வாயோடு வாய் வைத்து முத்தம் கொடுப்பது போல் போதைப்பொருளை காதலன் ஜோசவா ப்ரவுனுக்கு மாற்றினார். இந்த வேளையில் எதிர்பாராத விதமாக ஜோசவா ப்ரவுன் அதிகளவிலான போதைப்பொருளை உட்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் சரிந்து விழுந்து இறந்ததும் தெரியவந்தது.

     காதலி அதிரடி கைது

    காதலி அதிரடி கைது

    இதையடுத்து காதலியான ராச்சல் டொலார்ட் கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் கடத்தல், கொலை செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+