நினைச்சி கூட பார்க்க முடியாது.. சூப்பர் மார்க்கெட்டில் இளம் பெண் செய்த அசிங்கம்.. சிசிடிவியில் ஷாக்
வாஷிங்டன்: நினைத்து பார்க்க கூட முடியாது. அப்படி ஒரு அசிங்கமான செயலை செய்துள்ளார் 20 வயது இளம் பெண் ஒருவர். அதுவும் பலர் நடமாடும் ஒரு பிரபல வால்மார்ட் டிபார்மென்டல் ஸ்டோரில் வைத்து என்றால் நம்ப முடியாதுதான்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரிலுள்ளது வால்மார்ட் ஸ்டோர் கிளை. அங்கு சென்ற கிரேஸ் ப்ரவுன் என்ற 20 வயது இளம் பெண், உருளைக் கிழங்குகள் வைக்கப்பட்டிருந்த பேஸ்கட்டில் சிறுநீர் கழித்துள்ளார்.
இதை யதேர்ச்சையாக கடை அதிகாரி ஒருவர் பார்த்துவிட்டார். அதிர்ச்சியடைந்த அவர் உடனே போலீசுக்கு போன் போட்டு நடந்த இந்த அக்கப்போரை புட்டு புட்டு வைத்துவிட்டார். இது என்னடா புது வகை கேஸா இருக்குதே என பதறிய போலீசார் உடனே ஓடி வந்தனர்.

உருளைக் கிழங்குகள்
ஸ்டோரில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை போலீசார் போட்டுப் பார்த்தனர். அப்போது இளம் பெண், உருளைக் கிழங்குகள் வைக்கப்பட்ட இடத்திற்கு சென்றதும், அங்கே அந்த வேலையை முடித்துக் கொண்டு, எழுந்து நின்று அக்கம் பக்கம் பார்த்துவிட்டு, கிளம்பி செல்வதும் பதிவாகியிருந்தது.

சரணடைந்த பெண்
இதையடுத்து இந்த வீடியோ காட்சிகளை ஊடகங்களில் வெளியிட்டு அந்த இளம்பெண்ணை தேடி வந்தனர். குட்டு வெளிப்பட்டுப் போனதால் வேறு வழியின்றி, வெஸ்ட் மிப்பின் போரோ காவல் துறையில் சரணடைந்துள்ளார் கிரேஸ் ப்ரவுன். கடைக்குள் வந்ததும், சிறுநீர் கழித்துவிட்டு, அப்படியே வெளியேற மட்டுமே செய்துள்ளார் அந்த பெண் என்பதால், இவரின் நோக்கம் என்ன என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

திருட்டு
நம்மூரிலெல்லாம் இதுபோன்ற பெரிய கடைகளில் நைசாக பொருட்களை திருடி மாட்டிக்கொள்வோரை பார்க்க முடியும். பிரபல கடைகள் முழுக்க சிசிடிவி கேமராக்களாக மாற இதுவும் ஒரு முக்கிய காரணமாகிவிட்டது.

பொருள் வீண்
அமெரிக்கா முன்னேறிய நாடுதான். அதற்காக இப்படியுமா வித்தியாசமாக ஒரு செயலை செய்து மாட்டிக்கொள்வார்கள் அங்குள்ள சிட்டிசன்கள்? ஆச்சரியம் அளித்தாலும் இதுபோன்ற மனநிலை உள்ள மக்கள் உணவுப் பொருளை வீணாக்குகிறோமே என்ற குறைந்தபட்ச குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இருப்பது வேதனைதான்.
-
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications