உலகில் கொரோனா பாதிப்பு 91லட்சத்தை தாண்டியது.. மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள்.. விவரம்
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 91லட்சத்தை தாண்டி உள்ள நிலையில் இதில் சுமார் 4லட்சத்து 74 ஆயிரம் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 4வது இடத்தில் உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 91,85,229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 49,21,063 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உலகில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 4,74,237 ஆக உயர்ந்து உள்ளது. தினமும் கொரோனாவால் உயிரிழ்ப்போர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. 3,858 பேர் ஒரே நாளில் கொரோனாவால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளளனர்.

நேற்று உலகிலேயே கொரோனாவால் மிக அதிக அளவாக மெக்ஸிகோவில் 1044 பேர் பலியாகினர். பிரேசிலில் 748 பேரும், அமெரிக்காவில் 363 பேர் கொரோனாவால் பலியாகினர். இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 312 பேர் உயிரிழந்தனர்.
உலகிலேயே அமெரிக்காவில் தான் மிக அதிகபட்சமாக நேற்று 31496 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பிரேசிலில் 24358 பேருக்கும், இந்தியாவில் 13540 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு 2,388,153 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 122,610 பேர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசில நாட்டில் 11,11,348 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 51,407 பேர் உயிரிழந்துள்ளனர். 3வது இடத்தில் ரஷ்யா உள்ளது. இங்கு 592,280 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 8,206 பேர் உயிரிழந்துள்ளனர். 4வது இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு 440,450 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14,015 பேர் உயிரிழந்துள்ளனர்.
Recommended Video
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications