கொரோனா.. உலக அளவில் பலி எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது
வாஷிங்டன்: உலகளவில் கொரோனா தொற்று 3,35,40,007 கோடியாக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு பத்து லட்சத்தை கடந்து, 10,06,057 ஆக உள்ளது. உலகளவில் 2,48,67,725 பேர் இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 777 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொரோனா தொற்று இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. ஐரோப்பிய நாடுகளில் இரண்டாவது அலை உருவாகி, தொற்றின் பாதிப்பு இன்னும் அதிகரித்து வருகிறது. ரஷ்யா கண்டுபிடித்து இருக்கும் ஸ்புட்னிக் வி என்ற தடுப்பு மருந்து அந்த நாட்டில் 3000 பேருக்கு செலுத்தி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

உயிரிழப்பு
அமெரிக்காவில் இதுவரைக்கும் கொரோனவால் 73,59,507 பேர் பாதிக்கப்பட்டு, 209,759 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் அமெரிக்காவில் கொரோனாவுக்கு 306 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக நேற்று மட்டும் 35,314 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 46,06,009 பேர் இந்த நோயில் இருந்து குணமடைந்துள்ளனர். பத்து லட்சம் பேருக்கு 633 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரு நாள் இறப்பு
அமெரிக்காவில் அடுத்து இந்தியாவில்தான் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. மொத்தம் 61,43,019 பேருக்கு இதுவரைக்கும் தொற்று ஏற்பட்டு, நாடு முழுவதும் 96,351 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 777 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வாரங்களில் உயிரிழப்பு ஆயிரத்தை கடந்து வந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது. பத்து லட்சம் பேரில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில்தான் ஒரு நாள் தொற்று பாதிப்பு அதிமகாக உள்ளது. நேற்று மட்டும் 69,671 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இறப்பு
பிரேசிலில் 47,48,327 பேர் பாதிக்கப்பட்டு, 142,161 பேர் உயிரிழந்துள்ளனர், புதிதாக 16,018 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 385 பேர் உயிரிழந்துள்ளனர். பத்து லட்சம் பேருக்கு 688 பேர் உயிரிழந்துள்ளனர். 4,084,182 பேர் இந்த நோயில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.

தடுப்பு மருந்து
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்து மனிதர்களுக்கு செலுத்தி இருக்கும் ரஷ்யாவில் 11,59,573 பேர் பாதிக்கப்பட்டு, 20,385 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரு நாள் மட்டும் புதிதாக 8,135 பேருக்கு தொஎர்று ஏற்பட்டு, 61 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் 1,93,268 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பத்து லட்சம் பேரில் 140 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications