ஐநா அமைதி படை வீரர்கள் மீது தாக்குதல்! இஸ்ரேலுக்கு எதிராக திரும்பும் உலக நாடுகள்? நிலைமை ரொம்ப மோசம்
வாஷிங்டன்: லெபனானில் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அதில் ஐநா அமைதிப் படை வீரர்கள் இருவர் காயமடைந்தனர். இது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், உலகின் பல்வேறு நாடுகளும் இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது பதற்றத்தை மேலும் மேலும் அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கில் இப்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது. காசாவை தொடர்ந்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா படையினர் மீது இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இதற்கிடையே சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஐநா அமைதிப் படை வீரர்கள் இருவர் காயமடைந்தனர். ஐநா அமைதிப் படை வீரர்கள் மீது நடந்த இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
என்ன நடந்தது: யு.என்.ஐ.எஃப்.ஐ.எல் படை வீரர்கள் லெபனானில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தான் இதில் காயமடைந்துள்ளனர். இருவரும் இந்தோஷனியாவை சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமைதிப் படை வீரர் மீதான தாக்குதல் என்பது சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறுவதற்குச் சமம் என்று யு.என்.ஐ.எஃப்.ஐ.எல் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ஐநா பாதுகாப்பு அமைப்பில் 50 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் வீரர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹிஸ்புல்லா படையினர் மீது தாக்குதல் நடத்திய போது எதிர்பாராத விதமாக ஐநா அமைதிப் படை வீரர்கள் காயமடைந்ததாக இஸ்ரேல் தரப்பு கூறுகிறது. ஆனால், இதை மறுக்கும் அமைதிப் படை இஸ்ரேல் தங்கள் மீது வேண்டும் என்றே தாக்குதல் நடத்தியுள்ளதாக ஷாக் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளது. அமைதிப் படை வீரர்கள் மீது இஸ்ரேல் வேண்டும் என்றே தாக்குதல் நடத்தி இருந்தால் அது மிக மோசமான விளைவுகளை நிச்சயம் ஏற்படுத்தும். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்தோனேசியா: தங்களை நாட்டை சேர்ந்த இருவர் தீவிர சிகிச்சையில் இருப்பதை உறுதி செய்த இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மர்சுடி, இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்தத் தாக்குதலை இந்தோனேசியா கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த அவர், ஐ.நா. பாதுகாப்புப் படை மீதான தாக்குதல் என்பது சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என்றும் சாடினார். பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை இந்தோனேஷியா கொண்டு இருக்கும் நிலையில், லெபனானில் சுமார் 1200 இந்தோனேசிய வீரர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா: இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது கவலையளிப்பதாகத் தெரிவித்த அமெரிக்கா, "இஸ்ரேல் மக்களை அச்சுறுத்தும் ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதேநேரம் இந்த தாக்குதல்களில் ஐ.நா. அமைதிப் படைக்கு அச்சுறுத்தலாக இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
இத்தாலி: இந்த தாக்குதலை ஏற்கவே முடியாது என்று சொல்லிய இத்தாலி பாதுகாப்பு அமைச்சர் கைடோ குரோசெட்டோ, "இது விபத்து இல்லை.. ஒரு போர் குற்றம்.. சர்வதேச சட்டத்தை மீறியுள்ளனர். இஸ்ரேல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து விளக்கமளிக்க இஸ்ரேல் தூதருக்கும் நாங்கள் சம்மன் அனுப்பியுள்ளோம்" என்றார்.
காசா, வெஸ்ட் பேங்க் எனப்படும் மேற்கு கரை மற்றும் லெபனான் மக்கள் மீதான படுகொலைகளைத் தொடர்ந்து இப்போது ஐநா படைகள் மீதே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் துருக்கி கடுமையான வார்த்தைகளில் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் போர் குற்றங்களை நிச்சயம் தண்டிக்க வேண்டும் என்றும் சர்வதேச நாடுகள் இதை உறுதி செய்ய வேண்டும் என்றும் துருக்கி கூறியுள்ளது. மேலும், ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், ஸ்பெயின், அயர்லாந்து, கனடா ஆகிய நாடுகளும் இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
முறிந்த பேச்சுவார்த்தை.. முளைக்கும் புது நம்பிக்கை! ஒரே ரூமில் அமர்ந்து பேச அமெரிக்கா- ஈரான் சம்மதம் -
ஈரான் போர்.. இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட சீனா.. டிரம்ப் வைத்த செக்! -
ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகையை தொடங்கிவிட்டோம்.. நெருங்கினால் பேரழிவு! டிரம்ப் வார்னிங் -
10 நாள் தான் டைம்.. உலகமே ஸ்தம்பிக்கப்போகுது.. வார்னிங் கொடுத்த போராசிரியர்! -
நேக்கா 2 கப்பலை வெளியேற்றிய ஈரான்.. ஹார்முஸ்-ல் தவிக்கும் 800 கப்பல்.. இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் அச்சம்! -
அமெரிக்காவின் 'ஹார்முஸ்' முற்றுகையில் இங்கிலாந்து பங்கேற்காது.. ட்ரம்ப்புக்கு 'நோ' சொன்ன பிரிட்டன் -
வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது.. கச்சா எண்ணெய் விலை தடாலடி உயர்வு.. மீண்டும் 120 டாலரா? -
வெளிச்சம் தெரிகிறது.. இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை.. மீண்டும் Big Boss ஆக மாறும் பாகிஸ்தான்! -
டிரம்ப்: அதிபர் பதவியில் இருந்து துரத்தியடிக்கப்படுவாரா? அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடக்கும் பரபர வாக்கெடுப்பு -
ஆப்பு வச்சுடுச்சே அமெரிக்கா..ஈரானை வட்டமிட்ட ஸ்டீல் அரக்கன்கள்! படபடவென பறந்த எண்ணெய் ரேட்! சிக்கல்? -
"5 vs 20.." விட்டு கொடுக்காத ஈரான்.. விடாப்பிடியாக இழுக்கும் அமெரிக்கா.. அடுத்து என்ன நடக்கும்? -
ஈரான் பிடிவாதம்.. விடாமல் காய் நகர்த்திய டிரம்ப்.. உலகையே உலுக்கிய அந்த 20 மணி நேரம்.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications