வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதை பாருங்க.. இது தான் நம்ம சூரியனின் குளோஸ் அப் படங்கள்.. எப்படி இருக்கு பாருங்களேன்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகின் சக்தி வாய்ந்த டெலஸ்கோப்பான டேனியல் கே.இன்யூயே சோலார் டெலஸ்கோப் சூரியனை மிக அருகில் எடுத்த புகைப்படம் இப்போது வெளியிடப்பட்டு உள்ளது.

பூமி உள்ளிட்ட கிரகங்கள் சூரியனை சுற்றி வருவது நாம் அனைவருக்கும் தெரியும். பூமியில் உயிரினங்கள் தோன்றவும் வாழவும் சூரியனில் இருந்து வரும் சூரிய ஒளி ரொம்பவே முக்கியமானதாகும்.

இந்த அதி சக்தி வாய்ந்த சூரியன் குறித்த கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ள உலகெங்கும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

ஓஹோ.. வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் 8 சிறுத்தைகள்.. 1000 உள்ளூர் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி ஓஹோ.. வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் 8 சிறுத்தைகள்.. 1000 உள்ளூர் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி

 டெலஸ்கோப்

டெலஸ்கோப்

பூமியில் இருந்து பல கோடி மைல்களுக்கு அப்பால் இருக்கும் சூரியனை இங்கிருந்தபடியே ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். சூரியன் மேற்புறத்தில் என்ன உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆய்வுக்கு டெலஸ்கோப்கள் உள்ளன. அப்படி மிகவும் சக்திவாய்ந்த டெலஸ்கோப்களில் ஒன்றாகக் கருதப்படும் டேனியல் கே.இன்யூயே, இப்போது சூரியனை மிக அருகில் எடுத்த புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது.

 சூரியன் க்ளோஸ்-அப்

சூரியன் க்ளோஸ்-அப்

புதிதாக வெளியிடப்பட்ட இந்தப் படம் சூரியனின் வளிமண்டலத்திற்குச் சற்று மேலே மொத்தம் 82,000 கிலோமீட்டர் பகுதியை உள்ளடக்கியது ஆகும். நமது பூமியைச் சுற்றி இருக்கும் பகுதியை எப்படி வளிமண்டலம் என்று அழைக்கிறோமா அப்படித்தான் சூரியனைச் சுற்றி இருக்கும் பகுதி குரோமோஸ்பியர் என்றும் கொரோனா என்றும் அழைக்கப்படும்.

ஆய்வு

ஆய்வு

சூரியனில் இருந்து வரும் வெளிச்சம் குரோமோஸ்பியரில் இருந்து வெளிப்படும் ஒளியை மிக அதிகமாக இருக்கும். இதனால் குரோமோஸ்பியரை பார்ப்பதே கடினம் என்ற சூழலில் இந்த டெலஸ்கோப் அதைப் படம் பிடித்து உள்ளது. DKIST என்ற இந்த டெலஸ்கோப் எடுத்துள்ள படம், நமது சூரியனில் குறித்தும் அதன் பல்வேறு அம்சங்கள் குறித்தும் ஆய்வாளர்கள் தெரிந்து கொள்ள உதவுகிறது. சூரியன் குறித்த ஆய்வில் இது மிகவும் முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

 முன்கூட்டியே அறிய உதவும்

முன்கூட்டியே அறிய உதவும்

இது குறித்து தேசிய அறிவியல் அறக்கட்டளையின் இயக்குநர் சேதுராமன் பஞ்சநாதன் கூறுகையில், "இந்த டெலஸ்கோப் மிகவும் சக்திவாய்ந்த சூரிய டெலஸ்கோப் ஆகும். அதில் இருந்து நமக்குக் கிடைக்கும் தகவல்கள் பூமி குறித்தும் சூரியப் புயல்கள் குறித்தும் முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவும்" என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

வானிலை

வானிலை

ஆராய்ச்சியாளர்கள் இந்த படத்தை வைத்துக் கொண்டு விண்வெளி வானிலை, சூரிய வெப்பம் மற்றும் பூமியைப் பாதிக்கும் சூரிய கதிர்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். பூமி உட்பட பல்வேறு கிரகங்களுக்குச் சூரியன் முக்கியம் என்ற நிலையில், டேனியல் கே.இன்யூயே சோலார் டெலஸ்கோப் மூலம் சூரியன் குறித்த ஆய்வுப் பணிகள் சூடுபிடிக்கும்.

English summary
Daniel K. Inouye Solar Telescope's nearest picture of Sun: DKIST is the world’s most powerful solar telescope.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X