உயர்ந்து கொண்டே போகும் கொரோனா.. உலகளவில் எத்தனை பேருக்கு பாதிப்பு.. அதிக கேஸ்கள் உள்ள நாடு எது?
வாஷிங்டன்: உலகெங்கும் கொரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல உயரும் நிலையில், ஒரே நாளில் 5.57 லட்சம பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த 2019 இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் அது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது.
இப்படி தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால், இதை சமாளிக்க உலகின் பல்வேறு நாடுகளும் திணறி வருகிறது. வளர்ந்த நாடுகள் தொடங்கி பின் தங்கிய நாடுகள் வரை எதுவும் இதற்கு தப்பவில்லை.

கொரோனா பாதிப்பு
இப்போது ஓமிக்ரான் கொரோனா, குறிப்பாக BA4 மற்றும் BA வகை கொரோனா தான் உலகெங்கும் பரவி வருகிறது. இந்த வகை கொரோனா வைரஸ்கள் பல நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 5.57 லட்சம் பேர் கொரோனாவால் லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக இதுவரை வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 537,146,284 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல ஒரே நாளில் 468,613 பேர் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

எந்த நாடுகள்
உலகளவில் தற்போது அதிக தினசரி கேஸ்களை கொண்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலில் உள்ளது. அங்கு கடந்த சில நாட்களாகவே வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. அங்கு ஒரே நாளில் 86 ஆயிரம் பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தைவானில் 80 ஆயிரம் பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு மெல்ல உயரத் தொடங்கி உள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்
வளர்ந்த வல்லரசு நாடுகளில் வேக்சின் பணிகள் கிட்டதட்ட முடியும் நிலையில் உள்ளது. அதேபோல வளரும் நாடுகள் மற்றும் பின்தங்கிய நாடுகளிலும் வேக்சின் பணிகள் வேகமாகவே நடைபெற்று வருகிறது. இதனால் கொரோனா உயிரிழப்புகள் முழுமையாகக் கட்டுக்குள் வந்துவிட்டது. உலகளவில் நேற்று ஒரே நாளில் 1,596 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக பிரேசில் நாட்டில் 301 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல அமெரிக்காவில் 271 பேரும் இத்தாலியில் 80 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், ரஷ்யா (79) நாடுகளில் உயிரிழப்பு பதிவாகி உள்ளது.
Recommended Video

என்ன காரணம்
சில குறிப்பிட்ட நாடுகளில் வைரஸ் பாதிப்பு மெல்ல வேகமெடுக்க தொடங்கி உள்ளது. இதற்கு உருமாறிய ஓமிக்ரான் BA5 வகை முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இது முந்தைய கொரோனா வகைகளைக் காட்டிலும் வேகமாகப் பரவுவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அதேநேரம் இது பெரும்பாலும் லேசான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்துவம் என்பது ஒரு நல்ல விஷயமாகும்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications