"நாங்கள் ஒரு இன்ச் கூட.. வெளிநாட்டு நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை.." ஜி ஜின்பிங் பரபர! என்ன மேட்டர்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், வெளிநாட்டு நிலங்களை ஆக்கிரமிப்பது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

சீனா அதிபர் ஜி ஜின்பிங் இப்போது அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். கடந்த 6 ஆண்டுகளில் சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்கா செல்வது இதுவே முதல்முறையாகும். இதில் அவர் பல முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்.

Xi Jinping says China Has Not Occupied A Single Inch Of Foreign Land

இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதற்கிடையே சான் பிரான்ஸிகோவில் செய்தியாளர்களிடம் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

சீன அதிபர்: அதாவது தனது நாடு எந்தவொரு மோதல் அல்லது போரைத் தூண்டவில்லை எனக் குறிப்பிட்ட சீன அதிபர் ஜி ஜின்பிங், சீனா இதுவரை ஒரு அங்குல வெளிநாட்டு நிலத்தைக் கூட ஆக்கிரமித்தது இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சுமார் ஓராண்டிற்கு பிறகு அமெரிக்க அதிபர் பைடனை சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்தார். அப்போது போதைப் பொருளைக் கட்டுப்படுத்துவது தொடங்கி பல விவகாரங்களில் இரு நாட்டுத் தலைவர்களும் இணைந்து செயல்பட முடிவு செய்தனர். அப்போது ​​சின்ஜியாங், திபெத் மற்றும் ஹாங்காங் உட்பட சீனாவின் மனித உரிமை மீறல்கள் குறித்து பைடன் கவலை தெரிவித்தார். அதைத் தொடர்ந்து ஜி ஜின்பிங் ஆசிய- பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இருந்த நிலையில், அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

அல்டிமேட் போதை தரும் "சைனா கேர்ள்.." ஹெராயினை விட 50 மடங்கு பவர்புல்.. கை கோர்க்கும் சீனா, அமெரிக்கா

கவலை: அமெரிக்க-சீனா வர்த்தக கவுன்சில் மற்றும் அமெரிக்க-சீனா உறவுகளுக்கான தேசியக் குழு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் சீன அதிபர் கூறும் கருத்துகள் முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த சில காலமாகவே சீனாவில் முதலீடு செய்வதும் பிஸ்னஸ் செய்வதும் தொடர்ந்து கடினமான ஒன்றாக மாறி வருவதாக அமெரிக்க நிறுவனங்கள் குற்றஞ்சாட்டி வருகிறது. சீனாவின் புது புது விதிகளே இதற்குக் காரணம். இந்த விவகாரம் குறித்து சீன அதிபர் விளக்குவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

விளக்கம்:
சீன அதிபர் ஜி ஜின்பிங் மேலும் கூறுகையில், "கடந்த 70 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கட்சி சீனாவை வழிநடத்துகிறது. இந்த காலகட்டத்தில் நாங்கள் யாருடனும் போருக்குச் செல்லவில்லை. யாரையும் வம்பு இழுக்கவில்லை. வெளிநாட்டு நிலம் ஒரு இன்சை கூட ஆக்கிரமித்தது இல்லை" என்றார். ஜப்பான், இந்தியா, தைவான் என சுற்றிலும் சீனா ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், சீன அதிபர் அதற்கு நேர்மாறான ஒரு தகவலை தெரிவித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக இந்தியாவின் பல பகுதிகளைச் சீனா தனக்குச் சொந்தமான பகுதிகள் எனத் தொடர்ந்து கூறி வருகிறது. இது தொடர்பாக எல்லையில் அவ்வப்போது இரு தரப்பிற்கும் இடையே மோதலும் ஏற்பட்டு வருகிறது. கடந்த 2020இல் கொரோனா காலத்தில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு ராணுவத்திற்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் உயிர் தேசங்களும் கூட ஏற்பட்டது. இந்தியப் பகுதிகளில் சீனா உள்ளே வந்ததே இந்த மோதலுக்குக் காரணமாகும்.

இந்த மோதலை தொடர்ந்து இரு தரப்பும் எல்லையில் ராணுவத்தைக் குவித்தன. இதனால் இரு தரப்பிற்கும் இடையே போர் சூழும் அபாயமும் கூட ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த மோதல் நடந்து சில ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இப்போது தான் நிலைமை மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. நிலைமை இப்படி இருக்க ஜிஜின்பிங் அதற்கு நேர்மாறான ஒரு தகவலைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+