அல்டிமேட் போதை தரும் "சைனா கேர்ள்.." ஹெராயினை விட 50 மடங்கு பவர்புல்.. கை கோர்க்கும் சீனா, அமெரிக்கா
வாஷிங்டன்: ஹெராயினை விடப் பல மடங்கு ஆபத்தானதாக உள்ள ஃபெண்டானில் ஒழிக்க அமெரிக்காவும் சீனாவும் கை கோர்த்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்கா சென்றிருந்த சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்க அதிபர் பைடனை சந்தித்தார். அமெரிக்கா சீனா இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதில் இரு தலைவர்களும் பல முக்கிய விஷயங்கள் குறித்தும் ஆலோசித்துள்ளனர்.

இதில் இரு தலைவர்களும் பல முக்கிய முடிவுகளையும் கூட எடுத்தனர். இரு தரப்பு உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையைத் தொடங்குவது தொடர்பாக முடிவெடுத்தனர். மேலும், ஏஐ, தைவான் விவகாரம் ஆகியவை குறிக்கும் பேச்சுவார்த்தை நடத்த இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
அமெரிக்கா: மேலும், இதில் மற்றொரு முக்கிய விஷயமும் விவாதிக்கப்பட்டது. அதாவது ஃபெண்டானில் தொடர்புடையவை மரணங்கள் அதிகரிக்கும் நிலையில், இதில் தொடர்புடைய சீன நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சீன அதிபர் ஜி ஜின்பிங்கே ஒப்புக் கொண்டார். இதுவும் இந்த ஆலோசனையில் முக்கியமான முடிவாகப் பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய பைடன், "போதைப் பொருள் தயாரிக்கும் பொருட்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் சீனா ஒப்புக் கொண்டது. இதன் மூலம் அமெரிக்கர்களின் உயிரைப் பாதுகாக்க முடியும்" என்றார்.
தீவிர நடவடிக்கை: இந்த புதிய ஒப்பந்தத்தின் கீழ் இந்த ஓபியாய்டு போதைப் பொருளைத் தயாரிக்கத் தேவையான மூலப் பொருட்கள் மற்றும் இந்த ஓபியாய்டை அப்படியே ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் மீது சீனாவில் நடவடிக்கை எடுக்க முடியும். சீனா இப்போது உறுதியளித்தாலும் கூட அவர்கள் முழுமையாக நம்ப முடியாது என்றும் அதை செக் செய்ய வேண்டும் என்றும் அமெரிக்க டாப் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரொம்ப ஆபத்து: இந்த ஒப்பந்தம் முக்கியமான ஃபெண்டானில் என்ற வகை ஓபியாய்டை கட்டுப்படுத்தவே உருவாக்கப்பட்டதாகும். மருத்துவ ரீதியாகப் பயன்படுத்தப்படும் ஃபெண்டானில் மார்பின் வலி நிவாரணியை விட 100 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது. மேலும், ஹெராயினை விட 50 மடங்கு வலிமையானது. இதை வலி நிவாரணியாகப் பயன்படுத்த அமெரிக்க அரசு கடந்த 1998இல் அனுமதி அளித்தது.
மருத்துவர் பரிந்துரை அடிப்படையில் இதை எடுத்துக் கொள்ளும் போது பிரச்சினை ஏற்படாது. அதேநேரம் இதை முறைகேடாகச் சிலர் விற்கிறார்கள். அதைப் போதைக்காகச் சட்டவிரோதமாக வாங்கி பயன்படுத்தும் போது உயிரிழப்புகள் ஏற்படும். இது சைனா கேர்ள் என்றும் சைனா டவுன் என்றும் அழைக்கப்படுமாம். பொதுவாக, இவை அமெரிக்காவுக்குள் தயாரிக்கப்படுவதில்லை. பெரும்பாலும் அவை அமெரிக்காவுக்கு வெளியே உள்ள ஆய்வகங்களில் தயாரிக்கப்பட்டு மெக்சிகோ எல்லையில் கடத்தப்படுகிறது.
அறிகுறிகள்: மருத்துவர் பரிந்துரைக்கும் போது இது மருந்தாக ஒரு ஊசி, அல்லது மாத்திரைகள் வழியாக நோயாளிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அதேநேரம் போதைக்காக எடுத்துக் கொள்வோருக்கு இந்த ஃபெண்டானில் ஒரு திரவமாகவும் பொடியாகவும் கிடைக்கிறது. இதை மூக்கின் வழியாக ஸ்ப்ரே செய்தும். கண் சொட்டு மருந்து போலக் கண்களில் போடும் போதையாவார்கள். மேலும், இவை மாத்திரைகளாகவும் விற்கப்படுகிறது.
இந்த ஃபெண்டானில் மிகவும் ஆபத்தானது என்று குறிப்பிட்ட அமெரிக்க அரசு, இதன் அளவு சற்று கூடினாலும் மூச்சுத் திணறல், மூச்சு விடுவதில் சிரமம், உடல் நிறம் மாறுவது, குளிர் காய்ச்சல், தோல் நிறம் மாறுவது ஆகியவை ஏற்படும். பலருக்கும் உயிரிழப்பும் கூட ஏற்படும். ஹெராயினை விடப் பல மடங்கு ஆபத்தாக இருக்கும் இது முழுமையாக ஒழிப்பதிலேயே இப்போது அமெரிக்காவும் சீனாவும் கை கோர்த்துள்ளது
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications