Year ender: விண்வெளியில் மாத கணக்கில் சிக்கியுள்ள சுனிதா.. அழைத்து வர ஆர்வம் காட்டாத நாசா! ஏன்?
வாஷிங்டன்: சாதாரண ஒரு வாரப் பயணமாக விண்வெளிக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ் இப்போது கிட்டதட்ட ஆறு மாதங்களுக்கு மேலாக அங்கேயே சிக்கியிருக்கிறார்.. இவ்வளவு காலம் ஆகியும் அவரை பூமிக்கு அழைத்து வர ஏன் நாசா அவசரம் காட்டவில்லை என்ற கேள்வி பலருக்கும் எழும். இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
அமெரிக்க விண்வெளி துறையில் மிக முக்கிய வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்.. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் ஏற்கனவே 2 முறை அமெரிக்கா சார்பில் விண்வெளிக்குச் சென்று திரும்பியிருக்கிறார்.

அவர் இதற்கு முன்னதாகவே 2006 மற்றும் 2012 என இரண்டு முறை விண்வெளிக்குச் சென்று திரும்பியிருக்கிறார். இந்தச் சூழலில் தான் கடந்த ஜூன் மாதம் அவர் விண்வெளிக்குச் செல்ல தயாரானார்.
சுனிதா வில்லியம்ஸ்:
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இரண்டு விண்வெளி வீரர்கள் கடந்த ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குச் சென்றனர்.. அவர்கள் ஒரு வாரம் மட்டுமே அங்கிருந்து ஆய்வு செய்ய முதலில் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், அவர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்ற பிறகு எதுவுமே திட்டமிட்டபடி நடக்கவில்லை.
முன்பெல்லாம் நாசா தனது சொந்த விண்கலம் மூலமாகவே வீரர்களை விண்வெளிக்குக் கூட்டிச் சென்று திரும்ப அழைத்து வரும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே இதற்குத் தனியார் நிறுவனங்களின் விண்கலனை நாசா பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் போயிங் நிறுவனங்களின் விண்கலங்களையே நாசா அதிகம் பயன்படுத்தும்.
உடல் மெலிந்த சுனிதா..நாசா போட்ட வீடியோ..? வீட்டுக்கு வருவாரா வில்லியம்ஸ்.. ?
என்ன பிரச்சினை:
சுனிதா வில்லியம்ஸும் புட்ச் வில்மோரும் இந்த முறை போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலமாகவே விண்வெளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இருப்பினும், அந்த விண்கலனில் சில சிக்கல்கள் ஏற்பட்டன. ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட உந்துதல் செயலிழப்புகள் மற்றும் ஹீலியம் கசிவே இந்த பிரச்சினைக்குக் காரணமாகும்.
இந்த பிரச்சினைகளுடன் ஸ்டார்லைனர் விண்கலனில் விண்வெளி வீரர்களை அழைத்து வந்தால் அது அவர்கள் உயிருக்கே ஆபத்து என்பதால் விண்வெளி வீரர்கள் அங்கேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. வீரர்கள் இல்லாமல் ஸ்டார்லைனர் விண்கலன் மட்டும் கடந்த செப். மாதம் பூமிக்குத் திரும்பியது.
ஆர்வம் காட்டாதது ஏன்:
அதேநேரம் சுனிதா வில்லியம்ஸும் புட்ச் வில்மோரும் எப்போது பூமிக்குத் திரும்புவார்கள் என்பதற்குப் பதில் கிடைக்காமலேயே இருந்தது. முதலில் ஓரிரு மாதங்களில் அவர்கள் பூமிக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அவர்கள் மாதக்கணக்கில் அங்கேயே தங்கும் சூழல் ஏற்பட்டது. தற்போதைய சூழலில் அவர்கள் அடுத்தாண்டு பிப். வரை அங்கேயே தங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே நம்மில் பலருக்கும் ஒரு கேள்வி வரும்.. நாசாவுக்கு பணத்திற்குப் பற்றாக்குறை இல்லை.. அப்படியிருக்கும் போது வேறு ஒரு விண்கலனை அனுப்பி அவர்களை அழைத்து வரலாமே என்ற கேள்வி உங்களுக்கு வரும்.. ஏன் அப்படிச் செய்யாமல் சுனிதா வில்லியம்ஸை விண்வெளியில் சிக்கவைத்து இருக்கிறார்கள் என்ற சந்தேகம் வரலாம்.

ஆபத்து இல்லை:
இதற்கு அனைவருக்கும் புரியும்படியான விடை என்னவென்றால் அவர்கள் விண்வெளியில் சிக்கிக் கொண்டு இல்லை.. அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் இல்லை.. அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அது 5 பெட்ரூம் வீட்டை போல விசாலமானது. அதில் பாதுகாப்பாகவே சுனிதா வில்லியம்ஸ் இருக்கிறார்.
பொதுவாகச் சர்வதேச விண்வெளி மையத்திற்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வீரர்கள் அனுப்பப்படுவார்கள். அதன்படி அடுத்த பிப். மாதம் இங்கிருந்து இரண்டு வீரர்கள் ஸ்பேஸ்எக்ஸின் க்ரூ டிராகன் விண்கலன் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள். விண்வெளி நிலையத்தில் வழக்காகத் திரும்ப வேண்டிய இரண்டு வீரர்களுடன் சுனிதா மற்றும் வில்மோரும் அப்போது திரும்புவார்கள்.
அதாவது அவர்கள் விண்வெளியில் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாலேயே அவர்களை அழைத்து வருவதில் நாசா அவசரம் காட்டவில்லை.. இதற்கு இடைப்பட்ட நேரத்தில் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் விண்வெளியில் இருந்தே அமெரிக்க அதிபர் தேர்தலிலும் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு

Click it and Unblock the Notifications