Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஜஸ்ட் 3 வார்த்தை தான்".. ஒபாமா இறக்கிய பிரம்மாஸ்திரம்.. கமலா ஹாரிஸ் ஹேப்பி.. நடுங்கிப்போன டிரம்ப்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார். இந்நிலையில் தான் தேர்தலில் கமலா ஹாரிஸை வெல்ல வைக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ‛3 வார்த்தைகள்’ கொண்ட பிரமாஸ்திரத்தை இறக்கி உள்ளார். இந்த பிரமாஸ்திரம் தான் பராக் ஒபாமாவை அமெரிக்க அதிபர் தேர்தலில் 2 முறை வெல்ல வைத்த நிலையில் கமலா ஹாரிஸ் மகிழ்ச்சியில் உள்ளார். மாறாக டொனால்ட் டிரம்ப் அதிர்ச்சியடைந்துள்ளார்.

அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் என்பது 4 ஆண்டுகளாகும். இதனால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது நடந்து வருகிறது. தற்போது அமெரிக்க அதிபராக ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் உள்ளார். இவரது பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவுக்கு வர உள்ளார்.

us presidential election 2024 kamala harris barack obama 2024

இந்நிலையில் தான் வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மீண்டும் போட்டியிட ஜோ பைடன் ஆர்வமாக இருந்தார். ஆனால் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதால் அவர் போட்டியில் இருந்து விலகி உள்ளார். இதையடுத்து துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார்.

ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் பெயர் இன்று அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக ஜனநாயக கட்சியின் 2 நாள் தேசிய மாநாடு அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்து வருகிறது. இன்று 2வது நாள் மாநாடு முடியும்போது கமலா ஹாரிஸ் பெயர் அதிபர் வேட்பாளராகவும், துணை அதிபர் வேட்பாளராக டிம் வால்ஸ் பெயரும் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெல்ல வேண்டும் என்பதற்காக முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பிரமாஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார்.

பராக் ஒபாமா கடந்த 2008 முதல் 2016 வரை ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க அதிபராக இருந்தார். இதன்மூலம் அமெரிக்காவின் முதல் கருப்பு இன அதிபர் என்ற பெருமையை அவர் பெற்றார். அதற்கு பிறகு கடந்த தேர்தலில் ஜோ டைபடன் வென்ற நிலையில் இப்போது கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். கமலா ஹாரிஸின் தந்தை டொனால்ட் ஹாரிஸ் ஜமைக்காவை சேர்ந்தவர். அவரது தாய் சியாமளா கோபாலம் தமிழகத்தை சேர்ந்தவர்.

இதன்மூலம் கமலா ஹாரிஸ் அதிபராக தேர்வு செய்யப்படும் பட்சத்தில் அவர் 3 சாதனைகளை படைக்க உள்ளார். ஒன்று அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற சாதனையை கமலா ஹாரிஸ் படைப்பார். இரண்டாவது சாதனை என்னவென்றால் அமெரிக்காவின் முதல் கருப்பின பெண் அதிபர் என்பதும், 3வது சாதனையாக தெற்கு ஆசியா வம்சாவளியின் முதல் அதிபர் என்ற பெருமையையும் பெறுவார்.

தற்போதைய கருத்து கணிப்புகளில் டொனால்ட் டிரம்ப்பை விட கமலா ஹாரிஸ் தான் முன்னிலையில் உள்ளார். இதனால் அவர் வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு வலு சேர்க்கும் வகையில் தான் பராக் ஒபாமா தனது தேர்தல் வியூகத்தை களமிறக்கி உள்ளார். அதாவது அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா கடந்த 2008 ல் முதல் முறையாக போட்டியிட்டார். அப்போது இனவெறி சார்ந்து அவருக்கு எதிராக குடியரசு கட்சியினர் பிரசாரம் செய்தனர்.

இந்த வேளையில், ‛Yes We Can' என்ற முழக்கத்தில் பராக் ஒபாமா தனது பிரசாரத்தை தொடங்கினார். ‛ஆம், நம்மால் முடியும்' என்ற வகையில் அவரது பிரசாரம் இருந்தது. இந்த பிரசாரம் பெரிய அளவில் பராக் ஒபாமாவுக்கு கைக்கொடுத்தது. இதனால் அவர் வெற்றி பெற்று அசத்தினார். அதன்பிறகு 2012 தேர்தலிலும் வெற்றி பெற்றார். கடந்த முறை 2020 தேர்தலிலும் இந்த முழக்கத்தை கையில் எடுத்து தனது நண்பரும், தன்னிடம் துணை அதிபராக பணியாற்றி ஜோ பைடனை ஒபாமா வெல்ல வைத்தார்.

அந்த வகையில் இந்த முறையில் ‛Yes We Can' என்பதை மாற்றி ‛Yes She Can' என்ற முழகத்தை பராக் ஒபாமா தொடங்கி உள்ளார். சிகாகோவில் இன்று நடந்த ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் பராக் ஒபாமா பேசியபோது, ‛‛‛Yes She Can'.. அவளால் (கமலா ஹாரிஸ்) முடியும். நாம் கடந்த சில வாரங்களாக நமக்கான முழு எனர்ஜியையும் பயன்படுத்தி தேர்தல் பணி செய்து வருகிறோம். கமலா ஹாரிஸ் உண்மையிலேயே சிறந்த நிர்வாகி. அவர் அமெரிக்க அதிபராக வெற்றி பெறுவார். டொனால்ட் டிரம்ப், கமலா ஹாரிஸை பார்த்து தோல்வி பயத்தில் புலம்பி வருகிறார்'' என கூறினார்.

கமலா ஹாரிஸ் பெண் என்பதால் Yes We Can என்ற பிரசார முழக்கத்தை பராக் ஒபாமா, ‛Yes She Can' என மாற்றி உள்ளார். இது பெண்களாலும் முடியும் என்பதை குறிக்கும் வகையில் உள்ளது. இதனால் நிச்சயம் பராக் ஒபாமாவின் இந்த பிரசார முழக்கம் கைக்கொடுக்கும் என்று அனைவரும் நம்புகின்றனர். மேலும் வரும் நாட்களில் ‛Yes She Can' என்ற முழக்கம் கமலா ஹாரிசின் பிரசாரத்திலும், சமூக வலைதளங்களிலும் அதிகம் எதிரொலிக்கும். இதனை டொனால்ட் டிரம்ப் தரப்பு எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+