எங்களின் உழைப்பை எடுத்துக்கொண்டு.. இப்போது தடுக்கிறீர்களா? ஜே.டி.வேன்ஸிடம் இந்திய பெண் கேள்வி
வாஷிங்டன்: "அமெரிக்காவில் அதிகமாக வெளிநாட்டினர் குடியேறுகிறார்கள் என்று பேசும் நீங்கள், எண்ணிக்கை அதிகமாகிவிட்டது என்பதை எப்போது முடிவு செய்தீர்கள்? எங்களின் இளமையயையும், உழைப்பையும் அமெரிக்காவில் செலவழித்த பின்னரா?" என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வேன்ஸிடம் இந்திய பெண் ஒருவர் கேள்வி எழுப்பியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
மிசிசிப்பி பல்கலைக்கழகத்தில் 'டார்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ' என்கிற தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் வேன்ஸ் பங்கேற்று பேசியிருந்தார். அமெரிக்காவுக்கு சட்டப்பூர்வமாக வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றும் வேன்ஸ் தனது பேச்சில் குறிப்பிட்டிருந்தார். தனது உரையை முடித்த வேன்ஸ் பார்வையாளர்களிடமிருந்து கேள்விகளை வரவேற்றார்.

நாங்கள் கடன்பட்டிருக்கவில்லை
அப்போது காஷ்மீரி பஷ்மினா சால்வையை அணிந்த இந்திய பெண் ஒருவர், வேன்ஸிடம் கேள்வியை எழுப்பினார். அதாவது, "அமெரிக்காவில் அதிகமான குடியேறிகளை தவிர்க்க வேண்டும் என்று பேசிய நீங்கள், அந்த எண்ணிக்கையை எப்போது முடிவு செய்தீர்கள்? எங்கள் இளமையையும், செல்வத்தையும் இந்நாட்டுக்காக செலவழிக்க வைத்து, எங்களுக்குள் அமெரிக்கா என்கிற கனவை விதைத்தீர்கள். நாங்கள் உங்களுக்கு கடன் பட்டிருக்கவில்லை. கடினமாக உழைத்து நீங்கள் கேட்ட தொகைகை கொடுத்து இங்கே வந்திருக்கிறோம்.
இந்தியர்கள் தகுதியற்றவர்களா?
அப்படி இருக்கையில், துணை அதிபராக இருந்துக்கொண்டு, எங்கள் நாட்டில் அதிகமானவர்கள் இருக்கிறார்கள், எனவே எக்ஸ்டரா உள்ளவர்களை வெளியே போகவேண்டும் என்று எப்படி உத்தரவிட முடியும்? நீங்கள்தான் எங்களுக்கு இந்த பாதையை காட்டினீர்கள். இப்போது அதை அடைத்துவிட்டு, நாங்கள் இங்கு இருக்க தகுதியற்றவர்கள் என்று எப்படி சொல்ல முடியும்?" என்று கேள்வியை எழுப்பியிருக்கிறார். இந்த கேள்விக்கு அரங்கத்தில் இருந்தவர்கள் கை தட்டி வரவேற்று அளித்த நிலையில், நான் இங்கு சண்டையிட வரவில்லை என்றும் அப்பெண் விளக்கமளித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த வேன்ஸ், "நானும் இங்கு சண்டையிட வரவில்லை. அமெரிக்காவில் ஒருவர், 10 பேர், 100 பேர் வந்து வளர்ச்சிக்கு பங்களிக்க விரும்பினால், எதிர்காலததில் இந்த எண்ணிக்கை ஒரு மில்லியன், 10 மில்லியன், 100 மில்லியன் என உயர்த்த நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோமா? இல்லை. இது அப்படி கிடையாது" என்று மழுப்பலாக பதிலளித்திருக்கிறார்.
இந்தியர்களுக்கு எதிரான நடவடிக்கை
அமெரிக்காவுக்கு வேறு எந்த நாட்டை சேர்ந்தவர்களை விடவும், இந்தியர்கள்தான் அதிக அளவில் குடியேறுகிறார்கள். ஆனால் சமீபத்தில் அமெரிக்கா தனது H-1b விசா நடைமுறையை கடுமையாக்கியது. இதனால் முன்பு போல் அமெரிக்காவுக்குள் இந்தியர்கள் நுழைவது தடுக்கப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது ஏற்கெனவே அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கும் நெருக்கடி கொடுக்கும் வேலையை அமெரிக்கா தீவிரப்படுத்தியிருக்கிறது. அதாவது, H-1b விசாவுடன் அமெரிக்காவுக்கு வருபவர்கள் தங்களின் துணைக்கு இணையரையோ, உறவினர்களையோ அழைத்து வரலாம். அப்படி வருபவர்களுக்க H-4 விசா வழங்கப்படும்.
புதிய சிக்கல்
இந்த விசாவை வைத்து அமெரிக்காவில் வசிக்க முடியும். பள்ளி, கல்லூரிகளில் பயில முடியும். ஓட்டுநர் உரிமம் கூட எடுக்க முடியும். ஆனால், வேலை செய்யது வருமானம் ஈட்ட முடியாது. இதற்கு EAD எனப்படும் வேலை அங்கிகார ஆவணத்தை வாங்க வேண்டும். இந்த ஆவணத்தை வைத்து 1-2 ஆண்டுகள் வரை வேலை செய்ய முடியும். பின்னர் புதுப்பிக்க வேண்டும். அமெரிக்காவில் சுமார் 1 லட்சம் இந்தியர்கள் இந்த ஆவணம் மூலம் பலனடைந்து வருகிறார்கள். இந்த ஆவணத்தை புதுப்பிப்பது தானியங்கி முறையில் நடைபெற்று வந்தது. ஆனால், டிரம்ப் அரசு தானியங்கி முறையை ரத்து செய்துள்ளது. எனவே இந்தியர்கள் பலருக்கு இந்த ஆவணம் புதுப்பிக்கப்படாமல் போக வாய்ப்பு இருக்கிறது.
இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியில், ஜே.டி.வேன்ஸிடம் இந்திய பெண் ஒருவர், குடியேற்றம் குறித்து கேள்வி எழுப்பியிருப்பது பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications