வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு விவகாரம்: யூடியூப் எடுத்த அதிரடி முடிவு.. பரபரப்பு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை குறைந்து மதிப்பிட்டு மக்களை குழப்பத்திற்கு உட்படுத்தும் நோக்கிலான வீடியோக்களை யூடியூப் நிறுவனம் தடை செய்துள்ளது.

ஜோ பிடன் அடுத்த அமெரிக்க அதிபராக உள்ளனார். அதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்வதற்கு போதுமான மாநிலங்கள் சான்றிதழ் அளித்துள்ள நிலையில், தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி புதிதாக வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியாத நிலையை யூடியூப் உருவாக்கி உள்ளது. .

YouTube Bans New Videos Claiming US Election Fraud Following Criticism

இதேபோல், யூடியூப்பின் பேரண்ட் நிறுவனமான கூகிள், அமெரிக்காவில் தேர்தல் தொடர்பான விளம்பரங்களுக்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

கூகிள் மட்டுமல்ல பேஸ்புக்கும் அமெரிக்க வாக்காளர்களிடையே தவறான தகவல் அல்லது குழப்பத்தை பரப்புவதற்கு பயன்படுத்தப்படுவதை தடுக்க தேர்தல் தொடர்பான விளம்பரங்களை எடுப்பதை தற்காலிகமாக நிறுத்திவிட்டன.

இது தொடர்பாக கூகுள் நிறுவனம் கூறுகையில், மக்களின் எண்ணங்களை தவறாக வழி நடத்தவோ அல்லது தவறான தகவல்களை மக்களிடையே பரப்புவதற்கோ விளம்பரங்கள் பயன்படுத்தப்படும்போது, கணிக்க முடியாத நிலை உள்ளது. எனவே பயனர்களை பாதுகாக்க, குறீப்பிட்ட காலத்திற்கு விளம்பரங்களை இடைநிறுத்துகிறோம்.

தேர்தலுக்குப் பிந்தைய காலத்தை ஒரு முக்கியமான நிகழ்வாக நாங்கள் இனி கருதவில்லை. இருந்த போதிலும் எங்கள் விளம்பரக் கொள்கைகளை நாங்கள் தொடர்ந்து கடுமையாகச் செயல்படுத்துவோம், தேர்தல்கள் அல்லது ஜனநாயக செயல்முறை மீதான நம்பிக்கையை கணிசமாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடிய தவறான செயல்களை கண்டிப்பாக தடை செய்வேம்" என்று கூறியுள்ளது.

இதன் அடிப்படையில் தான், கூகுளுக்கு சொந்தமான யூடியூப், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை குறைந்து மதிப்பிட்டு மக்களை குழப்பத்திற்கு உட்படுத்தும் நோக்கிலான வீடியோக்களை தடை செய்துள்ளது. முன்னதாக யூடிப்பில் தேர்தல் முடிவுகளை விமர்சிக்கும் தவறான வீடியோக்கள் அதிக அளவில் இருந்ததாக கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளானது.

English summary
YouTube on Wednesday banned new videos with bogus claims of election fraud, saying enough states have certified Joe Biden as the next US president to make it official.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X