அமலாக்க துறை விசாரணையில் திரிணாமுல் அமைச்சர்! நீதிமன்றம் பரபர உத்தரவு.. மம்தாவுக்கு பெரும் தலைவலி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஊழல் புகாரில் கைதாகி உள்ள திரிணாமுல் அமைச்சர் மற்றும் அவரது நண்பர் தொடர்பாக நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்து உள்ளது.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசில் தொழில்துறை அமைச்சராக இருப்பவர் பார்த்தா சாட்டர்ஜி. இவர் அம்மாநில கல்வித் துறை அமைச்சராக இருந்த சமயத்தில் ஊழல் செய்ததாகப் புகார்கள் எழுந்தன.
ஆசிரியர் தேர்வு ஆணைய ஆட்சேர்ப்பில் இவர் ஊழல் செய்ததாகப் புகார் எழுந்த நிலையில், அமலாக்கத் துறையினர் சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கில் சோதனை நடத்தினர்.

திரிணாமுல் அமைச்சர்
அதில் திரிணாமுல் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நெருங்கிய நண்பரான அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அங்கிருந்து சுமார் 20 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது.கைப்பற்றப் பணத்தை எண்ணி முடிக்கவே அவர்களுக்கு சில மணி நேரம் வரை ஆனது. இதற்கிடையே உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி, பார்த்தா சாட்டர்ஜி கொல்கத்தா மருத்துவமனையில் அட்மிட் ஆனார்.

எய்ம்ஸ்
இது தொடர்பாகக் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறையினர் வழக்கு தொடர்ந்து இருந்தனர். அதில் ஆளும் கட்சியைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் அமலாக்கத் துறை விசாரணையில் இருந்து தப்பிக்க, அந்தக் குறிப்பிட்ட மருத்துவமனையில் அட்மிட் ஆவதாக வாதிட்டனர். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட கொல்கத்தா நீதிமன்றம் அமைச்சர் புபனேஷ்வர் எய்ம்ஸுக்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டது.

மருத்துவமனை தேவையில்லை
அதன்படி பார்த்தா சாட்டர்ஜி ஹெலிகாப்டர் மூலம் புபனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். திரிணாமுல் அமைச்சருக்கு சில உடல்நலப் பிரச்சினைகள் உள்ளது தான் என்றாலும் கூட, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கை சமர்ப்பித்தனர்.
Recommended Video

நீதிமன்றம் உத்தரவு
இந்த அறிக்கை நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டது. இதனிடையே வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது கூட்டாளியாகக் கருதப்படும் அர்பிதா முகர்ஜி ஆகியோரை வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைக்க உத்தரவிட்டனர். பார்த்தா சாட்டர்ஜி நாளை அல்லது நாளை மறுநாள் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications