5 ஸ்டார் ஏசி நல்லது தான்.. ஆனா 3 ஸ்டார் ஏசியே பெரும்பாலானோருக்கு போதும்! ஏன் தெரியுமா.. இதை படிங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த கோடைக் காலத்தில் பலரும் ஏசி வாங்கலாம் என பார்ப்பீர்கள். அப்படிப் பார்க்கும் போது 3 ஸ்டார், 5 ஸ்டார் என அதில் இருப்பது உங்களுக்குக் குழப்பத்தைத் தரலாம். இந்த ஸ்டார் என்றால் என்ன.. உங்களுக்கு எந்த ஸ்டார் ஏசி சரியானதாக இருக்கும் என்பதை நாம் பார்க்கலாம்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் வெப்பம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் வரும் ஆண்டுகளில் வெப்பம் புதிய உச்சத்தைத் தொடுகிறது.

What is the difference between 3 star ac and 5 star ac which is best

அதிலும் இந்தாண்டு வெப்பம் புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது என்றே சொல்லலாம். பல இடங்களில் அசால்டாக வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்துள்ளது. சில இடங்களில் 110 டிகிரியை தாண்டிப் போய்க் கொண்டு இருக்கிறது.

அதீத வெப்பம்: இந்தாண்டு இந்தளவுக்கு வெப்பம் மோசமாக இருக்க எல் நினோ தொடங்கி பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. வெப்பம் இப்படி படாதபாடு படுத்தி வரும் நிலையில், கோடை வெப்பத்தைச் சமாளிக்க ஏசி நமக்குக் கண்டிப்பாகத் தேவைப்படுகிறது. கோடைக் காலத்தில் ஏசி விற்பனை அதிகரிக்கும் என்பதால் பல நிறுவனங்கள் ஆஃபர்களையும் அள்ளி வீசும்.

ஏசியா? ஏர் கூலரா? அடிக்கும் வெயிலுக்கு எது பெஸ்ட்? படிச்சு பார்த்து நீங்களே செலக்ட் பண்ணுங்க


அதில் நம்மில் பலருக்கும் குழப்புவது என்றால் அது ஸ்டார் ரேட்டிங் தான். ஒரே வசதிகள் இருந்தாலும் இரு வேறு ஸ்டார்களை கொண்ட ஏசிகளுக்கு விலை முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். இதனால் பலருக்கும் எந்த ஏசி வாங்குவது என்பதில் குழப்பம் இருக்கும். பெரும்பாலும் 3 ஸ்டார் மற்றும் 5 ஸ்டார் ஏசிக்களுக்கு இடையே தான் குழப்பம் வரும். இரண்டிற்கும் என்ன வித்தியாசம்.. இதில் எது பெஸ்ட் என்பதை நாம் பார்க்கலாம்.

வித்தியாசம்: ஸ்டார் ரேட்டிங் சிஸ்டம் என்பது ஒரு மின் சாதனம் எந்தளவுக்கு மின்சாரத்தைச் செலவிடுகிறது என்பதைக் காட்டப் பயன்படும் ரேங்கிங் சிஸ்டமாகும். பியூரோ ஆஃப் எனர்ஜி எஃபிஷியன்சி (BEE) என்ற அமைப்பு தான் இந்தியாவில் அனைத்து மின்சாதன பொருட்களுக்கும் இந்த ஸ்டார் ரேட்டிங்கை வழங்குகிறது. 1 முதல் 5 ஸ்டார் இவற்றுக்கு வழங்கப்படும். அதாவது ஒரு ஸ்டார் என்றால் மின்சாரத்தை அதிகம் இழுக்கும்.. 5 ஸ்டார் என்றால் குறைவான மின்சாரமே போதும்.. அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த எளிமையான சிஸ்டத்தை உருவாக்கி உள்ளனர்.

இரண்டு விஷயங்கள்: பொதுவாக இரண்டு முக்கிய விஷயங்களைக் கருத்தில் கொண்டே ஏசிக்களுக்கு ஸ்டார் ரேட்டிங்கை தருவார்கள். முதலில் குளிரூட்டும் திறன்.. ஒரு அறையைக் குளிர்விக்கும் திறனின் அளவீடு தான் இது. இதை பொதுவாக இது பிரிட்டிஷ் வெப்ப யூனிட்களில் (BTU) அளவெடுப்பார்கள். அடுத்து எனர்ஜி திறன் மதிப்பீடு (EER), இது ஒரு குறிப்பிட்ட அளவு மின்சாரத்தைப் பயன்படுத்தி எந்தளவுக்கு அறையைக் குளிர்விக்க முடியும் என்பதாகும். இந்த இரண்டை வைத்துத் தான் ஸ்டார் ரேட்டிங் வழங்குவார்கள்.

ஏசி என்பது சும்மா ஒரு முறை மட்டும் வரும் செலவு இல்லை.. ஏசியால் மாதாமாதம் மின் கட்டணமும் செலுத்த வேண்டும். இந்தியா போன்ற வெப்பமான நாடுகளில் ஏசி நமக்கு அதிகம் தேவைப்படும். எனவே, கவனமாக ஸ்டார் ரேட்டிங்கை பார்த்து வாங்க வேண்டும்.

எளிய விளக்கம்:
1.5 டன் 3 ஸ்டார் ஏசி ஒரு மணி நேரம் ஓடினால் 1.1 யூனிட் மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும். அதேநேரம் 5 ஸ்டார் ஏசி ஓடினால் 0.84 யூனிட் மின்சாரம் மட்டுமே செலவாகும். மிகவும் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் 3 ஸ்டார் ஏசியை நீங்கள் பயன்படுத்தும் போது ரூ. 580 அதற்குச் செலவாகிறது என வைத்துக் கொள்ளுங்கள். அதே நீங்கள் 5 ஸ்டார் ஏசியை பயன்படுத்தி இருந்தால் உங்களுக்கு ரூ. 500 மட்டுமே ஆகி இருக்கும்.

இது குறைந்த தொகை போலத் தெரிந்தாலும் நீண்ட கால நோக்கில் பார்த்தால் இதுவே மிகப் பெரிய தொகையாக வந்து நிற்கும். அப்போ அனைவரும் 5 ஸ்டார் ஏசி தானே வாங்க வேண்டும் என நீங்கள் கேட்கலாம். ஆனால் 5 ஸ்டார் ஏசி 3 ஸ்டார் ஏசியை விட காஸ்ட்லி. 1.5 டன் ஏசியில் 3 ஸ்டாருக்கும் 5 ஸ்டாருக்கும் இடையே சுமார் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை வித்தியாசம் இருக்கும்..

யாருக்கு எது பெஸ்ட்: சரி இப்போது விஷயத்திற்கு வருவோம்.. எந்த ஏசி பெஸ்ட்.. நீங்கள் ஆபீஸ் போன்ற இடங்களுக்கு வாங்குகிறீர்கள் என்றால் கண்ணை மூடிக் கொண்டு 5 ஸ்டார் ஏசி வாங்கலாம். ஏனென்றால் ஏசி ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். அதேநேரம் வீடுகளுக்கு என்று வரும் போது, நீங்கள் வெப்பமான பகுதியில் வாழ்கிறீர்கள்.. உங்களுக்கு பெரும்பாலான காலம் ஏசி தேவை என்றால் 5 ஸ்டார் ஏசி வாங்கலாம். ஆனால், சம்மரில் மட்டுமே ஏசி போடுவேன்.. மற்ற காலம் ஃபேனை வைத்து ஓட்டிக் கொள்வேன் என்றால் 3 ஸ்டார் ஏசியே உங்களுக்கு போதும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+