Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓ இவர்கள் பெயரை வைத்திருப்பதால்தான் ’சுவர்’போல் நின்றாரா?-இந்தியாவை கதறவிட்ட ரச்சின் ரவீந்திரா யார்?

Subscribe to Oneindia Tamil

நேற்றைய இந்திய நியூசிலாந்து ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கனியை தட்டிப்பறித்து நியூசிலாந்தை பெரும் இக்கட்டிலிருந்து காப்பாற்றிய ரச்சின் ரவீந்திரா ஒரே நாளில் அனைவரையும் கவர்ந்துவிட்டார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், இவர் பெயர் காரணத்தை அறிந்தால் நேற்று இவர் சுவர்போல் நின்றது புரியும்.

 யார் இந்த ரச்சின் ரவீந்திரா

யார் இந்த ரச்சின் ரவீந்திரா

இடது கை சுழற்பந்து வீச்சு மற்றும் கான்பூரில் நியூசிலாந்து அணிக்காக தனது முதல் டெஸ்டில் அறிமுகமான ரச்சின் ரவீந்திரா ஒரு ஆல்-ரவுண்டர் என்பது அனேகருக்கு தெரியாது. அவரது பேட்டிங் திறமையை எளிதாக எடைபோட்ட இந்திய அணியினர் கடைசியில் அதற்கான விலையையும் கொடுத்தனர். சுவர்போல நின்று நியூசிலாந்து அணியை காத்தார் ரச்சின் ரவீந்திரா.

சுவர் போல் நின்றார் என்று கூறக்காரணம் இந்திய அணியின் கோச் ராகுல் திராவிடைத்தான் சுவர் என்று அழைப்பார்கள். பின் இவர் எப்படி சுவர் போல் நின்றார் என்று சொல்லலாம் எனக்கேட்கலாம், இவரது பெயர்காரணத்தால் சுவர்போல் என்று சொல்லலாம். காரணம் ரச்சின் ரவீந்திராவின் பெயர் வைக்கப்பட்ட விதமே சுவாரஸ்யமானது.

 இந்திய பெற்றோர் திராவிட் சச்சின் மீது தீரா காதல்

இந்திய பெற்றோர் திராவிட் சச்சின் மீது தீரா காதல்

ரச்சின் ரவீந்திராவின் பெற்றோர் இந்தியர், அதைவிட இந்திய கிரிக்கெட் பிளேயர்கள் மீது தீரா காதல் கொண்டவர்கள் அதனால் தங்களுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு தாங்கள் விரும்பும் ராகுல் திராவிட், சச்சின் டெண்டுல்கர் பெயரைச் சூட்ட விரும்பினர். அதன்படி 'ரா'. ராகுல் டிராவிட்டின் பெயரிலிருந்தும், சச்சின் டெண்டுல்கரின் பெயரிலிருந்து 'சின்' என்பதையும் எடுத்து ரச்சின் ரவீந்திரா எனப் பெயர் சூட்டினர்.

 ரச்சின் குடும்ப பின்னனி

ரச்சின் குடும்ப பின்னனி

பெங்களூரைச் சேர்ந்த ஒரு மென்பொருள் சிஸ்டம் ஆர்க்கிடெக்ட் 1990 களில் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தார். இவரது மகன் தான் ரச்சின் ரவீந்திரா. இவர் 1999 ஆம் ஆண்டு நியூசிலாந்து வெலிங்டனில் பிறந்தார், அவருடைய தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தி, பெங்களூருவில் கிரிக்கெட் பிளேயராக இருந்த ஆர்வத்தில் நியூசிலாந்தில் ஹட் ஹாக்ஸ் என்ற கிரிக்கெட் கிளப்பை நிறுவினார்.

 இந்திய பிட்சுகளில் ஆடி அனுபவம் பெற்ற வீரர்

இந்திய பிட்சுகளில் ஆடி அனுபவம் பெற்ற வீரர்

இதில் பயிற்சி பெற்றவர் ரச்சின் ரவீந்திரா. அதுமட்டுமல்ல இந்திய பிட்சுகளில் நன்கு பழக்கமானவர் ரச்சின். அவர் 2011 ஆம் ஆண்டு முதல், ஹட் ஹாக்ஸ் அணிக்காக ஆண்டுதோறும் பெங்களூரு, ஹைதராபாத், சென்னை மற்றும் அனந்த்பூர் போன்ற பல இந்திய நகரங்களுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணங்களில் கலந்துக்கொண்டுள்ளார்.

தெற்கு பெங்களூரு புறநகர்ப் பகுதியான ஜெயநகரில் ரவீந்திராவின் கூட்டுக் குடும்பம் வசித்து வருகிறது. ரவீந்திராவின் தந்தை கிருஷ்ணமூர்த்தி ஜவகல் ஸ்ரீநாத் போன்றவர்களுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார். அந்த வகையில் ரவீந்திராவுக்கும் ஸ்ரீஇநாத் குடும்ப உறவுபோல் ஸ்ரீநாத்தை 'ஸ்ரீ மாமா' என்று அழைப்பாராம் ரவீந்திரா.

 முதல் போட்டியில் அசத்தல்

முதல் போட்டியில் அசத்தல்

22 வயதான ரச்சின் ரவீந்திரா நியூசிலாந்தின் சீனியர் அணிக்காக 2021 செப்டம்பரில், பங்களாதேஷுக்கு எதிராக டி-20 தொடரில் முதல்முறையாக களம் இறக்கப்பட்டார். ஆனால் அறிமுகப் போட்டியில், ரவீந்திரா பெரிதாக சாதிக்கவில்லை. ஆனால் அடுத்த போட்டியில் 4 ஓவர்களில் 22 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அனைவர் கவனத்தையும் கவர்ந்தார்.

அன்டர் 19 -ல் கலக்கிய வீரர்
சர்வதேச போட்டிகளில் கலந்துக்கொள்வதற்கு முன் ரவீந்திரா முதல்தர மற்றும் 19 வயதுக்குட்பட்ட (UNDER 19) பல்வேறு போட்டிகளில் நியூசிலாந்துக்காக விளையாடியுள்ளார்.

16 வயதில், வங்கதேசத்தில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை 2016 இல் நியூசிலாந்து அணியில் இளம் வீரராக இருந்தார். அவர் நியூசிலாந்தில் நடந்த U-19 உலகக் கோப்பையின் 2018 டீமில்ம் விளையாடினார். நியூசிலாந்தின் நம்பிக்கைக்குரிய ஆல்-ரவுண்டராக இருந்தார்.

 3 செஞ்சுரி, 10 ஆஃப் செஞ்சுரி ரச்சினின் சாதனை

3 செஞ்சுரி, 10 ஆஃப் செஞ்சுரி ரச்சினின் சாதனை

அக்டோபர், 2018 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிராக தனது முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை 29 போட்டிகளில் 38.71 சராசரியுடன் 1,626 ரன்கள் எடுத்துள்ளார். அவர் தனது முதல் தர வரிசையில் மூன்று சதங்கள் மற்றும் 10 அரை சதங்களையும் பெற்றுள்ளார். ரவீந்திர 29 முதல் தர ஆட்டங்களில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

 இந்திய நியூசிலாந்து அணியின் போட்டி மூலம் வெளிச்சத்துக்கு வந்த ரச்சின்

இந்திய நியூசிலாந்து அணியின் போட்டி மூலம் வெளிச்சத்துக்கு வந்த ரச்சின்

இந்திய நியூசிலாந்து டெஸ்ட் போட்டி மூலம் ஒரே நாளில் உலக கிரிக்கெட் ரசிகர்களால் யார் இவர் என திரும்பிப்பார்க்க வைத்துவிட்டார் ரச்சின். சென்னைப்போன்ற மைதானங்களில் நன்கு பயிற்சிப்பெற்ற ரச்சின் ஆல்ரவுண்டர் என்பதை மறந்து இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் எளிதாக கணக்கிட்டதற்கு ரச்சின் பதிலடி கொடுத்துள்ளார். இனி அவரை ஜாக்கிரதையாகவே அணுகுவார்கள். ராகுல்-ரச்சின் பெயரை இணைத்து பெற்றோர் வைத்த ரச்சின் பெயர் காரணத்தை ரச்சின் காத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+