அனுமதி மறுக்கப்பட்ட அகதிகள் நாடு திரும்ப கனடா அரசு நிதியுதவி
ஒட்டாவா: கனடாவில் தங்க அனுமதி மறுக்கப்பட்ட அகதிகள் தங்கள் நாட்டுற்கு செல்ல விமான டிக்கெட்டும், 2,000 டாலர் நிதியுதவியும் வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கனடாவில் அனுமதியின்றி தங்கியிருக்கும் அகதிகள் தங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்ல அவர்களுக்கு விமான டிக்கெட்டும், 2,000 டாலர் நிதியுதவியும் அளிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இந்த 2,000 டாலர் அகதிகள் தங்கள் நாட்டில் வியாபாரம் செய்ய, படிக்க, மறுவாழ்வு அமைத்துக் கொள்ள உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டது.
ஆனால் கனடாவின் எல்லை சேவை பிரிவின் (CBSA) இணையதளத்தில் இந்த திட்டத்தை அகதிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் திட்டம் என்று விமர்சிக்கப்பட்டுள்ளது. மேலும் அகதிகள் தங்கள் நாடுகளுக்கு திரும்பிச் செல்ல குறைந்தது 15,000 டாலராவது தேவைப்படும் என்றும், அனுமதி மறுக்கப்பட்ட அகதிகள் பலர் கனடாவை விட்டுப் போக விரும்பவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தால் சுமார் 7,000 அகதிகள் மகிழ்ச்சியுடன் நாடு திரும்புவார்கள் என்று கனடா எல்லைப்படை தெரிவித்தது. ஆனால் பெரும்பாலான அகதிகள் கனடாவை விட்டுப் போக விரும்பவில்லை என்பது குறி்ப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications