துரந்தர் 2 தியேட்டரில் பார்க்கவில்லையா? நேரடியாக ஓடிடியில் வரப்போகுது.. “பெரிய” சர்ப்ரைஸ்!
சென்னை: சமீபத்தில் வெளியான துரந்தர் 2 படம் பெரிய அளவில் பேசப்பட்டு வரும் நிலையில், இந்தப் படத்தை தியேட்டரில் பார்க்காத ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கிடைக்கிறது. ஓடிடியில் இந்த படத்தின் ஸ்பெஷல் அப்டேட் வந்திருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

துரந்தர் எமோஷனல்
இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான 'துரந்தர்' திரைப்படம் கடந்த ஆண்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆக்ஷன், எமோஷனல், கதையின் வேகம் - இந்த மூன்றையும் கலந்த அந்த படம் உலகளவில் நல்ல வசூலையும் பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டாக மாறியது. இதன் மூலம் 'துரந்தர்' ஒரு சாதாரண படம் இல்லாமல், ரசிகர்கள் காத்திருக்கும் ஒரு பெரிய பிராண்டாக உருவானது.
துரந்தர் படத்தின் வெற்றி
அதன் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் வெளியான 'துரந்தர் 2: தி ரிவெஞ்ச்' படமும் நல்ல ஓப்பனிங் பெற்றது. முதல் பாகத்தை பார்த்த ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் திரையரங்குகளுக்கு வந்ததால், ஆரம்ப நாட்களிலேயே படம் வசூலில் முன்னிலை பிடித்தது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்ததால், இந்த படமும் ஹிட் பட்டியலில் சேர்ந்து விட்டது என்று சொல்லலாம்.
துரந்தர் 2 விமர்சனம்
ஆனால் இந்த வெற்றியுடன் சில விமர்சனங்களும் சேர்ந்து வந்தது. முதல் பாகத்தில் இருந்த எமோஷனல், கதையின் ஆழம் இந்த பாகத்தில் கொஞ்சம் குறைந்துவிட்டதாக சிலர் கூறினர். சில காட்சிகள் அதிகமாக காமர்ஷியல் நோக்கில் சென்றுவிட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. அதே நேரத்தில், ரன்வீர் சிங்கின் நடிப்பு மற்றும் சில ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்ததால், படம் முழுக்க முழுக்க எதிர்மறையாக பேசப்படவில்லை. நல்லதும், குறைகளும் கலந்த ஒரு ரியாக்ஷன்தான் கிடைத்தது.
இந்த சூழ்நிலையில் தான் தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. 'துரந்தர்' மற்றும் 'துரந்தர் 2' படங்களின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட கூடுதல் காட்சிகளை வைத்து, ஒரு வெப் சீரிஸ் உருவாக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த தொடரில் சுமார் 20 எபிசோடுகள் இருக்கும் என்றும், இதுவரை திரையரங்கில் காட்டப்படாத பல முக்கிய காட்சிகள் இதில் இடம்பெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

துரந்தர் வெப் சீரிஸ்
சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு சமமான புதிய காட்சிகள் இந்த சீரிஸில் சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், படத்தில் முழுமையாக சொல்லப்படாத கதையின் சில பகுதிகள், கதாபாத்திரங்களின் பின்னணி, அவர்கள் எடுத்த முடிவுகளின் காரணங்கள் போன்ற விஷயங்கள் இன்னும் விரிவாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரையரங்கில் பார்க்கும்போது மிஸ் ஆன சில விஷயங்களை இந்த வெப் சீரிஸ் மூலம் ரசிகர்கள் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். அதனால் தான் இந்த அறிவிப்பு வெளியான உடனேயே, 'துரந்தர்' ரசிகர்களிடையே ஒரு புதிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.
மொத்தத்தில் பார்க்கும்போது, 'துரந்தர்' தற்போது ஒரு படம் என்ற அளவை தாண்டி, ஒரு பெரிய கதை உலகமாக மாறிக் கொண்டிருக்கிறது. முதல் பாகத்தின் வெற்றி, இரண்டாம் பாகத்தின் வசூல், அதனை சுற்றியுள்ள சர்ச்சைகள்-இவை எல்லாம் சேர்ந்து இந்த பிராண்டை இன்னும் பேசப்படும் ஒன்றாக மாற்றியிருக்கிறது.
இப்போது அந்த பயணம் வெப் சீரிஸ் வழியாக தொடர இருக்கிறது. இந்த முயற்சி சரியாக வந்தால், 'துரந்தர்' ரசிகர்களுக்கு இது இன்னொரு பெரிய விருந்தாக மாறும் என்பது நிச்சயம்.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications