Dhurandhar OTT: ஓடிடியில் வந்த துரந்தர் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! ரன்வீர் சிங்கின் மாஸ் அவதாரம்!
சென்னை: சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி அதிகமான விவாதங்களை கிளப்பிய படம் தான் ரன்வீர் சிங் நடித்த 'துரந்தர்'. இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் உருவான இந்த படம், இப்போது நாளை (ஜனவரி 30ஆம்) தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக உள்ளது என்ற அறிவிப்புக்குப் பிறகு மீண்டும் கவனம் பெற்றிருக்கிறது.
'துரந்தர்' ஒரு சாதாரண ஸ்பை திரில்லர் படம் இல்லை. இது முழுக்க முழுக்க தேச பாதுகாப்பு, உளவுத்துறை நடவடிக்கைகள், அரசியல் அதிகாரம், அண்டை நாடுகளுடனான உறவு போன்ற விஷயங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஒரு கனமான படம். 'Uri', 'Article 370' படங்களுக்குப் பிறகு, ஆதித்யா தார் எடுத்திருக்கும் இன்னொரு தீவிரமான தேசிய பாதுகாப்பு அரசியல் படமாக இதை பார்க்கலாம்.

கதையை பற்றி சொன்னால்
இந்த படம், இந்திய உளவுத்துறையின் முக்கிய அதிகாரியான அஜய் சன்யால் என்ற கதாபாத்திரத்தை மையமாக வைத்து நகர்கிறது. இந்த கதாபாத்திரம், உண்மையான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக கூறுகிறார்கள். படம் முழுக்க 'இது கற்பனை' என்ற டிஸ்கிளைமர் இருந்தாலும், உண்மை சம்பவங்களோடு இருக்கும் ஒற்றுமைகள் வெளிப்படையாக தெரிகின்றன.
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள லியாரி பகுதியை மையமாக வைத்து செயல்படும் கும்பல், அரசியல் தலைவர்கள், ISI மற்றும் தீவிரவாத அமைப்புகளின் தொடர்பை உடைக்க, இந்திய RAW அமைப்பு ஒரு ஆபத்தான திட்டத்தை வகுக்கிறது. அந்த திட்டத்தின் மையமாக, ஹம்சா என்ற பெயரில் ரன்வீர் சிங் பாகிஸ்தானுக்குள் அண்டர்கவர் ஏஜென்டாக அனுப்பப்படுகிறார்.
அங்கு அவர், ரெஹ்மான் டக்காயித் என்ற சக்திவாய்ந்த கும்பல் தலைவரின் நம்பிக்கையைப் பெறுகிறார். இந்த ரெஹ்மான் டக்காயித் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் அக்ஷய் கன்னா. கும்பல் அரசியல், அதிகாரப் போட்டி, நம்பிக்கை துரோகம், ரகசிய நடவடிக்கைகள் என படம் மெதுவாகவும் அழுத்தமாகவும் நகர்கிறது.
நடிப்பு
இந்த படத்தில் உண்மையிலேயே அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது அக்ஷய் கன்னாவின் நடிப்பு தான். அவர் கண்களாலேயே பயத்தை உருவாக்குகிறார். எந்த ஓவராக்டிங்கும் இல்லாமல், அமைதியான ஆனால் கொடூரமான கும்பல் தலைவராக அவர் மிரட்டுகிறார். பல விமர்சகர்கள், இந்த படத்தின் 'ஷோ ஸ்டீலர்' அக்ஷய் கன்னா தான் என்று சொல்வதற்குக் காரணம் இதுதான்.

ரன்வீர் சிங், முழுக்க முழுக்க அடக்கமான, அமைதியான, உள்ளுக்குள் கொந்தளிக்கும் ஒரு கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். நீண்ட தாடி, குறைந்த வசனம், கடுமையான பார்வை என அவர் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்தாலும், படம் நீளமாக செல்ல செல்ல அவரது நடிப்பில் ஒரே மாதிரியான தன்மை ஏற்படுகிறது என்ற விமர்சனமும் இருக்கிறது.
ஆர். மாதவன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால், ராகேஷ் பேடி ஆகியோர் அனைவரும் தங்களுக்கான வேடங்களை நேர்த்தியாக செய்திருக்கிறார்கள். ஆனால் கதையில் அதிகமான கதாபாத்திரங்கள் இருப்பதால், சிலர் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்ற குறையும் சொல்லப்படுகிறது.
துரந்தர் விமர்சனம்
'துரந்தர்' படம் பற்றி வரும் முக்கியமான விமர்சனம் என்னவென்றால், படம் மிக நீளமாக உள்ளது. சுமார் 212 நிமிடங்கள் ஓடும் இந்த படம், சில இடங்களில் தேவையற்ற காட்சிகள், அதிகமான அறிமுகங்கள், அரசியல் விளக்கங்கள் காரணமாக பார்வையாளரின் பொறுமையை சோதிக்கிறது.
வன்முறை காட்சிகள், ஆவணப்படக் காட்சிகள், கடுமையான வசனங்கள் ஆகியவை படத்தை தீவிரமாக மாற்றினாலும், சிலருக்கு அது மிகையாகவும் தோன்றுகிறது. படம் இரண்டு பகுதிகளுக்கான முன்னோட்டம் போலவே அமைந்துள்ளது என்றும், முதல் பகுதி முழுக்க மேடை அமைப்பிலேயே முடிந்து விடுகிறது என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், பின்னணி இசை, அரசியல் சூழல், கும்பல் அரசியல் காட்சிகள், வசனங்கள் ஆகியவை படத்தை ஒரு கட்டத்தில் பிடிக்க வைத்துவிடுகிறது.
இப்போது இந்த படம் ஜனவரி 30ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருப்பதால், திரையரங்கில் தவறவிட்டவர்கள், அல்லது மீண்டும் பார்க்க விரும்புபவர்கள் அனைவருக்கும் இது ஒரு புதிய அனுபவமாக இருக்கலாம். குறிப்பாக, Part 2 எப்போது வரும்? என்ற எதிர்பார்ப்பை இந்த படம் உருவாக்கி முடிகிறது.
-
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர்












Click it and Unblock the Notifications