Dhurandhar: ‘துரந்தர்’ – கோலிவுட் வெர்ஷன்! ரன்வீர் சிங் முதல் கமல்ஹாசன் வரை… எல்லாமே வித்தியாசம் தான்
சென்னை: இந்தி சினிமாவில் தற்போது பேசுபொருளாக இருக்கும் பிரம்மாண்ட ஆக்ஷன்-ஸ்பை த்ரில்லர் படம் 'துரந்தர்' (Dhurandhar). ரன்வீர் சிங் நடிப்பில் உருவான இந்த படம் தியேட்டரை தொடர்ந்து இப்போது ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. "இந்த கதையை கோலிவுட்டில் எடுத்திருந்தால் யாரெல்லாம் நடித்ததால் செமையாக இருக்கும்?" என்ற கற்பனை ரசிகர்களிடையே தீயாய் பரவி வருகிறது.
அதன் அடிப்படையில், 'துரந்தர்' படத்தின் கோலிவுட் வெர்ஷன் காஸ்டிங் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு இமேஜினேஷன் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

ரன்வீர் சிங் கதாபாத்திரத்தில் சூர்யா
அசல் படத்தில் ரன்வீர் சிங் ஏற்கும் ஸ்பை அதிகாரி கேரக்டரின் வேகம், கோபம், எமோஷன் எல்லாம் கலந்த ஒரு மாஸ் ரோல் என பேசப்படுகிறது. இதே கதாபாத்திரத்தை கோலிவுட் வெர்ஷனில் சூர்யா நடித்திருந்தால், 'காக்க காக்க', '24' போன்ற படங்களில் பார்த்த இன்டென்ஸ் ஆக்ஷன் + ஸ்மார்ட் லுக் கலந்த ஒரு ஸ்பை ஹீரோ உருவாகியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
சஞ்சய் தத் ரோலில் கமல்ஹாசன்
வில்லன்-மெண்டர் கலந்த ஒரு கிரே ஷேட் கேரக்டரில் சஞ்சய் தத் நடிப்பதாக தகவல்கள். இதே ரோலை கமல்ஹாசன் செய்திருந்தால், அந்த கேரக்டர் வெறும் வில்லனாக இல்லாமல், கதையின் மெயின் நரம்புகளை ஆட்டும் ஒரு சக்திவாய்ந்த கேரக்டராக மாறியிருக்கும். டயலாக் டெலிவரி, ஸ்கிரீன் பிரசென்ஸ் - எல்லாமே லெவல் வேற.
அர்ஜுன் ராம்பால் கேரக்டரில் சிம்பு
ஸ்டைலிஷ், சற்று ரஃப், சற்று காம்ப்ளக்ஸ் ஆன ஒரு கேரக்டருக்கு அர்ஜுன் ராம்பால் நடித்திருக்கிறார். இதே ரோலை சிம்பு செய்திருந்தால், அந்த கேரக்டர் முழுக்க 'ஸ்டைல் + ஆட்டிட்யூட்' மிக்ஸாகி, இளைஞர்களிடம் நல்ல ரீச் அடைந்திருக்கும்.
அக்ஷய் கண்ணா ரோலில் விக்ரம்
அக்ஷய் கண்ணா என்றாலே அமைதியாக வந்து சைக்காலஜிக்கலாக ஆட்டம் காட்டும் கேரக்டர்கள் ஞாபகம் வரும். கோலிவுட் வெர்ஷனில் இதே மாதிரியான ஒரு இண்டெலிஜென்ட், சைலண்ட் கில்லர் ரோலை விக்ரம் செய்திருந்தால், 'அந்நியன்' மாதிரி ஒரு பர்ஃபார்மன்ஸ் ரசிகர்களை மிரள வைத்திருக்கும்.
சாரா அர்ஜுன் இடத்தில் க்ரித்தி ஷெட்டி
இந்த துரந்தர் படத்தில் சாரா அர்ஜுன் ஹீரோயினியாக நடித்திருக்கிறார். கோலிவுட் வெர்ஷனில் இதே ரோலை க்ரித்தி ஷெட்டி செய்திருந்தால், இளமை + எமோஷன் கலந்த ஒரு கேரக்டர் கதைக்கு நல்ல டெப்த் கொடுத்திருக்கும்.
மாதவன் - ஸ்பெஷல் அபியரன்ஸ்
இந்த கற்பனை காஸ்டிங்கில் மாதவன் பெயரும் இடம்பிடிக்கிறது. அவர் ஒரு ரா ஏஜெண்ட் அல்லது ரகசிய அமைப்பின் தலைவன் மாதிரியான கேரக்டரில் ஸ்பெஷல் அபியரன்ஸ் கொடுத்திருந்தால், படத்துக்கு ஒரு இன்டர்நேஷனல் டச் வந்திருக்கும்.
கோலிவுட் 'துரந்தர்' - மாஸ் + கிளாஸ் கலவை
இந்த கற்பனை காஸ்டிங்கை பார்த்தாலே, கோலிவுட் வெர்ஷன் 'துரந்தர்' ஒரு பான்-இந்தியா ஸ்பை ஆக்ஷன் பிளாக்பஸ்டர் ஆக மாறியிருக்கும் என்ற ஃபீல் வருகிறது. சூர்யாவின் வேகம், கமல்ஹாசனின் அனுபவம், விக்ரமின் மாற்று நடிப்பு, சிம்புவின் ஸ்டைல் - இவை எல்லாம் சேர்ந்து இருந்தால், தியேட்டரில் ரசிகர்களுக்கு ஒரு முழு வேற லெவல் அனுபவம் கிடைத்திருக்கும்.
தற்போது 'துரந்தர்' படம் இந்தி சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழிலும் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வரும் நிலையில், இப்படம் ஓடிடியில் வெளியாகிய பிறகு கோலிவுட் ரசிகர்கள் "இதுக்கு நம்ம ஊர்ல எடுத்திருந்தா யாரு பெஸ்ட்?" என்ற விவாதம் சூடு பிடித்திருக்கிறது.
-
பிரேம்ஜியுடன் காதலா? 40 வயது வரை அவர் கல்யாணம் பண்ணாத காரணம்.. ஓபனாக பேசிய சோனா! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம் -
சாக கிடந்தப்ப மகளுக்காக பாலா செஞ்ச காரியம்.. 10 வருட டார்ச்சர், தற்கொலை எச்சரிக்கை! அரண்ட கோலிவுட் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications