Dies Irae OTT: ஓடிடியில் வெளியான மலையாள திரில்லர் "டைஸ் ஐரே".. தனியா மட்டும் பார்த்துடாதீங்க!
சென்னை: மலையாளத்தில் வெளியாகி அங்குள்ள மக்களை மிரள வைக்கும் அளவிற்கு உருவான ஹாரர் படமான "டைஸ் ஐரே" (dies irae) ஓடிடிடியில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை பற்றி விரிவாக பார்ப்போம்.
பிரம்ம யுகம் படத்தின் இயக்குனர் ராகுல் சதாசிவம் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் மகனான பிரணவ் மோகன்லால் நடித்துள்ள டைஸ் ஐரே படம் திரையரங்கில் நல்ல வரவேற்பு பெற்று தந்தது. இந்த படம் வெளியாவதற்கு முன்பே இந்த படத்தை பற்றி எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது. காரணம் இந்த படத்தின் இயக்குனர் ராகுல் சதாசிவம் இயக்கிய பூத காலம் மற்றும் பிரம்மயுகம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது அதேபோல இந்த படமும் இருக்கும் என்று எதிர்பார்ப்புக்கு இருந்த நிலையில் அதை டைஸ் ஐரே பூர்த்தி செய்து இருந்தது.

கோபத்தின் நாள் என்று பொருள்படும் டைஸ் ஐரே என்ற லத்தின் வார்த்தை ரசிகர்களிடம் ஆர்வத்தை தூண்டியது. இறந்தவர்களுக்காக பாடப்படும் ஒரு இலத்தீன் கவிதை தான் இது கிரிகோரியன் பாதிரியார்களால் உருவாக்கப்பட்ட ஒரு பிரார்த்தனை பாடல். இந்த படத்தின் கதையைப் பற்றி பார்க்கலாம்.
டைஸ் ஐரே படத்தின் கதை
இந்த படத்தின் கதைப்படி அமெரிக்காவில் தன்னுடைய அப்பாவுடன் சேர்ந்து தொழில் செய்து வரும் கட்டிடக்கலைஞரான ரோகன் (பிரணவ் மோகன்லால்) சில நாட்கள் லீவுக்கு ஊருக்கு வருகிறார். அப்போது ஊரில் அவருடன் காலேஜில் படித்த ஒரு பெண் தற்கொலை செய்து கொள்கிறார். அதற்குப் பிறகு நடக்கும் சம்பவங்கள் வைத்து தான் இந்த படத்தின் கதை வருகிறது. ஒரு ஹை கிளாஸ் பையனாகவும், வாழ்க்கையை ஜாலியாக என்ஜாய் பண்ணும் கேரக்டரில் ரோகன் வாழ்க்கையில் என்னவெல்லாம் மாற்றம் ஏற்படுகிறது என்பதை பற்றியே இந்த படத்தில் காட்டப்படுகிறது.
இந்த படத்தின் கதை முதலில் மெல்ல மெல்ல தொடங்கி பிறகு கிளைமாக்ஸ் அடையும்போது மரண பயத்தின் உச்சத்திற்கே செல்கிறது. இந்த படம் முழுக்க துர் மரணம், பழிவாங்குதல், பில்லி சூனியம், மோட்சம் அடையாத ஆவி என்று பல விஷயங்கள் பேசப்படுகிறது. இந்த படம் தான் மலையாள சினிமாவில் உலக தரத்தில் மிரட்டிய பேய் படம் என்ற பாராட்டுகளையும் பெற்றது. இந்த படம் தற்போது தமிழ் மற்றும் மலையாளத்தில் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications