EKO OTT: நெட்ஃபிலிக்ஸில் ட்ரெண்ட்டாகும் ‘EKO’.. தனுஷ் இப்படி சொல்லிட்டாரு! IMDb-யில் எகிரும் ரேட்டிங்
சென்னை: தமிழ் சினிமாவைத் தாண்டி, நல்ல படைப்புகள் என்றால் மொழி எல்லை பார்க்காமல் திறந்த மனதுடன் பாராட்டும் நடிகர்களில் தனுஷ் தனி இடம் பிடித்தவர். அந்த வரிசையில் இப்போது அவர் சொன்ன ஒரு பாராட்டு தான் சினிமா வட்டாரங்களில் சத்தமாக பேசப்படுகிறது.
சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 'EKO' திரைப்படத்தை பார்த்த தனுஷ், அதை "ஒரு மாஸ்டர் பீஸ்" என்று சொல்லி பாராட்டியுள்ளார். அந்த ஒரே வார்த்தையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் கவனத்தையும் பல மடங்கு உயர்த்திவிட்டது.

மலைப்பகுதியில் தனிமையாக வாழும் மனிதர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான 'EKO', வெளியான போது பெரிய விளம்பரங்களோ, பிரமாண்ட வெளியீடுகளோ இல்லாமல் அமைதியாக வந்த படம். ஆனால் வெளியான பிறகு, அதன் கதை, இயற்கையோடு ஒன்றிணைந்த காட்சிகள், மெளனமான பதற்றம் மற்றும் நடிகர்களின் இயல்பான நடிப்பு காரணமாக விமர்சகர்களிடையே பாராட்டுகளை அள்ளியது.
இந்த படத்தின் முக்கிய கேரக்டராக மல்லாதி என்ற பெண் தான் இருக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ள பியானா மொமின், படத்தின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறார். மலேசியாவைச் சேர்ந்த மலாத்தி, கேரள - கர்நாடக எல்லையை ஒட்டிய ஒரு மலை எஸ்டேட்டில், உலகத்திலிருந்து துண்டிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறார்.
அவருடன் கணவராக குரியச்சன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள சவுரப் சச்தேவாவும், கதையின் எமோஷனலை பாதியாக சுமக்கிறார். இவர்களின் உறவு, தனிமை, இயற்கையோடு போராடும் வாழ்க்கை - இவையெல்லாம் 'EKO'வின் ஆன்மாவாக அமைந்துள்ளன.
துணை கதாபாத்திரங்களில் சந்தீப் பிரதீப், வினீத், நரேன் ஆகியோர் அளவான நடிப்பால் கதைக்கு வலு சேர்த்துள்ளனர். இதை பார்த்த தனுஷ், "EKO ஒரு மாஸ்டர் பீஸ். எல்லா பாராட்டுகளுக்கும் முழு தகுதியானவர் நடிகை பியானா மொமின். அவர் தலை சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்" என்று கூறிய கருத்து தற்போது வைரலாகி வருகிறது.
இதற்கிடையில், நெட்ஃபிலிக்ஸில் 'EKO' படம் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து இருப்பதும் கவனிக்கத்தக்கது. 2025 ஆம் ஆண்டின் சிறந்த மர்மத் த்ரில்லர் படங்களில் ஒன்றாக இந்த படம் பேசப்பட்டு வருகிறது. ஒரு தொழிலதிபர் மாயமாகும் சம்பவமும், அதைத் தொடர்ந்து நடக்கும் மர்ம திருப்பங்களும் தான் கதையின் அடிப்படை. பல விமர்சகர்கள், "த்ரிஷ்யம் படத்தை நினைவூட்டும் அளவுக்கு விறுவிறுப்பும் பதற்றமும் இதில் உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளனர்.

IMDb-யில் 8.2 என்ற உயர்ந்த மதிப்பெண் பெற்றுள்ள 'EKO', தொடக்கம் முதல் ஒருவித சஸ்பென்ஸை தக்கவைத்துக்கொள்கிறது. அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்ற ஆர்வம் பார்வையாளரை தொடர்ந்து கட்டிப்போடுகிறது. சில இடங்களில் கதையின் வேகம் சற்று மெதுவாக இருப்பதாக உணர்ந்தாலும், கிளைமாக்ஸில் வரும் ட்விஸ்ட் அந்த எல்லாவற்றையும் ஈடு செய்து விடுகிறது என்பதே பொதுவான கருத்து.
மொத்தத்தில், பெரிய சத்தமில்லாமல் வந்து, கண்டண்ட் மூலம் பேச வைத்த படம் 'EKO'. தனுஷ் போன்ற நடிகர்கள் வெளிப்படையாக பாராட்டும் அளவுக்கு, இந்த படம் உண்மையிலேயே தனித்துவமான அனுபவத்தை தருகிறது என்பதில் சந்தேகமே இல்லை. மர்மம், இயற்கை, மனித உறவுகள் - இந்த மூன்றும் கலந்த ஒரு மெளனமான த்ரில்லரை ரசிக்க விரும்பினால், 'EKO' கண்டிப்பாக மிஸ் செய்யக்கூடாத படம்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications