Happy Raj OTT: ஓடிடிக்கு வரும் ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்... எந்த தளத்தில், எப்போ பார்க்கலாம்? லீக்கான தகவல்
சென்னை: ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான 'ஹேப்பி ராஜ்' படம், தியேட்டரில் கலவையான விமர்சனங்கள் வாங்கிக்கொண்டே இருந்தாலும், அதே நேரத்தில் ரசிகர்களிடையே நல்ல கவனத்தையும் ஈர்த்து வருகிறது. குறிப்பாக குடும்ப உணர்வுகளையும், சமூக பார்வையையும் பேசும் இந்த படம், ஓடிடி ரிலீஸ்க்கும் ரெடியாகி வருகிறது.

ஓடிடி ரிலீஸ் எப்போது?
'ஹேப்பி ராஜ்' படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் ஓடிடி (Amazon Prime Video) வாங்கியுள்ளது. இதனால் இந்த படம் தியேட்டர் ரன்னுக்குப் பிறகு நேரடியாக அந்த ஓடிடி தளத்தில் வெளியாகும்.
தற்போதைய தகவல்படி, ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் இந்த படம் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகும் என்று சொல்லப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை என்றாலும், ரசிகர்கள் ஏற்கனவே அதற்காக காத்திருக்க ஆரம்பிச்சுட்டாங்க.
படம் எப்படி இருக்கு?
அறிமுக இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கிய இந்த படத்தில், அப்பாஸ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அவருடன் ஜார்ஜ் மரியான், ஸ்ரீகவுரி பிரியா, கீதா கைலாசம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இதில் குறிப்பாக ஜார்ஜ் மரியான் நடித்த அப்பா கேரக்டர் தான் படத்தின் பெரிய பலமாக பேசப்படுகிறது. அந்த கேரக்டரின் எமோஷனல், தியாகம், வேதனை எல்லாம் ரொம்ப ரியல்-ஆ இருந்தது என்று ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். இயக்குநர்கள் பா. ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் கூட அவரது நடிப்பை திறம்பட பாராட்டியுள்ளனர்.
வசூல் நிலவரம் எப்படி?
படம் மார்ச் 27ஆம் தேதி ரிலீஸ் ஆன பிறகு, முதல் இரண்டு நாட்களில் ஓப்பனிங் சுமாராகவே இருந்தது. பெரிய மாஸ் ஹைப் இல்லாததால், ஆரம்ப வசூல் அதிகமாக ஏறவில்லை.
ஆனா, படம் வெளியான பிறகு "எமோஷனல் காட்சிகள் நல்லா இருக்கு"ன்னு வாய் வழி பேசு (word of mouth) கொஞ்சம் பாசிட்டிவ் ஆக மாறியது. குறிப்பாக குடும்ப ஆடியன்ஸ், பெண்கள் ரசிகர்கள் இந்த படத்தை ஏற்றுக்கொண்டதால, வீக்கெண்ட் ஷோக்களில் ஓரளவு கூட்டம் அதிகரிச்சது.
மொத்தத்தில் முதல் வார இறுதியில் சராசரி வசூல் பெற்றது. பி & சி சென்டர்களில் (சிறிய நகரங்கள்) நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்க மல்டிப்ளெக்ஸ்களில் பாசிட்டிவ் ரிவ்யூ பெற்ற வருகிறது .பெரிய ப்ளாக்பஸ்டர் ரேஞ்ச் இல்லையென்றாலும், "லாஸ் இல்லாமல் ஓடும் படம்" என்ற லெவலில் தான் இப்போ நிலைமை இருக்கிறது.
ஜி.வி. பிரகாஷ்க்கு கம் பேக்கா?
சமீப காலமாக சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வேலை செய்யாத நிலையில் இருந்த ஜி.வி. பிரகாஷ் குமார், இந்த 'ஹேப்பி ராஜ்' மூலம் கதையில கொஞ்சம் வித்தியாசம் காட்ட முயற்சி பண்ணிருக்கார்.
முதல் பாதி லைட்டா போகுது... ஆனா இரண்டாம் பாதி முழுக்க எமோஷனல் தான். அந்த சென்டிமென்ட் தான் படத்தை காப்பாத்தி இருக்கு என்று சொல்லலாம்.
மொத்தமாக பார்க்கும்போது 'ஹேப்பி ராஜ்' ஒரு மாஸ் கமர்ஷியல் படம் இல்லை. ஆனா, ஒரு குடும்பம், ஒரு தந்தை - மகன் உறவு, சமூக விமர்சனம் எல்லாம் சேர்த்து பேசும் ஒரு எமோஷனல் படம்.
தியேட்டரில் பார்க்க முடியாதவர்கள், ஓடிடியில் வந்த பிறகு இந்த படத்தை கண்டிப்பா பார்க்கலாம் என்று ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள்.
இப்போ எல்லாரும் காத்திருக்கிற கேள்வி ஒன்றுதான் - ஓடிடியில் வந்த பிறகு இந்த படம் இன்னும் பெரிய வரவேற்பு பெறுமா?
-
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
Heartbeat Season 3: “ஹார்ட் பீட் சீசன் 3 எப்போது?" காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி! -
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications