Hotstar OTT: ஜியோ ஹாட்ஸ்டாரில், மிஸ் பண்ணக்கூடாத 4 மிரட்டலான தமிழ் த்ரில்லர் படங்கள்.. ரிவ்யூ இதோ
சென்னை: ஓடிடி தளங்களில் படம் பார்க்கிற பழக்கம் அதிகரித்த இந்த காலத்தில், ஜியோ ஹாட்ஸ்டாரில் படங்களே படங்களாக குவிந்து கிடக்குது. அதுல உண்மையிலேயே தரமான த்ரில்லர் படங்களை தேர்ந்தெடுத்து பார்ப்பது பல பேருக்கு சிரமமா இருக்கு.
த்ரில்லர் படம் என்றாலே, "அடுத்த சீன்ல என்ன நடக்கப்போகுது?" ன்னு நம்மளை சீட்டின் நுனிக்கு கொண்டு வந்து உட்கார வைக்கும். அந்த மாதிரி விறுவிறுப்பான அனுபவத்தை தரக்கூடிய, ரொம்ப பேர் கவனிக்காம விட்ட 4 நல்ல படங்களை இங்கே தொகுத்து கொடுக்குறோம். இந்த லிஸ்ட்ல இருக்குற படங்களை இன்னும் பார்க்காதவர்கள் கண்டிப்பா மிஸ் பண்ணிட்டோம் போல இருக்கேன்னு ஃபீல் பண்ணுவாங்க.

1) ரங்கூன்
தங்கக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் ரங்கூன். கடத்தல், அதுக்குள்ள நடக்கும் அரசியல், பவர் கேம், அதோடு காதல், நட்பு, துரோகம் எல்லாம் கலந்து படம் நகரும்.
கெளதம் கார்த்திக்கின் கேரியரில் இது ஒரு நல்ல அண்டர்ரேட்டட் படம். இந்த படத்தை இயக்கியது ராஜ்குமார் பெரியசாமி. பிறகு சிவகார்த்திகேயனை வைத்து பெரிய ஹிட் கொடுத்தவர் என்பதால், இப்போ இந்த படத்தை பார்த்தா அவருடைய ஆரம்ப கால முயற்சியின் தரம் புரியும்.
பெரிய கமர்ஷியல் ஹீரோயிசம் இல்லாம, கதை மையமா போகும் த்ரில்லர் படங்களை விரும்புறவர்களுக்கு ரங்கூன் நல்ல சாய்ஸ்.
2) ராஜ தந்திரம்
ராஜ தந்திரம் என்பது தமிழ் சினிமா ரசிகர்கள் கொஞ்சம் கவனிக்காம விட்ட நல்ல த்ரில்லர் படம். மூன்று நண்பர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் தான் கதையின் அடிப்படை.
இந்த படத்துல ஹீரோ ஒரு கொள்ளையடிக்கப் போறதுக்கு முன்பே அந்த இடத்தோட ஓனருக்கே போன் போட்டு,
"நான் இப்படி தான் கொள்ளை அடிக்கப்போறேன், முடிஞ்சா தடுத்துக்கோ"ன்னு சொல்வார்.
இந்த ஒரு விஷயமே படத்தை வித்தியாசமா காட்டும். ஸ்கிரீன்ப்ளே ரொம்ப ஸ்மார்ட். ஒவ்வொரு சீனும் அடுத்ததை எதிர்பார்க்க வைக்கும். பெரிய விளம்பரம் இல்லாம போனாலும், த்ரில்லர் ரசிகர்களுக்கு இது ஒரு நல்ல ட்ரீட்.
3) குற்றமே தண்டனை
மணிகண்டன் இயக்கத்தில் வந்த படம் தான் குற்றமே தண்டனை. இது வழக்கமான போலீஸ் விசாரணை த்ரில்லர் மாதிரி இல்ல. மனித மனசுக்குள்ள நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.
கண் பார்வை மெதுவாக குறைந்து வரும் ஹீரோ இருக்கும் பகுதியில், கீழ் தளத்தில் தங்கியிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் மர்மமான முறையில் கொலை செய்யப்படுவார். அந்த கொலைக்குப் பிறகு ஹீரோவின் மனசாட்சிக்குள் நடக்கும் குழப்பம் தான் படத்தின் முக்கியமான புள்ளி.
மெதுவாக நகரும் கதை என்றாலும், படம் முடிஞ்ச பிறகும் மனசுக்குள்ள ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான த்ரில்லர் இது.
4) கண்ணூர் ஸ்குவாட்
இந்த மூன்று தமிழ் படங்களோடு சேர்த்து, ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் ஒரு மிரட்டலான த்ரில்லர் படம் தான் மம்முட்டி நடித்த கண்ணூர் ஸ்குவாட்.
இந்த படம் ஒரு ரியல் இன்சிடென்ட்டை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட போலீஸ் த்ரில்லர். வட மாநிலங்களுக்கு சென்று அண்டர் கவர் ஆபரேஷன்ல ஈடுபடும் கேரள போலீஸ் டீம் பற்றிய கதை. மம்முட்டி இதில் ஒரு சாதாரண போலீஸ் அதிகாரியாகவே வருவார். பெரிய மாஸ் பில்ட்அப் இல்ல, ஹீரோயிசம் ஓவரா இல்ல - ரியலிஸ்டிக்கா ஒரு விசாரணை குழு எப்படி வேலை செய்கிறது என்பதைக் காட்டும் படம்.
மம்முட்டியின் நடிப்பு இந்த படத்துக்கு பெரிய பலம். ஸ்லோ பில்ட்-அப் ஆனாலும், கடைசி வரை டென்ஷனை மெயிண்டெயின் பண்ணும் ஒரு க்ரைம் த்ரில்லர் அனுபவம் கிடைக்கும்.
இந்த வார இறுதிக்கு ஒரு பர்ஃபெக்ட் த்ரில்லர் லிஸ்ட்
ஜியோ ஹாட்ஸ்டாரில் ரங்கூன், ராஜ தந்திரம், குற்றமே தண்டனை, கண்ணூர் ஸ்குவாட்... இந்த நாலு படங்களையும் ஒரே லிஸ்ட்ல சேர்த்து பார்த்தா, ஒவ்வொரு படமும் வேற வேற ஸ்டைலில த்ரில்லரை அனுபவிக்க வைக்கும். ஒரு படம் கடத்தல் பின்னணி, இன்னொன்று கொள்ளை த்ரில்லர், இன்னொன்று மனசாட்சியை தொட்டுக்காட்டும் கதை, கடைசில ரியல் போலீஸ் ஆபரேஷன் - நாலு விதமான அனுபவம்.
வீட்டிலேயே ஓடிடியில் நல்ல த்ரில்லர் படம் பார்த்து டைம் பாஸ் பண்ணலாம்னு நினைக்கிறவங்களுக்கு இது ஒரு நல்ல லிஸ்டா இருக்கும்.












Click it and Unblock the Notifications