Thalaivar Thambi Thalaimayil OTT: ஓடிடிக்கு வரும் தலைவர் தம்பி தலைமையில்.. எப்போ, எதில் பார்க்கலாம்?
சென்னை: 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக பயணித்து வரும் ஜீவாவுக்கு, இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆன 'தலைவர் தம்பி தலைமையில்' படம் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவான இந்த படம், முதலில் ஜனவரி 30-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் பொங்கல் ரேஸில் விஜய்யின் 'ஜனநாயகன்' படம் ஜகா வாங்கியதால், அதிரடியாக ஜீவாவின் படம் பொங்கல் ரிலீஸாக திரைக்கு வந்தது.
பொங்கலுக்கு ரிலீஸ் ஆன படங்களில், வசூல் ரீதியாக அதிக லாபம் ஈட்டிய படமாக 'தலைவர் தம்பி தலைமையில்' தான் அமைந்தது. குடும்பங்கள் சேர்ந்து பார்க்கும் வகையில் நகைச்சுவை கலந்த கதைக்களம், ஜீவாவின் இயல்பான நடிப்பு, தம்பி ராமையா, இளவரசு போன்ற கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்களின் காமெடி ஆகியவை ரசிகர்களை தியேட்டர்களுக்கு இழுத்தன. குறிப்பாக, 'குக் வித் கோமாளி' சர்ஜின் மற்றும் ஜென்சம் பிரபாகர் ஆகியோரின் காட்சிகள் இளம் ரசிகர்களிடம் நல்ல ரீச் பெற்றதாக பேசப்படுகிறது.

மலையாள இயக்குனர்
மலையாளத்தில் 'பெலிமி' என்ற பிளாக்பஸ்டர் ஹிட்டை கொடுத்த நிதிஷ் சகாதேவ், தமிழில் இயக்கிய முதல் படமே 'தலைவர் தம்பி தலைமையில்'. முதல் தமிழ் படமே பெரிய ஹிட்டாக அமைந்தது இயக்குநருக்கும் பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. ஜீவாவுக்கு ஜோடியாக பிரார்த்தனா நடித்திருந்தார். தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரித்த இந்த படம், சுமார் ரூ.6 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, பாக்ஸ் ஆபிஸில் ரூ.35 கோடிக்கு மேல் வசூல் செய்து தயாரிப்பாளர்களுக்கு பெரிய லாபத்தை கொடுத்துள்ளது.
தலைவர் தம்பி தலைமையில் வசூல் நிலவரம்
கடந்த சில ஆண்டுகளாக ஜீவாவுக்கு குறிப்பிடத்தக்க ஹிட் படங்கள் இல்லாத நிலையில், 'தலைவர் தம்பி தலைமையில்' படம் அவரது கேரியரில் ஒரு கம்பேக் படமாக அமைந்துள்ளது. இந்த படம் மூலம் ஜீவா மீண்டும் குடும்ப ரசிகர்களை தியேட்டர்களுக்கு கொண்டு வந்தார் என்றே சொல்லலாம். அதனால் தான், இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்யவும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தலைவர் தம்பி தலைமையில் ஓடிடி ரிலீஸ்
இந்நிலையில், இந்த ஹிட் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது. வரும் பிப்ரவரி 12 முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த படம் ஸ்ட்ரீம் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டரில் பெரிய வரவேற்பைப் பெற்ற இந்த படம், ஓடிடியில் வெளியாகும் போது தமிழில் மட்டுமல்லாமல், பிற மொழி ரசிகர்களிடமும் நல்ல ரெஸ்பான்ஸை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொங்கல் விடுமுறையில் தியேட்டரில் மிஸ் செய்தவர்கள் மற்றும் குடும்பத்துடன் வீட்டில் சுலபமாக ஒரு எண்டர்டெயினிங் படம் பார்க்க விரும்புவோர், 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தை ஓடிடியில் பார்க்கலாம் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications