Kalamkaval OTT: வில்லனாக மம்மூட்டி நடித்த "களம் காவல்” ஓடிடிக்கு வரப்போகுது! அதுவும் எப்போ, எதில் பார்க்கலாம்?
சென்னை: மம்மூட்டி நடித்த “களம்காவல்” திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் பரபரப்பு குறையாத நிலையில், இப்படத்தின் டிஜிட்டல் வெளியீட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் சோனிலிவ் தளத்தில் வெளியாகவுள்ள இந்தப் படம், ஆன்லைன் வெளியீட்டிற்கான பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி விரிவாக பார்க்கலாம்.
ஜிதின் கே ஜோஸ் இயக்கத்தில் உருவான களம்காவல், ஒரு விறுவிறுப்பான க்ரைம் திரில்லர் வகையைச் சேர்ந்தது. இதில் மம்மூட்டி, விநாயகன், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிதின் கே ஜோஸ் மற்றும் ஜிஷ்ணு ஸ்ரீகுமார் இணைந்து திரைக்கதையை எழுதியுள்ளனர். மம்மூட்டி கம்பெனி தயாரித்துள்ள இப்படத்தை, துல்கர் சல்மானுக்குச் சொந்தமான வேஃபேரர் ஃபிலிம்ஸ் நிறுவனம் கேரளா முழுவதும் விநியோகித்துள்ளது.

படத்தின் தொழில்நுட்ப பிரிவில், ஃபைசல் அலியின் ஒளிப்பதிவு தீவிரமான சூழலை அழகாகப் படம்பிடித்துள்ளது. பிரவீன் பிரபாகரின் படத்தொகுப்பு, கதையின் விறுவிறுப்பான வேகத்தைப் பராமரித்துள்ளது. முஜீப் மஜீத் இசையமைத்துள்ள பாடல்களும் பின்னணி இசையும் களம்காவல் படத்தின் ஒட்டுமொத்த தாக்கத்தை வலுப்படுத்தி, பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.
இந்த படத்தின் ஒன் லைன் கதையை சொல்ல வேண்டும் என்றால் "சைக்கோ கொலையாளியின் கதை தான்.” பெண்களை காதல் வலையில் வீழ்த்தி கொலை செய்கிறார். அவனைத் தடுக்க காவல்துறை மேற்கொள்ளும் தீவிரத் தேடலை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. இந்த கதையை கேட்டதும் உங்களுக்கு அப்போ மம்மூட்டி கதாநாயகனாகவும் விநாயகன் வில்லனாக இருப்பார் என்று நினைக்கலாம். ஆனால் இங்கே கதையே மாறி இருக்கிறது. சைக்கோ வில்லனாக தான் மம்மூட்டி நடித்திருக்கிறார். இவரை இதுவரைக்கும் இல்லாத கோணத்தில் இந்த படத்தில் பார்க்க முடிகிறது. சயனைடு மோகன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்தில் வில்லனாக மம்மூட்டி மிரள வைத்திருக்கிறார்.
திரையரங்குகளில் களம்காவல் திரைப்படம் பெரும் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. வெளியான மூன்று நாட்களில் இந்தியா முழுவதும் ₹16.35 கோடி நிகர வசூலை எட்டியது. மம்மூட்டியின் சிக்கலான, வில்லன் கேரக்டரின் மிரட்டலான நடிப்பால் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. உறுதியான காவல்துறை அதிகாரியாக நடித்த விநாயகனும் தனது உணர்வுபூர்வமான நடிப்பால் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். இந்த இருவரின் பங்களிப்பும் படத்தின் வெற்றிக்கு கணிசமாக உதவியுள்ளது.
“களம்காவல்” படத்தின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமைகளை சோனிலிவ் தளம் பெற்றுள்ளது. திரையரங்குகளில் கிடைத்த அமோக வெற்றிக்குப் பிறகு, இப்படம் பல்வேறு மொழிகளில் டிஜிட்டலில் வெளியிடப்படவுள்ளது. ஓடிடி வெளியீட்டை சோனிலிவ் உறுதிப்படுத்தியுள்ள போதிலும், துல்லியமான தேதி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ஆனாலும் ஜனவரி கடைசி வாரத்தில் களம் காவல் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். படத்தின் வலுவான பாக்ஸ் ஆபிஸ் வசூல் காரணமாக, அதன் ஓடிடி வெளியீடும் திரில்லர் பட ரசிகர்களை அதிகமாக ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications