Kara OTT release: ஓடிடிக்கு வந்த தனுஷின் "கர”.. அதுவும் எப்போ, எதில் பார்க்கலாம்? வெளியான தகவல்
சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்த 'கர' திரைப்படம், தியேட்டரில் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறாமல் ஏமாற்றமளித்த நிலையில், தற்போது ஓடிடியில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க தயாராகி உள்ளது.

கர படத்தின் பின்னணி
'போர் தொழில்' போன்ற தரமான திரில்லர் படத்தை கொடுத்து கவனம் பெற்ற இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவான படம் என்பதால், 'கர' திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே பெரிய ஹைப் பெற்றிருந்தது. அதோடு தனுஷ் கதாநாயகனாக நடித்தது, அவருக்கு ஜோடியாக இளம் சென்சேஷன் மமிதா பைஜு நடித்தது, இசைக்கு ஜிவி பிரகாஷ் குமார் இருந்தது என படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
மேலும் கே.எஸ்.ரவிக்குமார், எம்.எஸ்.பாஸ்கர், கருணாஸ் உள்ளிட்ட அனுபவம் மிக்க நடிகர்களும் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்திருந்த இந்த படம், 100 கோடி வசூல் கிளப்பும் என பலரும் கணித்திருந்தனர்.
வசூலில் ஏமாற்றம்
ஆனால் படம் வெளியான பிறகு நிலைமை தலைகீழானது. ஆரம்ப ஹைப் இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் படம் பெரிய அளவில் connect ஆகவில்லை. குறிப்பாக மந்தமான திரைக்கதை மற்றும் எதிர்பார்த்த அளவுக்கு சுவாரஸ்யம் இல்லாத கதையம்சம் காரணமாக, படம் தியேட்டர்களில் நீண்ட நாட்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் போனது.

பாக்ஸ் ஆபிஸ் தரவுகளின்படி, 'கர' திரைப்படம் உலகளவில் சுமார் ரூ.53 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில்தான் அதிக வசூல் கிடைத்தாலும், தனுஷ் படத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட பெரிய வெற்றியாக இது அமையவில்லை. இதனால் இந்த படம் தனுஷின் சமீபத்திய ஏமாற்றங்களில் ஒன்றாகவே பேசப்பட்டது.
ஆனால் தியேட்டரில் ஏமாற்றமளித்த பல படங்கள் ஓடிடியில் மாஸ் காட்டிய வரலாறு ஏராளம். அந்த பட்டியலில் 'கர' சேருமா என்ற எதிர்பார்ப்பு இப்போது எழுந்திருக்கிறது.
கர படத்தின் ஓடிடி அப்டேட்
அதன்படி, 'கர' திரைப்படம் வரும் மே 28ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் படம் ஸ்ட்ரீமிங் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.
சில படங்கள் தியேட்டரில் தோற்றாலும், வீட்டில் குடும்பத்துடன் பார்க்கும்போது நல்ல வரவேற்பைப் பெறும். அதேபோல தனுஷின் 'கர'க்கும் ஓடிடியில் ரசிகர்கள் புதிய தீர்ப்பு கொடுப்பார்களா என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது.
தியேட்டரில் மிஸ் பண்ணியவர்கள், ஓடிடியில் இந்த படத்துக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறீங்களா?
-
ரகுவரனின் I Know I Know மேனரிசத்துக்கு பின்னால் உள்ள நிஜ மனிதர் யார்? வெளிவரும் அதிர்ச்சி பின்னணி -
பாக்ஸுக்குள் இருந்த வைரக்கல்... பாரதிராஜாவின் அந்த ஒரு முடிவால் ராதாரவிக்கு ஏற்பட்ட வருத்தம் என்ன? -
தேனி மண்ணில் பாரதிராஜா உடல் .. கை குழந்தைகளுடன் காத்திருக்கும் பெண்கள்.. பிரபலங்களின் நெகிழ்ச்சி செயல் -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications