Mask OTT: ஓடிடிக்கு வரும் கவினின் மாஸ்க்.. எப்போ? எதில் பார்க்கலாம்? வெளியான தகவல்
சென்னை: நடிகர் கவின், ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற மாஸ்க் படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. எந்த தளத்தில்? எப்போது வெளியாக போகிறது? என்று விரிவாக பார்க்கலாம்.
கடந்த மாதத்தில் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கவின் நடித்த மாஸ்க் படம் வெளியானது. இந்த படத்திற்கு முன்பு கவின் நடிப்பில் வெளியான இரண்டு படங்கள் தொடர்ச்சியாக தோல்வியை அடைந்ததால் இந்த படமாவது கவிஞனுக்கு கம் பேக் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்போடு இருந்த நிலையில் இந்த படமும் திரையரங்குகளில் பெரிய அளவில் வசூல் செய்யவில்லை.

இந்த படத்திற்கான ப்ரமோஷன்கள் சில கல்லூரிகளில் நடைபெற்றது. கல்லூரிக்கு சென்றதும் கவின் இந்த படம் வெள்ளிக்கிழமை வரப்போகிறது இதனால் நீங்க முதல் நாள் எல்லோரும் வரணும் என்று அவசியம் இல்லை. காலேஜ் கட் அடிச்சிட்டு படம் பார்க்க போக வேண்டாம். முதலில் படிப்பு, பிறகு தான் படம். அதனால் விடுமுறை நாட்களில் படத்தை பார்த்துக் கொள்ளுங்கள் என்று அட்வைஸ் சொல்லியிருந்தார். இதை சிலர் பாராட்டி வந்தனர், சிலர் ரோல் செய்து வந்தனர்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் கவின் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் இந்த படம் விமர்சர்களிடம் பாராட்டை பெற்றிருந்தது. நல்ல கதை வேகம், திரைக்கதையும் கொண்ட படம் என்பதால் மாஸ்க் கவினுக்கு ஒரு பிளாக் பஸ்டர் ஆகும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் பாக்ஸ் ஆபீஸ் பெரிய அளவில் வசூல் கொடுக்கவில்லை. இந்த படத்தில் கவின் மற்றும் ஆண்ட்ரியாவுக்கு மட்டுமல்லாமல் சார்லிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.
மொத்தமாக இந்த படம் 10 கோடி வரை மட்டுமே வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. மாஸ்க் படம் வந்த நேரத்தில் வெளியான மற்ற படங்கள் இதைவிட மோசமாக வசூல் செய்திருந்தது. இந்த நிலையில் தற்போது மாஸ்க் படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவல் கிடைத்திருக்கிறது. அதன்படி மாஸ்க் படம் ஜி 5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் ஒடிடி உரிமையை வாங்கியுள்ள ஜீ 5 நிறுவனம் டிசம்பர் 19ஆம் தேதி முதல் இப்படத்தை ஸ்ட்ரீம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சில படங்கள் தியேட்டரில் பெரிய அளவில் பேசப்படாமல் போனாலும் ஓடிடிக்கு வந்த பிறகு அதிகமாக பேசப்படுகிறது. ஆனால் ஒரு சில படங்கள் ஓடிடிக்கு வந்து அதிக அளவில் அடிவாங்கியும் இருக்கிறது. இதனால் மாஸ்க் படம் ஓடிடியில் பாராட்டை வாங்க போகிறதா? அல்லது ஒரு அடி வாங்க போகிறதா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications