Middle Class OTT :ஓடிடிக்கு வரும் மிடில் கிளாஸ்.. எப்போ? எந்த தளத்தில் பார்க்கலாம்? பேமிலி பட ரசிகர்களுக்கு என்ஜாய்
சென்னை: நடிகர் முனிஷ் காந்த் மற்றும் நடிகை விஜயலட்சுமி உட்பட பலர் நடித்த மிடில் கிளாஸ் படம் ஒடிடிக்கு வர இருக்கிறது. அதுவும் எந்த தளத்தில்? எப்போது? வெளியாக்கும் என்ற தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்
சினிமாவில் ஒரு நடிகர் நடித்த கேரக்டர் மக்களுக்கு பிடித்து விட்டால் அந்த கேரக்டரின் பெயருடன் அந்த நடிகரை நினைவுபடுத்திக் கொள்வார்கள். அதேபோலத்தான் நடிகர் முனிஷ்காந்த்க்கு நடந்திருக்கிறது. நடிகர் முனீஸ் காந்தின் நிஜ பெயர் ராமதாஸ். சில வருடங்களுக்கு முன்பு வெளியான முண்டாசுப்பட்டி படத்தில் இவருடைய பெயர் முனிஷ்காந்த் அந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பு கொடுக்க அதையே தன்னுடைய பெயராக மாற்றிக்கொண்டார்.

அவர் தன்னுடைய பெயரை முனிஷ்காந்த் என்று மாற்றிய பிறகு அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தது. அதிலும் கதாநாயகனாக நடிப்பதற்கே வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இயக்குநர் அகத்தியனின் மகளான விஜயலட்சுமி உடன் மிடில் கிளாஸ் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் கடந்த நவம்பர் மாதத்தில் தான் திரையரங்குக்கு வந்தது. இந்த திரைப்படம் தியேட்டரில் நல்ல வரவேற்பு பெற்றது.
குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் 2025ல் அதிகமாக வந்தது. அந்த வரிசையில் மிடில் கிளாஸ் படமும் ஒன்று. பொதுவாக சினிமாவில் சில விஷயங்களை பாலோ பண்ணுவார்கள் ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால் அதே போலவே இன்னும் சில படங்கள் வந்துவிடும். அந்த வரிசையில் டூரிஸ்ட் ஃபேமிலி படம் வெற்றி அடைந்த சமயத்தில் அதை தொடர்ந்து குறைவான பட்ஜெட்டில் படங்கள் வந்து கொண்டே இருந்தது.
அதிலும் முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் தான் வெற்றி பெறும் என்று இல்லை என்று நிரூபிக்கும் வகையில் மிடில் கிளாஸ் படத்தில் முனீஸ் காந்த் ஹீரோவாக நடித்து பலரையும் வியக்க வைத்திருந்தார். மிடில் கிளாஸ் படத்தின் கதைப்படி முனீஸ் அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்னையில் சுமாரான அப்பார்ட்மெண்டில் வாழ்ந்து வருகிறார்.
ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார் முனீஸ். அவருடைய மனைவி ஆடம்பரமாக வாழ ஆசைப்படுகிறார். இதனால் பணம் சம்பாதிக்க படாதபாடு படுகிறார் முனீஷ். ஒருநாள் வீட்டை சுத்தம் செய்யும் போது தன்னுடைய தந்தை 50 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய ஒரு பத்திரம் கிடைக்கிறது. அதில் தன்னுடைய தந்தை ஒரு சேட்டுக்கு தன்னுடைய கடையை இலவசமாக எழுதிக் கொடுத்திருக்கிறார். அவரிடம் சென்று உதவி கேட்கும் படி சொல்ல அந்த சேட் ஒரு கோடிக்கு செக்கு கொடுக்கிறார்.
அந்த செக்கை பேங்குக்கு கொண்டு போகும் வழியில் தொலைந்து போய்விடுகிறது. அந்த செக்கை இவர்கள் கண்டுபிடித்தார்களா? இவர்களுடைய ஆசை கனவு நிறைவேறியதா? என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த படம் தான் இப்போது ஓடிடிக்கு வர இருக்கிறது. அதாவது மிடில் கிளாஸ் படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி ஜி 5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications