Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Netflix-ல் அதிக வியூஸ் பெற்ற டாப் 10 தமிழ் படங்கள்.. விஜய், அஜித்தை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தில் விஜய் சேதுபதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தியேட்டரில் வெளியாகும் திரைப்படங்கள் வசூலை வைத்து வெற்றியா தோல்வியா என்று நிர்ணயிக்கப்படுவது போல ஓடிடியில் ஒரு படம் எவ்வளவு பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது என்பதை கணக்கிடும் முக்கியமான அளவுகோல் தான் வியூஸ் எண்ணிக்கை.

குறிப்பாக Netflix போன்ற முன்னணி ஓடிடி தளங்களில் கிடைக்கும் வியூஸ்கள், அந்த படம் ரசிகர்களை எந்த அளவுக்கு சென்றடைந்திருக்கிறது என்பதை தெளிவாக காட்டுகிறது. அந்த வகையில், Netflix ஓடிடி தளத்தில் அதிக வியூஸ் பெற்ற டாப் 10 தமிழ் படங்களை முதலிடம் முதல் பத்தாவது இடம் வரை இங்கே பார்க்கலாம்.

Netflix Tamil movies Vijay Sethupathi

முதலிடம் - மகாராஜா

Netflix ஓடிடி தளத்தில் அதிக வியூஸ் அள்ளிய தமிழ் படம் என்ற சாதனையை படைத்திருப்பது மகாராஜா. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த இந்த படம், பெரிய மாஸ் ஹீரோ படமாக இல்லாத போதும், அதன் வலுவான கதையும் திரைக்கதையும் காரணமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. Netflix-ல் இதுவரை 2 கோடியே 81 லட்சம் வியூஸ் பெற்று முதலிடத்தில் தொடர்கிறது. இந்த சாதனையை இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இடம் - லியோ

முதலிடத்தை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருப்பது நடிகர் விஜய் நடித்த லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம், திரையரங்குகளில் மாபெரும் வசூலை பெற்றதுடன், Netflix ஓடிடியிலும் அதே வரவேற்பை பெற்றது. விஜயுடன் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம், Netflix-ல் 2 கோடியே 35 லட்சம் வியூஸ் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

மூன்றாம் இடம் - துணிவு

மூன்றாவது இடத்தில் நடிகர் அஜித் நடித்த துணிவு படம் உள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் உருவான இந்த படம், பேங்க் கொள்ளை மற்றும் சமூக அரசியல் கருத்துகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. திரையரங்குகளில் மாபெரும் வெற்றியை பெற்ற இந்த படம், Netflix ஓடிடியில் 1 கோடியே 68 லட்சம் வியூஸ் குவித்து மூன்றாம் இடத்தை தக்க வைத்துள்ளது.

நான்காம் இடம் - அமரன்

நான்காவது இடத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் இடம் பெற்றுள்ளது. கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருந்தார். உணர்ச்சிகரமான கதையால் ரசிகர்களை கவர்ந்த அமரன், Netflix-ல் 1 கோடியே 47 லட்சம் வியூஸ் பெற்று நான்காம் இடத்தில் உள்ளது.

ஐந்தாம் இடம் - தி கோட்

ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பது விஜய் நடித்த தி கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த இந்த படம், 2024-ம் ஆண்டு Netflix ஓடிடியில் வெளியானது. கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், Netflix-ல் 1 கோடியே 34 லட்சம் வியூஸ் பெற்று டாப் 10 பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளது.

ஆறாம் இடம் - வாத்தி

ஆறாவது இடத்தில் நடிகர் தனுஷ் நடித்த வாத்தி படம் உள்ளது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் கல்வி அமைப்பை மையமாக வைத்து உருவான இந்த படம், சமூக கருத்து கொண்ட படங்களுக்கு ஓடிடியில் நல்ல வரவேற்பு இருப்பதை நிரூபித்துள்ளது. Netflix-ல் 1 கோடியே 24 லட்சம் வியூஸ் பெற்று ஆறாம் இடத்தை பிடித்துள்ளது.

ஏழாம் இடம் - இட்லி கடை

ஏழாவது இடத்தில் தனுஷ் இயக்கி, ஹீரோவாக நடித்த இட்லி கடை படம் உள்ளது. டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படம், திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், Netflix-லிலும் 1 கோடியே 20 லட்சம் வியூஸ் குவித்து ஏழாம் இடத்தை தக்க வைத்துள்ளது.

எட்டாம் இடம் - மெய்யழகன்

எட்டாவது இடத்தில் கார்த்தி நடித்த மெய்யழகன் படம் இடம் பெற்றுள்ளது. பிரேம்குமார் இயக்கத்தில், கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடித்த இந்த படம், அதன் உணர்வுப்பூர்வமான கதையால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. Netflix-ல் 1 கோடியே 14 லட்சம் வியூஸ் பெற்று எட்டாம் இடத்தில் உள்ளது.

ஒன்பதாம் இடம் - டிராகன்

ஒன்பதாவது இடத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படம் உள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான இந்த படம், குறிப்பாக இளம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. Netflix ஓடிடியில் 1 கோடியே 9 லட்சம் வியூஸ் பெற்று ஒன்பதாம் இடத்தை பிடித்துள்ளது.

பத்தாம் இடம் - இந்தியன் 2

பத்தாவது இடத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம் இடம் பெற்றுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான இந்த படம், திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், Netflix-ல் 99 லட்சம் வியூஸ் பெற்று டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

Netflix ஓடிடி தளத்தில் தமிழ் படங்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. மாஸ் ஹீரோ படங்களோடு சேர்த்து, கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களும் பெரிய அளவில் சென்றடைவது, தமிழ் சினிமாவின் மாறிவரும் ரசிகர் ரசனையை காட்டுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+