OTT Releases (May 18–24): இந்த வாரம் OTT-யில் செம களியாட்டம்! ஜோதிகா படம் முதல் தமிழ் ஹாரர் வரை
சென்னை: திரையரங்குகளில் தற்போது சூர்யாவின் கருப்பு திரைப்படம் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், புதிய பெரிய படங்களின் வரவு சற்றே குறைந்துள்ளது. ஆனால் அதனால் ஓடிடி ரசிகர்கள் ஏமாந்துவிடவில்லை. இந்த வாரம் மட்டும் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜீ5, ஜியோ ஹாட்ஸ்டார், சோனி லிவ், ஆஹா தமிழ் உள்ளிட்ட தளங்களில் குவிந்துள்ள புதிய ரிலீஸ்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளன.

ஜோதிகா படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு
இந்த வாரத்தின் முக்கிய கவன ஈர்ப்பு ஜோதிகா நடித்துள்ள 'சிஸ்டம்' திரைப்படம் தான். கோர்ட் ரூம் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் ஜோதிகாவுடன் சோனாக்ஷி சின்ஹாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நீதிமன்றத்தை மையமாகக் கொண்ட எமோஷனல் மற்றும் பரபரப்பான கதைக்களம் என்பதால் ரசிகர்களிடம் ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த படம் மே 22ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது.

தமிழ் ரசிகர்களுக்கான வாரண்ட்
தமிழ் ரசிகர்களுக்கான முக்கிய ரிலீஸ்களில் 'வாரண்ட்' வெப் சீரிஸும் ஒன்று. இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் உருவாக்கியுள்ள இந்த க்ரைம் த்ரில்லர் சீரிஸ், போலீஸ் அதிகாரியின் வாழ்க்கை, அதிகார அமைப்பின் அழுத்தங்கள், குற்ற விசாரணை பின்னணி ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளது. பரபரப்பான திரைக்கதை காரணமாக இதற்கும் எதிர்பார்ப்பு அதிகம்.

ஹாரர் ரசிகர்களுக்கு தமிழ் விருந்து
பயமுறுத்தும் படங்களை விரும்புபவர்களுக்கு 'சாத்தான் தி டார்க்' நல்ல தேர்வாக இருக்கலாம். சாந்தினி தமிழரசன் நடித்துள்ள இந்த தமிழ் திகில் படம், மாந்திரீகம், மர்ம சக்திகள், அதிர்ச்சி திருப்பங்கள் ஆகியவற்றுடன் உருவாகியுள்ளது. இந்த படம் ஏற்கனவே அமேசான் பிரைம், ஆஹா தமிழ் தளங்களில் வெளியாகியுள்ளது.

லைட் என்டர்டெயின்மென்ட்
குடும்பமாக அமர்ந்து லைட்டாக ரசிக்க மலையாள ரொமான்டிக் காமெடி 'மதுவிது' வெளியாகிறது. அதேபோல் தெலுங்கு காதல்-காமெடி படமான 'Sathi Leelavathi' மற்றும் காமெடி வெப் தொடரான 'Memu Copulam' ஆகியவையும் இந்த வாரம் ரசிகர்களை கவர காத்திருக்கின்றன.
ஹாலிவுட் ரசிகர்களுக்கும் விருந்து
தமிழ் மட்டும் இல்லை, ஹாலிவுட் ரசிகர்களுக்கும் இந்த வாரம் நிறைய தேர்வுகள் இருக்கின்றன. 'Jack Ryan: Ghost War' ஆக்ஷன் த்ரில்லர், 'The Boroughs' மர்ம சை-ஃபை தொடர், ரியாலிட்டி ஷோ 'Desi Bling', குழந்தைகள் மற்றும் குடும்பத்துக்கான அனிமேஷன் படம் 'GOAT' ஆகியவையும் வெளியாகின்றன.

மொத்தத்தில் என்ன பார்க்கலாம்?
இந்த வாரம் த்ரில்லர், ஹாரர், காமெடி, ரொமான்ஸ், குடும்ப என்டர்டெயின்மென்ட், ரியாலிட்டி ஷோ என எல்லா வகை ரசிகர்களுக்கும் ஏதாவது ஒன்று இருக்கிறது. திரையரங்கிற்கு போக நேரமில்லாதவர்களுக்கு இந்த வாரம் வீட்டிலிருந்தபடியே பெரிய பொழுதுபோக்கு விருந்து காத்திருக்கிறது. "இந்த வாரம் என்ன பார்க்கலாம்?" என்ற கேள்விக்கு ஓடிடி தளங்களே நீளமான பட்டியலுடன் பதில் சொல்லும் அளவுக்கு ரிலீஸ்கள் குவிந்துள்ளன.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications