OTT Releases This Week: இந்த வாரம் ஓடிடிக்கு வரும் ஹிட் படங்கள் இத்தனையா? அதுவும் இந்த படமும் இருக்கு!
சென்னை: திரையரங்குகளில் ஒவ்வொரு வார இறுதியிலும் புது படங்கள் ரிலீஸ் ஆவது போல ஓடிடி தளங்களிலும் அதிகமான படங்கள் மற்றும் வெப்சீரிஸுகள் வந்து கொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில் இந்த வாரம் டிசம்பர் 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரைக்கும் என்னவெல்லாம் படங்கள் வெளியாகப் போகிறது என்று பார்க்கலாம்.
உன் பார்வையில்
நடிகை பார்வதி நாயர் நடித்துள்ள உன் பார்வையில் படம் நேரடியாக வெள்ளிக்கிழமை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் கேரக்டரில் பார்வதி நாயர் நடித்திருக்கிறார். தன்னுடைய கணவர் மற்றும் சகோதரியின் மரணங்களில் இருக்கும் மர்மத்தை இவர் கண்டுபிடிக்கும் துணிச்சலான கேரக்டரில் நடித்திருக்கிறார். திரில்லர் நிறைந்த இந்த படம் ரசிகர்களுக்கு ஃபேவரிட் ஆக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரேமண்டே
நடிகை ஆனந்தி நடித்துள்ள பிரேமண்டே படம் கடந்த மாதம் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த திரைப்படம் வருகின்ற வெள்ளிக்கிழமை முதல் தெலுங்கு, மலையாளம், தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் netflix-ல் வெளியாக இருக்கிறது இந்த படத்தில் நவநீத ஸ்ரீராம் இயக்குனராக அறிமுகம் ஆகி இருக்கிறார். இந்த படத்தில் தெலுங்கு ஹீரோ பிரியதர்ஷி புலிக்கொண்டா கதாநாயகனாக நடித்திருக்கிறார்
ஃபார்மா
டி ஆர் அருண் இயக்கத்தில் நிவின் பாலி, ரஜித், கபூர், நரேன், வீனா நந்தகுமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான சீரிஸ் தான் பார்மா. ஒரு மெடிக்கல் விற்பனை பிரதிநிதி தான் விற்க்கும் மருந்து நோயாளிகளுக்கு தீங்கு விளைவிப்பதை கண்டறிந்து கார்ப்பரேட் சக்திகளுக்கு எதிராக போராடும் கதை தான் இது. இந்த சீரிஸ் வரும் வெள்ளிக்கிழமை ஜியோ ஹாட்ஸ்டாரில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
மிஸஸ் தேஷ்பாண்டே
ஒரு அம்மா மகனுக்கு இடையினால உறவை சொல்லும் மிஸஸ் தேஷ்பாண்டே வருகிற வெள்ளிக்கிழமை முதல் தமிழ் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. அதுமட்டுமல்லாமல் 20க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
-
வெறும் ₹200 கட்டினால் போதும் ரூ.1,500க்கு பலன்கள்! ஜியோ கொட்டி தரும் ஆஃபர்.. ஆனா ஒரு குட்டி கண்டிஷன் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications