OTT Releases This Week: ஓடிடியில் இந்த வாரம் என்ன படம், வெப் சீரிஸ் வருது? வாங்க பார்க்கலாம்!
சென்னை: ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் தியேட்டரில் புதிய படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. தியேட்டருக்கு சென்று பார்க்க முடியாத ரசிகர்கள் வீட்டிலிருந்தபடியே பார்ப்பது போலவே ஓடிடியிலும் வெள்ளிக்கிழமை தோறும் பல புது படங்கள் இறங்கி கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் இந்த வாரத்தில் எந்த படம் எல்லாம் வரப்போகிறது என்று பார்க்கலாம்.
தியேட்டருக்கு போய் படம் பார்க்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் மக்கள் வீட்டில் இருந்தபடியே படங்கள் மற்றும் வெப் சீரிஸை பார்த்து வருகிறார்கள். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாகும் படங்கள் எட்டு வாரம் கழித்து ஓடிடிக்கு வந்து விடுகிறது. இதனாலேயே கூட்டத்தில் முந்தி அடித்து போய் தியேட்டரில் படம் பார்க்காமல் வீட்டில் இருந்து, வீட்டு வேலைகளையும் பார்த்தபடியே பாடம் பார்க்கலாம் என்று காத்திருப்போர் ஏராளமானோர் இருக்கிறார்கள்.

அதிலும் netflix, amazon , ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் என்ன படங்கள் வெளியாக போகிறது என்று எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது. ஒரு சில நேரங்களில் தியேட்டரில் அதிகமான ரசிகர்களால் ரசிக்கப்படாத படங்கள் கூட ஓடிடியில் வந்த பிறகு பாராட்டு வாங்கி இருக்கிறது. சில படங்கள் தியேட்டரில் வெற்றி பெற்றாலும் ஓடிடிக்கு வந்த பிறகு ட்ரோலில் சிக்கிய சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கிறது.
காந்தா படம்
இந்த வாரம் ஓடிடியில் நடிகர் துல்கர் சல்மான் நடித்து 14ஆம் தேதி வெளியான காந்தா படம் நாளை நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது. தமிழ் தெலுங்கில் வெளியான இந்த படம் தியேட்டரில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனால் ஓடிடியில் வரவேற்பை பெறுமா? அல்லது இன்னும் ட்ரோல் ஆகுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் படம் பெரிய அளவில் வெற்றி கொடுத்தது ஆனால் இந்த படம் இனி ஓடிடியில் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
ஆரோமலே படம்
அடுத்ததாக கிஷன் தாஸ், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்து நவம்பர் 7ஆம் தேதி வெளியான ஆரோமலே படம் ஹாட்ஸ்டார் தளத்தில் நாளை 12ம் தேதி வெளியாக இருக்கிறது.
தீயவர் கொலை நடுங்க படம்
அடுத்ததாக நடிகர் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான தீயவர் கொலை நடுங்க படம் சன் நெக்ஸ்ட் தளத்தில் நாளை வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமான இருந்த நிலையில் தியேட்டரில் இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் ஓடிடியில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அர்ஜுன் ரசிகர்களுக்கு இருக்கிறது.
அதேபோல 3 ரோசஸ் வெப் சீரிஸின் இரண்டாவது பாகம் நாளை ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கில வெப் சீரிஸ்களும் சில படங்களும் நாளை வெளியாகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications