OTT: இந்த வாரம் போட்டி ஜனநாயகன், பராசக்திக்கு மட்டுமல்ல! ஜனவரி 9ல் ஓடிடியில் இத்தனை படம் வருதே
சென்னை: ஜனவரி மாதத்தின் இரண்டாவது வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு விறுவிறுப்பானதாக அமைய உள்ளது. க்ரைம், அரசியல், வரலாறு, ரொமான்ஸ், ஆக்சன், ஹாரர் என அனைத்து ஜானர்களையும் உள்ளடக்கிய பல படங்கள் மற்றும் வெப் தொடர்கள் இந்த வாரம் முன்னணி ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. தியேட்டரில் இந்த வாரம் 9ஆம் தேதி ஜனநாயகன், பராசக்தி மோத இருக்கும் நிலையிலும் ஓடிடியில் அதற்கு குறைவில்லாத வகையில் பல படங்கள், வெப் சீரிஸ் வெளியாக இருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்

ஜனவரி 9 ஓடிடி ரிலீஸ் படங்கள்
அங்கம்மாள்
சமூகத்தின் ஒரே மாதிரியான பழக்கவழக்கங்களை எதிர்க்கும் ஒரு பெண்ணின் கதை. தலைமுறை இடைவெளி, குடும்ப மோதல்கள் ஆகியவற்றை ஆழமாக பேசும் இந்த படம், ஜனவரி 9 முதல் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகிறது.
பீப்பிள் வீ மீட் ஆன் வெக்கேஷன்
பத்து வருட நட்பு, பயணங்கள் மற்றும் சொல்லப்படாத உணர்வுகள் காதலாக மாறும் போது என்ன நடக்கும் என்பதையே மையமாக கொண்ட ரொமான்டிக் டிராமா. இந்த படம் ஜனவரி 9 முதல் நெட்ஃபிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகிறது.
எ தௌசண்ட் ப்ளோஸ் - சீசன் 2
முதல் சீசனின் அதிரடி முடிவுக்குப் பிறகு ஒரு வருடம் கழித்து கதை தொடங்குகிறது. லண்டன் ஈஸ்ட் எண்டின் நிழல் உலகம் கதைக்களமாக இருக்கும் இந்த தொடர், ஜனவரி 9 முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
தி நைட் மேனேஜர் - சீசன் 2
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜொனாதன் பைன் மீண்டும் உளவு உலகில் கால் வைக்கிறார். சர்வதேச ஆயுத வர்த்தகம் மற்றும் அரசியல் சதித்திட்டங்களை மையமாக கொண்ட இந்த தொடர், ஜனவரி 11 முதல் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.
மாஸ்க்
நடிகர் கவின் நடிப்பில், ஒரு தனியார் துப்பறிவாளரின் வாழ்க்கையில் சிக்கும் அரசியல் குற்றங்கள் மற்றும் மோசடிகளை மையமாக கொண்ட க்ரைம் த்ரில்லர் தான் மாஸ்க். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் பின்னால் ஒரு மறைமுக முகம் இருப்பதாக கதை நகர்கிறது. இந்த படம் ஜனவரி 9 முதல் ஜீ5 ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகிறது.
ஃப்ரீடம் அட் மிட்நைட் - சீசன் 2
இந்திய சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் நடந்த அரசியல் மற்றும் சமூக மோதல்களை மனிதநேயக் கோணத்தில் சொல்லும் வரலாற்றுத் தொடர். சோனி லிவ் ஓடிடியில் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
ஹனிமூன் சே ஹத்யா
நிஜ வாழ்க்கை கொலைகளை அடிப்படையாக கொண்ட ட்ரூ க்ரைம் டாக்குமெண்டரி. திருமண உறவுகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் மனதின் இருண்ட பக்கங்களை வெளிப்படுத்தும் இந்த தொடர், ஜனவரி 9 முதல் ஜீ5-ல் வெளியாகிறது.
பால்டி
கபடி வீரர்களின் வாழ்க்கையில் சில தவறான விஷயங்களால் ஏற்படும் மாற்றங்களை மையமாக கொண்ட ஆக்சன் த்ரில்லர். நட்பு, துரோகம், பழிவாங்கல் ஆகிய உணர்வுகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஜனவரி 9 முதல் பிரைம் வீடியோவில் ரிலீஸ் ஆகிறது.
தே தே பியார் தே 2
வயது வித்தியாசத்துடன் காதலிக்கும் ஆஷிஷ் - ஆயிஷா ஜோடியின் கதை அடுத்த கட்டத்திற்கு செல்கிறது. இம்முறை குடும்ப சம்மதமே முக்கிய சவாலாகிறது. குடும்ப மதிப்புகள் மற்றும் இரட்டை நிலைப்பாடுகளை கேள்வி கேட்கும் இந்த படம் ஜனவரி 9 அன்று நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது.
ஹிஸ் அண்ட் ஹர்ஸ்
ஒரு கொலை வழக்கு, இரண்டு தம்பதிகள், இருவிதமான பார்வைகள். யார் உண்மை பேசுகிறார்கள்? யார் பொய் சொல்கிறார்கள்? என்ற கேள்விகளுடன் நகரும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர். இந்த படம் ஜனவரி 8 முதல் நெட்ஃபிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகிறது.
அகண்டா 2 - தாண்டவம்
நந்தமுரி பாலகிருஷ்ணா, போயபதி ஸ்ரீனு கூட்டணியில் உருவான அதிரடி ஆக்சன் படம். ஆன்மீக கூறுகள் நிறைந்த கதையில் பாலகிருஷ்ணா அகண்டா வேடத்தில் நடித்துள்ளார். ஜனவரி 9 முதல் நெட்ஃபிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகிறது.
தி பிட் - சீசன் 2
பிட்ஸ்பர்க் மருத்துவ மையத்தில் ஒரே ஒரு ஷிப்டை மையமாக கொண்டு நகரும் உயர் பதட்ட மருத்துவ ட்ராமா. சைபர் தாக்குதல், அவசரநிலைகள் கதையை வேகமாக நகர்த்தும். ஜனவரி 9 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
வெப்பன்ஸ்
ஒரே நேரத்தில் 17 குழந்தைகள் காணாமல் போவது ஒரு சிறிய நகரத்தை உலுக்குகிறது. விசாரணையில் மூடநம்பிக்கைகள் மற்றும் அமானுஷ்ய சக்திகள் வெளிப்படும் இந்த ஹாரர்-மிஸ்டரி படம், ஜனவரி 8 முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் மற்றும் தொடர்கள், அனைத்து வயது ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் பல்வேறு ஜானர்களில் உருவாகியுள்ளது. திரையரங்குகள் மட்டுமல்ல, ஓடிடியும் இந்த வாரம் ரசிகர்களின் கவனத்தை முழுமையாக கவரும் என்றே சொல்லலாம்.












Click it and Unblock the Notifications