This week OTT: இந்த வாரம் ஓடி டிவியில் ஒரே கொண்டாட்டம்… ‘பராசக்தி’ முதல் ‘கொம்பு சீவி’ வரை லிஸ்ட் ரெடி!
சென்னை: (This week's OTT releases) இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான். தியேட்டருக்கு போக முடியல, வீட்டிலயே புதுப் படங்கள், வெப் சீரிஸ் எல்லாம் பார்த்து என்ஜாய் பண்ணலாம் என்றவர்களுக்கு, பிப்ரவரி முதல் வாரம் கைகூடும். சுதா கொங்கரா இயக்கிய பெரிய படம் 'பராசக்தி' தொடங்கி, ஷர்வானந்தின் லைட் ரொமான்ஸ் காமெடி படம், சண்முக பாண்டியனின் ஆக்ஷன் டிராமா படம் வரை வெவ்வேறு ஜானர் படங்கள் இந்த வாரம் ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகுது.

1. பராசக்தி - Zee5 (பிப்ரவரி 7 முதல்)
(Parasakthi OTT) சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடிச்ச 'பராசக்தி' தியேட்டர்ல நல்ல ஓட்டம் ஓடி, 100 கோடி ரூபாய்க்கு மேல வசூல் அடிச்ச படம். மொழித் திணிப்பு, அரசியல் பின்னணி, சமூக பிரச்சனைன்னு சீரியஸான விஷயங்களை வைத்து எடுத்த படம் என்பதால், தியேட்டரில் பார்க்க தவறியவர்கள் இப்போ ஜீ5-ல ரிலாக்ஸா வீட்டிலிருந்து பார்க்கலாம். சமூக கருத்து கொண்ட படங்களை விரும்புறவர்களுக்கு இது மஸ்ட் வாட்ச்.
2. கொம்பு சீவி - Tentkotta (பிப்ரவரி 6 முதல்)
(Kombu Seevi OTT) மறைந்த கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவா நடிச்ச படம் தான் 'கொம்பு சீவி'. பொன்ராம் இயக்கம், யுவன் ஷங்கர் ராஜா இசை. 90-களில் தென் தமிழக பின்னணியில் நடக்குற கிராமத்து கதை. சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்துல நடித்திருக்கார். கிராமத்து கலாச்சாரம், குடும்ப சென்டிமெண்ட், ஆக்ஷன் எல்லாம் கலந்த படங்களை விரும்புறவர்களுக்கு இது பிடிக்கும்.
3. நாரி நாரி நடும முராரி - Amazon Prime Video
நடிகர் ஷர்வானந்த் நடிப்பில் வந்த இந்த படம் காதல் + காமெடி கலந்த லைட்டான எண்டர்டெய்னர். பொங்கல் ரிலீஸா தியேட்டர்ல ஓடிய பிறகு இப்போ பிரைம் வீடியோவுக்கு வருது. ரொம்ப சீரியஸா இல்லாம, ஜாலியா குடும்பத்தோட உட்கார்ந்து பார்க்க கூடிய படம் தேடுறவர்களுக்கு இந்த படம் சரியான சாய்ஸ். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் கிடைக்கும்னு சொல்றாங்க.
4. நீலகண்டா - Sun NXT (பிப்ரவரி 6 முதல்)
மகேந்திரன் நடிப்பில் உருவான 'நீலகண்டா' கிராமப்புற பின்னணியில் சொல்லப்பட்ட ஒரு டிராமா படம். சமீபத்தில்தான் தியேட்டர்ல வந்தது. மிஸ் பண்ணிட்டவர்கள் இப்போ சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நேரடியாக பார்க்கலாம்.
5. Unfamiliar - Netflix (ஜெர்மன் வெப் சீரிஸ்)
தமிழ், இந்திய படங்களே இல்லாம வெளிநாட்டு வெப் சீரிஸ் பார்க்குறவர்களுக்கும் இந்த வாரம் கண்டெண்ட் இருக்கு. 'Unfamiliar'ன்னு ஒரு ஜெர்மன் திரில்லர் சீரிஸ் நெட்ஃபிளிக்ஸ்ல ரிலீஸ் ஆகுது. மர்மம், சஸ்பென்ஸ், த்ரில்லர் பிடிக்கும்னா இதையும் ட்ரை பண்ணலாம்.
இந்த வாரம் ஓடிடில ஒவ்வொரு ஜானருக்கும் ஒரு படம் இருக்கு.- சமூக கருத்து வேண்டும்னா 'பராசக்தி', ஜாலியான காதல் காமெடி வேண்டும்னா 'நாரி நாரி நடும முராரி', கிராமத்து ஆக்ஷன் டிராமா வேண்டும்னா 'கொம்பு சீவி', சீரியஸான கிராமத்து படம் வேண்டும்னா 'நீலகண்டா', வெளிநாட்டு திரில்லர் சீரிஸ் பார்க்கணும்னா 'Unfamiliar'.
அதனால் இந்த வார இறுதி, "என்ன பார்ப்பது?"ன்னு யோசிக்க வேண்டிய நிலை இல்ல... ஓடிடிலேயே புல்லா கொண்டாட்டம் தான்!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications