OTT Releases (May 14–16): இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்.. அதுவும் இந்த படம் எல்லாம் வருது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு நல்ல களியாட்டம் தான். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல்வேறு ஜானர்களில் படங்களும் வெப் சீரியஸ்களும் வெளியாகி உள்ளன. திரையரங்குகளில் பார்க்க முடியாதவர்களுக்கு வீட்டிலேயே புதிய படங்களை அனுபவிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு.

OTT Releases

இந்த வார ஓடிடி ரிலீஸ் பட்டியல் (மே 14 - மே 16)

Oru Durooha Saahacharyathil (மலையாளம்)

காமெடி மற்றும் திரில்லர் கலந்து உருவான இந்த Oru Durooha Saahacharyathil மலையாள படம், சிக்கலான சூழ்நிலைகளில் சிக்கிக் கொள்ளும் கதாபாத்திரங்களின் பயணத்தை சுவாரஸ்யமாக காட்டுகிறது. நெட்பிளிக்ஸ் தளத்தில் (மே 13) நேற்று வெளியாகி இருக்கிறது.

Thimmarajupalli TV (தெலுங்கு)

காமெடி-மிஸ்ட்ரி வகையில் உருவாகியுள்ள Thimmarajupalli TV படம், ஒரு கிராமத்தை மையமாக கொண்டு சுவாரஸ்யமான சம்பவங்களை விவரிக்கிறது. ஆகா ஓடிடியில் மே 15ல் வெளியாக இருக்கிறது.

கப் (Cup)

விளையாட்டு பின்னணியில் உருவான Cup படம், ஒரு அணியின் போராட்டமும் வெற்றியும் பற்றிய உணர்ச்சி மிகுந்த கதையை சொல்லுகிறது. மனோரமா மேக்ஸ் தளத்தில் மே 15 வெளியாக இருக்கிறது.

காளிதாஸ் 2

பரத், அஜய் கார்த்தி, சங்கீதா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் க்ரைம்-திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. மர்மம் மற்றும் விசாரணை கலந்த கதைக்களம் கொண்ட இந்த படம் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. மேலும் இந்த படம் அமேசான் பிரைம், சன் நெக்ஸ்ட், சிம்ப்ளி சவுத், ஆகா தமிழ் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது

Mr. X

ஆர்யா, ரைசா வில்சன், சரத்குமார், மஞ்சு வாரியர் நடித்துள்ள இந்த 'X' ஆக்ஷன்-ஸ்பை திரில்லர் படம், உளவு மற்றும் ரகசிய நடவடிக்கைகள் நிறைந்த கதைக்களத்தை கொண்டுள்ளது. ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் மே 14 இன்று வெளியாகி இருக்கிறது.

Exam (வெப் தொடர்)

துஷாரா விஜயன், அதிதி பாலன் உள்ளிட்டோர் நடித்துள்ள எக்ஸாம் க்ரைம்-திரில்லர் வெப் சீரிஸ், ஒரு எக்ஸாம் சென்டரை மையமாக கொண்டு நடக்கும் பரபரப்பான சம்பவங்களை காட்டுகிறது. அமேசான் பிரைமில் மே 15 வெளியாக இருக்கிறது.

Derby (மலையாளம்)

கல்லூரி பின்னணியில் நடக்கும் காதல், காமெடி மற்றும் ஆக்ஷன் கலந்து உருவான Derby படம் இளைஞர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. அமேசான் பிரைம் & மனோரமா மேக்ஸ் தளத்தில் மே 15 வெளியாக இருக்கிறது.

மொத்தமாக பார்க்கும்போது... இந்த வார ஓடிடி ரிலீஸ்களில் க்ரைம், திரில்லர், காமெடி, ஸ்போர்ட்ஸ், ஆக்ஷன் என அனைத்து வகை ரசிகர்களுக்கும் ஏதாவது ஒன்றாவது இருக்கிறது. குறிப்பாக "Mr. X", "காளிதாஸ் 2", மற்றும் "Exam" போன்றவை அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. திரையரங்குகளில் ரிலீஸ் பிரச்சனைகள் நடக்கும் சூழலில், ஓடிடி தளங்கள் ரசிகர்களுக்கு நல்ல மாற்று பொழுதுபோக்காக மாறி வருகிறது. இந்த வாரம் வெளியான படங்களில் நீங்கள் எந்த படத்தை பார்க்கப் போகிறீர்கள் பாஸ்?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+