OTT: ஓடிடியில் கலக்கும் நயன்தாரா-சிரஞ்சீவியின் “மன ஷங்கர வர பிரசாத் காரு” எப்படி இருக்கு? கதை இதுதான்!
சென்னை: சங்கராந்தி பண்டிகை வெளியீடாக திரையரங்குகளில் வந்த 'மன ஷங்கர வர பிரசாத் காரு' படம் இப்போது ஜி5 ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. படம் முழுக்க முழுக்க குடும்ப ரசிகர்களை குறிவைத்து உருவாக்கப்பட்ட ஒரு எண்டர்டெயினராக அமைந்துள்ளது. மெகா ஸ்டார் Chiranjeevi - லேடி சூப்பர் ஸ்டார் Nayanthara கூட்டணி என்பதே இந்த படத்திற்கு பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.

மன ஷங்கர வர பிரசாத் காரு கதை
2026-ல் வெளியான தெலுங்கு அதிரடி நகைச்சுவைத் திரைப்படமான 'மன சங்கர வர பிரசாத் கரு' (Mana Shankara Vara Prasad Garu), சசிரேகாவாக நடித்த நயன்தாரா, சக்சஸ்ஃபுல்லான ஒரு பெரிய தொழிலதிபராக இருந்து பிரிந்த கணவர் சங்கர வர பிரசாத்தை (சிரஞ்சீவி) மீண்டும் வெல்ல நினைக்கும் கதையை நகைச்சுவையுடன் சொல்கிறது. 6 ஆண்டுகளாகப் பிரிந்து வாழும் தம்பதியினர் தங்களுடைய குழந்தைகளுக்காக மீண்டும் இணைவதே படத்தின் முக்கிய கரு.
படத்தில் ஆக்ஷன், காமெடி, சென்டிமெண்ட் என்று ரசிகர்களுக்கு பிடித்த அனைத்து அம்சங்களும் சமநிலையாக கலந்துள்ளன. குறிப்பாக சிரஞ்சீவியின் வின்டேஜ் காமெடி டைமிங் மற்றும் மாஸ் பிரசென்ஸ் திரையரங்கில் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது. அதே நேரத்தில் நயன்தாரா தன்னுடைய வழக்கமான நேர்த்தியான நடிப்பால் கதையின் செண்டிமெண்டை அழகாக தாங்கி நிற்கிறார்.
விஸ்வாசம் படத்தில் காப்பி
குடும்ப உறவுகள், பிரிவு-சேர்வு போன்ற கதைக்களம் காரணமாக இந்த படம் பார்க்கும்போது, அஜித் நயன்தாரா நடித்த விஸ்வாசம் படத்தின் தாக்கம் தெரிகிறது. ஆனாலும் அதையே நேரடியாக காப்பி அடித்தது போல இல்லாமல், தெலுங்கு கமர்சியல் பாணியில் சில மாற்றங்கள் செய்து சிரஞ்சீவிக்கேற்ற கமர்ஷியல் பேக்கேஜாக உருவாக்கியுள்ளனர். இதனால் கதையில் பெரிய புதுமை இல்லை என்றாலும், பார்ப்பவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தாத வகையில் படம் நகர்கிறது.
பாடல்கள், பின்னணி இசை மற்றும் காட்சிகளின் பிரம்மாண்டம் ஆகியவை படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளன. சில இடங்களில் திரைக்கதை தர்க்கரீதியாக பலவீனமாக இருந்தாலும், பொழுதுபோக்கு அம்சங்கள் அந்த குறைகளை ஓரளவு மறைத்துவிடுகின்றன.

சிரஞ்சீவி நடிப்பு
அதுபோல இந்த படத்தில் சிரஞ்சீவி நடிப்பு பார்க்கும்போது, அஜித் விஜய் போன்றோர் 90ஸ் காலகட்டத்தில் நடித்த திரைப்படங்களை நினைவிற்கு கொண்டு வருகிறது. அவர்கள் அப்போதெல்லாம் பெரிய பில்டப் இல்லாமல் ஒரு சாதாரணமாக ஜாலியாக கிண்டல் செய்து சில இடங்களில் மாஸ்காட்டி கலகலப்பை ஏற்படுத்துவது போல இந்த படத்தில் சிரஞ்சீவியின் நடிப்பு இருக்கிறது.
மொத்தத்தில், 'மன ஷங்கர வர பிரசாத் காரு' பெரிய அளவில் புதுமையான கதையில்லை என்றாலும், குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய ஒரு கமர்சியல் திரைப்படமாக அமைந்துள்ளது. 'விஸ்வாசம்' படத்தை நினைவூட்டும் சில காட்சிகள் இருந்தாலும், சிரஞ்சீவி - நயன்தாரா கூட்டணி அந்த குறையை ஈடு செய்கிறது. குடும்ப பார்வையாளர்களுக்கு ஏற்ற ஒரு பொழுதுபோக்கு திரைப்படம் எனக் கூறலாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications