OTT : ஓடிடியில் கலக்கும் சிறை.. பிளஸ் ஆன கிளைமாக்ஸ்! ஆனால் இப்படியும் யோசிக்கிறாங்க, இது நல்லாவா இருக்கு?
சென்னை: தியேட்டரில் நல்ல ஓட்டம் ஓடிய பிறகு, ஓடிடியிலும் வெளியாகி மீண்டும் ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியிருக்கிறது 'சிறை' படம். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம், போலீஸ் காரர்களின் வலி-வேதனை மட்டுமல்லாமல், கைதிகளின் வாழ்க்கை பின்னணி, அவர்கள் தள்ளப்பட்ட சூழ்நிலைகள், மன அழுத்தம் என இன்னொரு பக்கத்தையும் நெருக்கமாக காட்டியதால்தான் பலரால் இந்த படத்தை எளிதில் கனெக்ட் செய்து கொள்ள முடிந்தது.
இந்த நிலையில், சோஷியல் மீடியாவில் இப்போது அதிகமாக பேசப்படுவது படத்தின் க்ளைமேக்ஸ் தான். "இந்த க்ளைமேக்ஸ் சரியா?", "இதை இன்னும் கொஞ்சம் மாற்றியிருக்கலாமே?" என ரசிகர்கள் தங்களுடைய கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்து வருகிறார்கள்.

அதில் சிலர் சொன்ன ஐடியா இப்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றிருக்கிறது. "படம் பார்த்துட்டு இது பற்றி ஒருவர் சோசியல் மீடியாவில் வெளியிட்ட போஸ்டில், 'க்ளைமேக்ஸ் மட்டும் கொஞ்சம் மாத்திருக்கலாமே'ன்னு தோன்றியது. முதல்ல அவர் சொன்ன ஐடியா,
அந்த பெண்ணோட மாமன் அவளை அடிச்சு கொன்னுடுறான். அது தெரிஞ்சதும் விக்ரம் பிரபு அந்த மாமனை கொன்னுட்டு, சிறை கைதியா போயிடுற மாதிரி முடிச்சிருக்கலாம்னு. இதுக்கு உடனே, "அப்படியெல்லாம் வச்சா அது மைனா படமா போயிடும்னு இன்னொரு ரசிகர் சொல்லியிருக்கிறார்.
அதுக்கு அடுத்த ஐடியா, அந்த பெண்ணே மாமனை கொன்னுடுறா. கடைசில கோர்ட்ல ரெண்டு பேரும் கைதியா சந்திச்சுக்குற மாதிரி முடிச்சிருந்தா எப்படி இருக்கும்?னு இன்னொருவர் கேட்டிருக்கிறார்.
இதை விட கொஞ்சம் அதிகமான சென்டிமெண்ட் கலந்த இன்னொரு யோசனையை ஒருவர் சொல்லி இருக்கிறார், அந்த பொண்ணு பஸ்ல அடிபட்டு செத்துருது. அந்த பையன் சிறையிலிருந்து தப்பிச்சு ஓடும்போது விலங்கை உடைச்சு, எதிர்ல வந்த லாரியில அடிபட்டு செத்துருறான்.
"இப்படி முடிச்சா ரொம்ப சென்டிமெண்ட்டா இருக்கும்ல?"னு பலரையும் பதற வைத்திருக்கிறார்.

ஆனா இதை விட எல்லாரையும் ஆச்சரியப்படுத்தினது இன்னொருவரின் யோசனைதான். அந்த பையன் சிறையிலிருந்து விடுதலை ஆகி வெளியே வரான். அவனுக்கும் அந்த பொண்ணுக்கும் கல்யாணம் நடக்கப் போகுது. அப்போ திடீர்னு அந்த பொண்ணே அவனை குத்தி கொன்னுடுறா.
"அவளோட அப்பாவை கொன்னதுக்கு பழிவாங்க தான் இவ்வளவு நாளா வெயிட் பண்ணுச்சு"னு முடிச்சிருந்தா எப்படி இருக்கும்னு கேட்டிருக்கிறார்.
ஆக மொத்தம் சந்தோஷமா முடிச்ச க்ளைமேக்ஸ் சிலருக்கு புடிக்கல. நல்ல கிளைமாக்ஸ் பிடிக்காதவர்களுக்கு வருத்தமோ இல்ல வன்மமோன்னு தெரியல"னு என சிலர் அலுத்துக் கொள்கிறார்கள்.
இந்த மாதிரி க்ளைமேக்ஸ் மாற்று யோசனைகள் இப்போது சோஷியல் மீடியாவில் பலரால் விவாதிக்கப்படுகின்றன. சிலர், "இப்ப இருக்குற க்ளைமேக்ஸ் தான் படத்தோட பெரிய பலம். அந்த பாசிட்டிவ் முடிவால தான் படம் மனசுல நிக்குது"னு சொல்றாங்க.
இன்னும் சிலர், "உண்மை சம்பவம் என்றாலும், கொஞ்சம் ஷாக்கிங் க்ளைமேக்ஸ் இருந்தா இன்னும் தாக்கம் அதிகமா இருந்திருக்கும்"னு தங்களுடைய கருத்துகளை பகிர்கிறார்கள்.

ஆனா பெரும்பாலான ரசிகர்கள் ஒரே விஷயத்துல ஒத்துக் கொள்றாங்க. இந்த படம் போலீஸ் காரர்களை முழுக்க வில்லன்களாக காட்டல. கைதிகளை முழுக்க குற்றவாளிகளாகவும் காட்டல. ஒவ்வொருத்தருக்கும் பின்னால இருக்குற சூழ்நிலையையும், அவர்களுடைய வலியையும் உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியிருக்கிறது.
அதனால தான், க்ளைமேக்ஸ் சந்தோஷமா முடிஞ்சதாலேயே இந்த படம் பலருக்கு நம்பிக்கை கொடுத்த படமா மாறியிருக்கிறது. இப்போ சோஷியல் மீடியாவில் கேட்கப்படுற ஒரே கேள்வி இதுதான்... உங்களுக்கு எந்த க்ளைமேக்ஸ் பிடிச்சது? இயக்குநர் எடுத்த முடிவா... இல்ல ரசிகர்கள் சொல்ற மாற்று யோசனைகளா?
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications