Parasakthi OTT: அவசரமாக ஓடிடிக்கு வரும் பராசக்தி.. ஆட்டம் இனி தான் ஆரம்பம்! சிவகார்த்திகேயன் நிலைமை?
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா நடிப்பில் வெளியான 'பராசக்தி' படம், பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனதே பெரிய ஹைப்போட தான். சிவகார்த்திகேயனுக்கு இது மைல்கல் படம், "சுதா கொங்கரா + எஸ்.கே காம்போ"ன்னு ஆரம்பத்திலேயே படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.
படம் வெளியானதும் கலவையான விமர்சனங்கள் தான் வந்தது. சில பேருக்கு கதையும், அரசியல் பின்னணியும், இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமா எடுத்த விதமும் பிடிச்சிருந்தது. ஆனா இன்னும் சிலருக்கு, சுதா கொங்கரா முந்தைய படங்களில் இருந்த அந்த ஸ்ட்ராங் எமோஷனல் இம்பாக்ட் இதில் முழுசா இல்லைன்னு தோணிச்சு. அதனால் படம் 'சூப்பர் ஹிட்'ன்னு ஒருமித்த கருத்துக்கு வரல.

பராசக்தி வசூல் நிலவரம்
வசூல் விஷயத்தில கூட டிஸ்கஷன் நிறைய. தயாரிப்பு தரப்பு 100 கோடி வசூல் அடைந்துடுச்சுன்னு சொன்னாங்க. ஆனா டிரேடு வட்டாரங்களில் பேசுற கணக்குப்படி மொத்த வசூல் சுமார் 85 கோடி ரேஞ்ச்ல தான் இருக்குனு சொல்லப்படுகிறது. பொங்கல் விடுமுறை முடிஞ்சதும், புதிய படங்கள் ரிலீஸ் ஆனதும், தியேட்டர்கள்ல பராசக்தி ஓட்டம் மெதுவா குறைய ஆரம்பிச்சுடுச்சு. ஆரம்ப நாட்களில் கோடிகளில் வந்த வசூல், இப்போ லட்சங்களாகி, படத்தின் தியேட்டர் ரன் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துடுச்சுன்னே சொல்லலாம்.
விரைவான ரிலீஸ்
இப்படி தியேட்டரில் பெரிய பஞ்ச் அடிக்கலன்னாலும், "ஓடிடிலாவது நல்ல ரீச் கிடைக்குமா?"ன்னு ரசிகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. பொதுவா தமிழ் படங்கள் 28 நாட்களுக்குள்ள டிஜிட்டலுக்கு வந்துடும். ஆனா பராசக்தியை 48 நாள் கழிச்சு தான் ஓடிடிக்கு விடப்போறோம் னு முதல்ல பேசப்பட்டது. அதனால் பிப்ரவரி இறுதில தான் வரும் போலன்னு நினைச்சாங்க.
பராசக்தி ஓடிடி ரிலீஸ் தேதி
ஆனா இப்போ அந்த பிளான் மாறி, பராசக்தி படம் பிப்ரவரி 7ஆம் தேதி நேரடியாக ZEE5 (ஜீ5) ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகப்போறதுனு அதிகாரப்பூர்வமா அறிவிச்சிட்டாங்க. இதனால தியேட்டரில் மிஸ் பண்ணியவங்க, இல்லனா "ஒரு தடவை வீட்டுல ரிலாக்ஸ்டா பாத்து ஜட்ஜ் பண்ணலாமே"ன்னு நினைக்குறவங்க எல்லாருக்கும் இது ஒரு நல்ல சான்ஸ்.
தியேட்டரில் பார்த்தவங்க கூட, "பெரிய ஸ்கிரீன்ல சரியா கனெக்ட் ஆகல; ஓடிடில பாத்தா வேற மாதிரி தோணுமா?"ன்னு எதிர்பார்க்குறாங்க. சில படங்கள் தியேட்டரில் சராசரியா இருந்தாலும், ஓடிடில நல்ல ரிசெப்ஷன் வாங்குறது நம்மளுக்கு புதுசில்ல. அதே மாதிரி பராசக்திக்கும் ஓடிடி ரிலீஸுக்குப் பிறகு 'ரிவியூ' மாறுமா, ரசிகர்களோட கருத்து பாசிட்டிவா திரும்புமா என்பதுதான் இப்போ சினிமா வட்டாரங்களில் ஹாட் டாபிக்.
தியேட்டரில் கலவையான வரவேற்பு - இப்போ ஓடிடியில் இரண்டாவது இன்னிங்ஸ். பிப்ரவரி 7க்குப் பிறகு தான் தெரியும், 'பராசக்தி'க்கு டிஜிட்டல் உலகம் கை கொடுக்குமா இல்லையா என்று...
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications