Parasakthi OTT: பராசக்தி படத்தின் ஓடிடி ரைட்ஸ் இத்தனை கோடியாமே! அதுவும் இந்த தளத்தில் ஸ்ட்ரீம்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பராசக்தி திரைப்படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறதாம். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி திரைப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ஜனநாயகன் படத்துடன் இந்த படம் மோத போகிறதா? என்று ஆர்வத்தோடு காத்திருக்கும் ரசிகர்களுக்கு இப்போது இன்ப அதிர்ச்சி கொடுக்கிற மாதிரி இன்னொரு தகவலும் வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த படத்தில் ஓடிடி உரிமம் மிகப்பெரிய தொகைக்கு விற்பனையாகி இருக்கிறதாம்.

வரும் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் விடுமுறையை கொண்டாடும் வகையில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் ஒரு உரிமையை ஜி5 ஓடிடி கைபற்றி இருக்கிறதாம். அது மட்டும் அல்லாமல் 53 கோடிக்கு பராசக்தி பட ஓடிடி உரிமையை வாங்கி இருக்கிறதாம். இதுவரைக்கும் சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் இந்த படத்திற்கு தான் அதிக விலைக்கு ஒடிடியில் விற்பனையானது என்று கூறப்படுகிறது.
பராசக்தி படம் சிவகார்த்திகேயனுக்கு கன்ஃபார்ம் ஹிட் கொடுக்கும் என்று பலரும் கூறி வருகிறார்கள். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிகர் ஜெயம் ரவி உட்பட பல பிரபலங்களும் இருக்கின்றனர். அதுபோல இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு 25வது படம். இந்த படத்தை சுதா கெங்காரா தான் இயக்கி இருக்கிறார். மொழிப்போர் தொடர்பான கதை களத்துடன் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா நடித்திருக்கிறார்.
பராசக்தி படத்தின் பாடல்கள் இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது ஸ்ரீலீலா தமிழில் பராசக்தி படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்திருக்கிறார். ரவி மோகன் இந்த படத்தில் வில்லனாக நடிக்க, அதர்வா முரளி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் ஜிவி பிரகாஷ் தான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு மட்டும் இது ஸ்பெஷலான படம் இல்லை ஜி வி பிரகாஷுக்கும் இது ஸ்பெஷலான படம்.
காரணம் இது ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகும் நூறாவது படம். இதுவரைக்கும் வெளியான பராசக்தி பாடல்கள் தான் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி ரீல்ஸ்களில் கூட இந்த படத்தின் பாடல்கள் தான் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆகாஷ் பாஸ்கரன் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. பல பிரச்சனைகள் மற்றும் தடங்கலுக்கு பிறகு இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் இதன் ஒடிடி உரிமம் இவ்வளவு வசூல் செய்து இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications