Retta Thala OTT: சைலண்டாக ஓடிடிக்கு வந்த அருண் விஜயின் ரெட்டை தல.. அதுவும் இந்த தளத்தில் பார்க்கலாம்!
சென்னை: அருண் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான 'ரெட்ட தல' திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. திரையரங்கு வெளியீட்டின்போது பெரிய அளவில் பேசப்படாமல் போன இந்த படம், இப்போது ஓடிடி ரிலீஸால் மீண்டும் ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வெளியான 'ரெட்ட தல', அருண் விஜய்க்கு சவாலான இரட்டை வேடத்தை கொண்ட படம். இதில் அவர் காளி மற்றும் மல்பே உபேந்திரா என்ற இரண்டு மாறுபட்ட கேரக்டரில் நடித்துள்ளார். பாண்டிச்சேரி தெருக்களில் வாழும் காளி, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற கனவுடன் போராடும் இளைஞன்.

காளியின் காதலி, வாழ்க்கையில் பணமே முக்கியம் என்ற எண்ணத்துடன் இருப்பவள். இந்த வேறுபட்ட மனநிலையே கதையின் மையமாக நகர்கிறது. ஒரு கட்டத்தில், காளி தனது உருவத்தைப் போலவே இருக்கும் செல்வந்தரான மல்பே உபேந்திராவை சந்திக்கிறான். அப்போது, உபேந்திராவை கொன்று அவனது இடத்தை பிடித்து ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கலாம் என்ற அபாயகரமான யோசனையை காளியின் காதலி முன்வைக்கிறாள்.
அதன் பின்னர் காளி அந்த திட்டத்தை நிறைவேற்றுகிறானா, அதன் விளைவாக அவன் வாழ்க்கையில் என்னென்ன சிக்கல்கள் ஏற்படுகின்றன என்பதே 'ரெட்ட தல' படத்தின் மீதிக்கதை. இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக சித்தி இத்னானி மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளனர்.
இவர்களுடன் யோகி பாபு, ஜான் விஜய், ஹரீஷ் பேரடி, பாலாஜி முருகதாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தை கிரிஸ் திருமுகுமார் எழுதி இயக்கியுள்ளார். சாம் சி.எஸ் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ள இந்த படத்திற்கு, டிஜோ டோமி ஒளிப்பதிவையும், ஆன்டனி எடிட்டிங்கையும் மேற்கொண்டுள்ளனர்.
வசூல் ரீதியாக பார்த்தால், 'ரெட்ட தல' திரைப்படம் திரையரங்குகளில் சுமார் ரூ.3.7 கோடி வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் வெளியான போதிலும், ரசிகர்களிடம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய தாக்கத்தை இந்த படம் ஏற்படுத்தவில்லை. அதே சமயம், விக்ரம் பிரபு நடித்த 'சிறை' திரைப்படத்துடன் ஏற்பட்ட நேரடி போட்டியும் வசூல் குறைவதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், தற்போது அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் 'ரெட்ட தல' திரைப்படம் ஸ்ட்ரீமாகி வருகிறது. எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் சர்ப்ரைஸாக வெளியான இந்த ஓடிடி ரிலீஸ், திரையரங்கில் பார்க்க தவறிய ரசிகர்களுக்கு வீட்டிலிருந்தே படம் பார்க்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
இரட்டை வேடம், ஆசை, பேராசை மற்றும் அதன் விளைவுகள் ஆகியவற்றை மையமாக கொண்டு உருவான 'ரெட்ட தல', ஓடிடி பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெறுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது உருவாகியுள்ளது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications