சிறை படத்துக்கு இணையான துல்கர் சல்மானின் ‘சல்யூட்’.. ஓடிடியில் கலக்கும் போலீஸ் திரில்லர் மூவி ரிவ்யூ
சென்னை: வார கடைசியில் "ஏதாவது வேற மாதிரி படம் பார்க்கலாமே"ன்னு யோசிக்கிறீங்களா? அப்படின்னா, சோனி லைவில் இருக்குற துல்கர் சல்மான் நடித்த 'சல்யூட்' ஒரு நல்ல தேர்வு தான். இது வழக்கமான போலீஸ் படம் மாதிரி சண்டை, ஹீரோ எலிவேஷன் எல்லாம் இல்லாம, ஒரு போலீஸ் அதிகாரி மனசுக்குள்ள என்ன நடக்குது என்பதைக் காட்டுற படம்.

சல்யூட் கதை
அரவிந்த் கருணாகரன் (துல்கர் சல்மான்) நேர்மையான போலீஸ் ஆபீசர். அண்ணனை பார்த்து தான் போலீஸ் ஆகணும்னு கனவு காண்றவன். ஆனால் ஒரு கொலை வழக்கில் அரசியல் அழுத்தம் காரணமா, ஒரு அப்பாவி ஆட்டோ டிரைவரை குற்றவாளியாக்கிய டீம்ல அவனும் ஒரு பாகமா இருக்கிறான்.
வழக்கு முடிஞ்சு விருது கிடைத்த பிறகும், "நாம சரியா தான் பண்ணோமா?"ன்னு அவன் மனசு கேள்வி கேட்க ஆரம்பிக்குது. அந்த குற்ற உணர்ச்சியோட தான், உண்மையை நீதிமன்றத்துக்கு சொல்ல முடிவு எடுக்குறான். அதுக்கப்புறம் அவன் சந்திக்குற பிரச்சனைகள் தான் படத்தோட முக்கியமான கதை.

துல்கர் சல்மான் நடிப்பு
இந்த படத்துல துல்கர் சல்மானுக்கு பெரிய ஹீரோ பில்ட் அப் காட்சிகள் கிடையாது. சண்டையும் இல்லை. ஆனா அமைதியான நடிப்பாலேயே அவர் அந்த கேரக்டருக்குள்ள நம்மை இழுத்துக்கிட்டு போறார். சில சீன்களில் அவர் எதுவும் பேசாம இருந்தாலே, அவருக்குள்ள எவ்வளவு குழப்பம் இருக்குன்னு நமக்கு புரிஞ்சுடுது.
படம் முழுக்க ஒரு அழுத்தமான சூழல் தான். இரவு காட்சிகள், போலீஸ் ஸ்டேஷன் சீன்கள் எல்லாம் நம்மையும் அந்த விசாரணை உலகத்துக்குள்ள கொண்டு போகுற மாதிரி இருக்கும். வேகம் அதிகமா இல்ல, மெதுவா தான் போகும். ஆனா கதைக்குள்ள நுழைந்துட்டா, அடுத்து என்னன்னு தெரிஞ்சுக்கணும்னு தோணும்.

க்ரைம் படம்
டிப்ரண்டா, கொஞ்சம் சீரியஸா இருக்குற க்ரைம் படங்கள் பிடிப்பவர்களுக்கு 'சல்யூட்' நிச்சயம் பிடிக்கும். "போலீஸ் படம் என்றாலே அடிதடி தான் வேணும்"ன்னு நினைக்குறவர்களுக்கு இது மெதுவா தோணலாம். ஆனா அமைதியா ஒரு நல்ல கதை பார்க்க விரும்புறவர்களுக்கு இது சரியான படம்.
வார இறுதி ரெகமெண்டேஷன்
இந்த வார இறுதியில் சும்மா டைம் பாஸ் படம் இல்லாம, மனசை கொஞ்சம் தொட்டுப் போற மாதிரி ஒரு படம் பார்க்கணும்னா 'சல்யூட்' ட்ரை பண்ணலாம். போலீஸ் என்றாலே எல்லாமே சரியா தான் செய்வாங்கன்னு இல்ல; அவர்களுக்குள்ளும் மனசு இருக்கு, குழப்பம் இருக்கு அப்படிங்கற விஷயத்தை நார்மலா சொல்லுற படம் இது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications