Sarvam Maya Review: பேயுடன் ஒரு ‘பீல்-குட்’ ஜர்னி – JioHotstar-ல் கலக்கும் ‘சர்வம் மாயா’.. ஸ்பெஷலே இதுதான்
சென்னை: பேய்னால பயமுறுத்தும் படங்களே பார்த்து அலுத்து போச்சுனா, இந்த வார இறுதிக்கு மனசுக்கு ஒரு விதமான பீலிங் தர்ற ஒரு படம் வந்திருக்கு. ஜியோ ஹாட்ஸ்டாரில் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியிருக்கும் 'சர்வம் மாயா' வழக்கமான ஹாரர் கதைகளுக்கு அப்பாற்பட்டு, ஒரு 'பீல்-குட்' அனுபவமா அமைஞ்சிருக்குது.
ஒரு கிதார் கலைஞர், சூழ்நிலை காரணமாக குடும்பத் தொழிலான பூசாரி வேலையை விட்டுவிட்டு கிட்டார் வாசிக்க வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு சில ஏமாற்றங்கள் கிடைக்க பிறகு வேறு வழியில்லாமல் பணத்திற்காக தன்னுடைய குல தொழிலுக்கு திரும்புகிறார். அங்க அவருக்கு கிடைக்குற சந்திப்பு தான் கதையோட டர்னிங் பாயிண்ட்.

பணத்திற்காக பேய் ஓட்ட போன கதாநாயகன் ஒரு பேயை கூட்டிக் கொண்டு வந்து விடுவார். இந்த படத்தில் வருவது பயமுறுத்தும் பேய் இல்ல, மாறாக ஜாலியான, வாழ்க்கை பற்றி நக்கலோடவும், நிதானமாவும் அறிவுரை சொல்லுற ஒரு "Feel-good Ghost". அந்தப் பேய் அவருடைய வாழ்க்கையை எப்படி மெதுவா மாற்றுது என்பதுதான் படத்தின் மையம்.
நிவின் பாலியின் கம்பேக்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிவின் பாலி மீண்டும் அவருக்கே உரிய இயல்பான நகைச்சுவையோடும், எமோஷனோடும் ஸ்கோர் பண்ணிருக்கார். ரொம்ப ஓவர் இல்லாம, அண்டர்ஸ்டேட்டடா வரும் அவருடைய நடிப்பு கதாபாத்திரத்துக்கு நல்ல இமேஜ் கொடுக்குது. அதோடு நிவின் பாலி - அஜு வர்கீஸ் காம்போ திரையில் வந்தாலே ஒரு லைட் ஃபீல் கிடைக்குது. அவர்களோட சீன்கள் படத்துக்கு பிளஸ் ஆக இருக்கிறது.
ரியா ஷிபு - 'டெலுலு' ஆக ஒரு அழகான சர்ப்ரைஸ்
'டெலுலு'ன்னு அழைக்கப்படும் பேயாக ரியா ஷிபு அறிமுகமாகிறார். பயமுறுத்துற பேய் இல்லாம, ஜாலியா பேசுற பேய் பார்க்கும்போது நமக்கு இப்படி ஒரு பேய் வேண்டும் என்று மனதிற்குள்ளேயே அடம்பிடிக்க தோன்றும்.. இந்த புதுமையான பிரசென்டேஷன் தான் படத்துக்கு ஒரு தனி ஃப்ரெஷ்னஸ் கொடுக்குது. சமூக வலைதளங்களிலும் இவருடைய நடிப்பு பற்றி நல்ல ரியாக்ஷன்கள் வந்துட்டே இருக்கு.
கேரளா லொகேஷன்ஸ் + ஜஸ்டின் பிரபாகரன் இசை
படம் முழுக்க கேரளாவின் பசுமையான அழகான லொகேஷன்ஸ் கண்ணுக்கு ஒரு சுகம். அதோடு ஜஸ்டின் பிரபாகரனின் மெலோடியான இசை கதைக்கு நல்ல துணை நிற்குது. சில இடங்களில் காட்சி ஓடிக்கிட்டே இருக்கும் போது பின்னணியில் வரும் இசை, சீனுக்கு இன்னும் எமோஷன் சேர்க்குது.
சின்ன சின்ன குறைகள்
முதல் பாதி ரொம்ப சுறுசுறுப்பா நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் சில இடங்கள் கொஞ்சம் மெதுவா போற மாதிரி தோணலாம். அதேபோல நாத்திகராக இருக்கும் கதாநாயகன், ஆன்மீகத்துக்கு மாறும் சில தருணங்கள் கொஞ்சம் அட்வைஸ் மாதிரி இருக்கும். ஆனாலும், மொத்தமாக பார்க்கும்போது அந்த குறைகள் படத்தின் ஃபீல்-குட் டோனை கெடுக்குற அளவுக்கு பெரிய விஷயமில்லை.

வீக்எண்டுக்கு ஒரு லைட்-ஹார்ட்டட் சாய்ஸ்
இந்த வார இறுதியில் குடும்பத்தோட உட்கார்ந்து சீரியஸான கதைகள் இல்லாம, லைட்டா மனசுக்கு நெருக்கமா ஒரு படம் பார்க்கணும்னு நினைக்கிறீங்கன்னா, ஜியோ ஹாட்ஸ்டாரில் தமிழில் டப்பிங் செய்யப்பட்ட 'சர்வம் மாயா' நல்ல சாய்ஸ் தான். பயம் இல்ல, ஜாலி இருக்கு, அதோட ஒரு நல்ல மெசேஜும் இருக்கு.
18 வயதுக்கு கீழே உள்ளவர்களாக இருந்தாலும் சரி, கர்ப்பிணியாக இருந்தாலும் சரி, இதயம் பலகீனமானவர்களாக இருந்தாலும் சரி.. அவர்கள் இந்த பேய் படத்தை தைரியமாக பார்க்கலாம்.
நீங்க இந்தப் படத்தை பார்த்தாச்சா? இல்ல இந்த வீக்எண்ட்ல பார்க்கும் லிஸ்ட்ல இருக்கா? உங்கள் கருத்தையும் சொல்லுங்க.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications