Sirai: ஓடிடியில் வரலாறு படைத்த ‘சிறை’! 5 நாட்களில் 156 மில்லியன் நிமிடங்கள்.. விக்ரம் பிரபு மகிழ்ச்சி போஸ்ட்
சென்னை: திரையரங்குகளில் அமைதியாக வந்தாலும், ஓடிடியில் வெளியான பிறகு எதிர்பாராத அளவில் ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற திரைப்படமாக 'சிறை' தற்போது மாறியுள்ளது. சமீபத்தில் ZEE5 Tamil வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி, 'சிறை' திரைப்படம் ஓடிடி வெளியீட்டின் முதல் 5 நாட்களில் 156 மில்லியன் நிமிடங்கள் பார்வையிடப்பட்டு, புதிய சாதனையை படைத்துள்ளது. இதன் மூலம் 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஓடிடி பிளாக்பஸ்டர்களில் ஒன்றாக 'சிறை' இடம்பிடித்துள்ளது.
இந்த சாதனை குறித்து நடிகர் விக்ரம் பிரபு, தனது சோசியல் மீடியா பக்கத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்திருக்கிறார். ZEE5 Tamil வெளியிட்ட பதிவை பகிர்ந்து, தீயெழும் எமோஜி உடன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விக்ரம் பிரபு, ரசிகர்களின் ஆதரவே இந்த வெற்றிக்கு காரணம் என்பதை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவுக்கு, ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்த பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

'சிறை' திரைப்படம், ஒரு சாதாரண சிறை வாழ்க்கையை மட்டும் காட்டும் படமாக இல்லாமல், அதிகாரமும் அடக்குமுறையும் மனித மனதை எப்படி மாற்றுகிறது, அதற்குள் மனிதம் எவ்வாறு சிக்கிக் கொள்கிறது என்பதை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லும் கதையமைப்பைக் கொண்டது. கதையின் மையத்தில் இருக்கும் கதாபாத்திரம், சூழ்நிலைகளால் குற்றவாளியாக மாறுகிறதா, அல்லது குற்றவாளியாக்கப்படுகிறதா என்ற கேள்வியையே படம் முழுவதும் எழுப்புகிறது.
இந்த படத்தில் விக்ரம் பிரபு முற்றிலும் வேறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்பது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்ட விஷயமாக மாறியது. அமைதியான காட்சிகளில் அவரது உள்ளார்ந்த வலி, கடுமையான தருணங்களில் வெளிப்படும் கோபம், அனைத்தும் இயல்பாக வெளிப்பட்டதாக ரசிகர்கள் பாராட்டினர்.
குறிப்பாக ஒரு போலீஸ்காரரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் காட்சிகளில், எந்த அலட்டலும் இல்லாமல் அவர் நடித்த விதம், இந்த படத்தின் பெரிய பலமாக அமைந்தது. திரையரங்குகளில் வெளியான போது கலவையான விமர்சனங்களைப் பெற்ற 'சிறை', ஓடிடி தளத்தில் வெளியாகிய பிறகு முழுமையான வரவேற்பைப் பெற்றுள்ளது.
குடும்ப ரசிகர்கள் முதல் தீவிர சினிமா ரசிகர்கள் வரை, பல தரப்பினரும் இந்த படத்தை தொடர்ந்து பார்த்து வருவதால் தான், குறுகிய காலத்தில் இந்த அளவிலான பார்வை நேரத்தை எட்ட முடிந்ததாக கூறப்படுகிறது. சோசியல் மீடியாவிலும் எந்த படத்தையும் கிளைமேக்ஸ் காட்சிகள் குறித்து அதிகமான விவாதங்களும் வந்து கொண்டே இருக்கிறது.

ZEE5 Tamil தளத்தில் 'சிறை' படம் தொடர்ந்து முன்னணி இடத்தில் இருப்பதும், சமூக வலைதளங்களில் இந்த படம் குறித்து விவாதங்கள் அதிகரித்து வருவதும், அதன் வெற்றியை மேலும் உறுதிப்படுத்துகிறது. "சத்தமில்லாமல் வந்து சாதனை செய்த படம்", "உண்மைக்கு நெருக்கமான சிறை கதை" போன்ற கருத்துகள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
இந்த சாதனையால், விக்ரம் பிரபுவின் திரைப்பயணத்தில் 'சிறை' ஒரு முக்கியமான மைல்கல்லாக மாறியுள்ளது. கமர்ஷியல் கதாபாத்திரங்களைத் தாண்டி, அதிகமாக பில்டப் இல்லாத கதைகளிலும் அவர் ரசிகர்களை கவர முடியும் என்பதை இந்த படம் மீண்டும் நிரூபித்துள்ளது.
திரையரங்குகளில் மெதுவாக பயணித்தாலும், ஓடிடியில் வெடித்த வெற்றி, 'சிறை' திரைப்படத்தை 2025 ஆம் ஆண்டின் முக்கியமான ஓடிடி சாதனை படங்களின் பட்டியலில் உறுதியாக நிறுத்தியுள்ளது. ரசிகர்களின் இந்த ஆதரவு, இப்படம் குறித்த ஆர்வத்தை இன்னும் பல நாட்கள் உயிரோடு வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications