Stephen Review: விடுமுறைக்கு ஏற்ற மிரட்டல் சைக்கோ த்ரில்லர்.. நெட்ஃப்ளிக்ஸில் இருக்கும் "ஸ்டீபன்” கதை இதுதான்!
சென்னை: நெட்ஃப்ளிக்ஸில் ஆக்ஷன், காதல், காமெடி படங்கள் வரிசையாக வெளியாகிக் கொண்டிருந்தாலும், ஒரு குறிப்பிட்ட ரசிகர் கூட்டம் எப்போதும் எதிர்பார்ப்பது சைக்கோ - சீரியல் கில்லர் த்ரில்லர்கள் தான். அந்த எதிர்பார்ப்பை அமைதியாக வந்து பூர்த்தி செய்யும் படம் தான், டிசம்பர் 5, 2025 அன்று வெளியான 'ஸ்டீபன்'.
பெரிய விளம்பரங்கள் இல்லை. பிரமாண்ட நட்சத்திர பட்டாளமும் இல்லை. ஆனாலும், பார்த்தவர்களை அமைதியாக அதிர வைத்துக் கொண்டிருக்கிறது இந்த படம்.

கோவையில் தொடர்ச்சியாக 9 இளம்பெண்கள் கொல்லப்படுகிறார்கள். நகரமே பதற்றத்தில் இருக்கும் நேரத்தில், அந்த கொலைகளை செய்தவன் தானாகவே காவல்துறையில் வந்து சரண் அடைகிறான். இங்கே தான் கதை சுவாரசியமாக மாறுகிறது. "கொலை செய்தவன் ஏன் தானாக வந்து சரண் அடைய வேண்டும்?" "அவன் உண்மையிலேயே குற்றவாளியா?" "அவன் மனதில் ஓடும் அந்த கொடூர சிந்தனைகள் என்ன?" - இந்த கேள்விகள்தான் 'ஸ்டீபன்' முழுக்க நம்மை இழுத்துச் செல்கிறது.
படத்தின் மிகப்பெரிய பலம் நாயகன் கோமதி சங்கர். முழுப் படத்தையும் தனி ஆளாக தாங்கி நிற்கிறார். கொலை செய்யும் தருணங்களில் இருக்கும் பார்வை, காவல்துறையில் விசாரணை சந்திக்கும் போது வெளிப்படும் உளவியல் குழப்பம், குற்ற உணர்வு மோதும் காட்சிகள் - அனைத்திலும் அவரது நடிப்பு படத்தை ஒரு லெவல் மேலே கொண்டு செல்கிறது. இது ஒரு "நடிப்பு காட்சி" என்று தெரியாமல், ஒரு அபாயகரமான மனிதனை நம்முன் நிறுத்துவது தான் அவரது வெற்றி.
காவல்துறை ஆய்வாளராக வரும் மைக்கேல் தங்கதுரை, உளவியல் நிபுணராக ஸ்மிருதி வெங்கட் ஆகியோரும் கதைக்கு தேவையான நம்பகத்தன்மையை அளிக்கிறார்கள். குறிப்பாக குபேரன் - விஜயாஸ்ரீ இருவரின் காட்சிகள், படத்தில் எதிர்பாராத எமோஷனல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு காரில் சுற்றி வரும் அப்பா, வீட்டில் சடலமாக கிடக்கும் தருணம் - இந்த இடங்களில் நடிப்பு சத்தமில்லாமல் மனதில் இறங்குகிறது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவும், பின்னணி இசையும். கோகுல் கிருஷ்ணாவின் கேமரா, சீரியல் கில்லர் படங்களுக்கு உரித்தான டார்க் டோன், க்ளோஸ் அப் ஷாட்கள், அமைதியான பயத்தை உருவாக்கும் விதம் - எல்லாம் படத்துக்கு பெரிய பிளஸ்.

ராகவ் ராவின் இசை, எந்த இடத்திலும் ஓவராக இல்லாமல் கதைக்குள் நம்மை இழுத்துக் கொண்டு செல்கிறது. வழக்கமான சைக்கோ கில்லர் படங்களைப் போல இல்லாமல், மனதின் இருண்ட மூலைகளை உளவியல் ரீதியாக ஆராயும் படம் என்பதே 'ஸ்டீபன்'-ன் தனிச்சிறப்பு. மேலும், இறுதிக் காட்சி இரண்டாம் பாகத்திற்கு வழி வைக்கும் விதத்தில் முடிவடைவது, த்ரில்லர் ரசிகர்களை மேலும் எதிர்பார்ப்பில் வைக்கிறது.
வெளியான சில நாட்களிலேயே, நெட்ஃப்ளிக்ஸில் இந்த படம் நல்ல பார்வையாளர்கள் எண்ணிக்கையை பெற்றுள்ளதாகவும், குறிப்பாக த்ரில்லர் ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. OTT வெளியீடாக இருந்தாலும், இது தியேட்டரில் வந்திருந்தாலும் தாக்கம் குறைந்திருக்காது.
மொத்தத்தில், 'ஸ்டீபன்' என்பது சத்தமில்லாமல் வந்து, மெதுவாக மனதில் ஏறி, பார்த்த பிறகும் நீண்ட நேரம் யோசிக்க வைக்கும் படம். சைக்கோ த்ரில்லர் ரசிகர்கள் மட்டும் அல்ல, வித்தியாசமான கதைக்களம், தரமான மேக்கிங் விரும்புபவர்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இது.
நெட்ஃப்ளிக்ஸில் தேடி பாருங்கள்... ஒரு எபிசோடு போல ஆரம்பித்து, 2 மணி நேரம் எப்படி ஓடுச்சு என்பதே தெரியாது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications