Tere Ishq Mein OTT: ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஷ்க் மெய்ன்.. எதில், எப்போது பார்க்கலாம்?
சென்னை: நடிகர் தனுஷ் மற்றும் கிரீதி சானன் இணைந்து நடித்துள்ள Tere Ishq Mein திரைப்படம், திரைக்கு வந்த நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் கலவையான விவாதங்களை கிளப்பிய படம். இது வழக்கமான காதல் கதையல்ல என்பதே இந்த படத்தின் முக்கிய அடையாளம். காதலை மென்மையாக காட்டாமல், அதில் இருக்கும் வலி, பிடிவாதம், மன அழுத்தம் போன்ற உணர்வுகளை நேரடியாக பேசும் முயற்சிதான் இந்த படம்.
தனுஷ் நடித்த இட்லி கடை படம் பெரிய அளவில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. அந்த அதை அந்த நேரத்தில் தான் தேரே இஷ்க் மெய்ன் படம் வெளியானது. இந்த படம் தனுஷ் படங்களில் அதிக வசூல் பெற்ற பட லிஸ்டில் இடம் பிடித்தது. இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் ரூபாய் 147 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இயக்குனர் ஆனந்த் எல். ராய், ராஞ்சனா போலவே, இங்கேயும் காதலை ஒரு அழகான கனவாக அல்ல, ஒருவரை முற்றிலும் மாற்றிவிடும் ஒரு அனுபவமாக காட்ட முயன்றிருக்கிறார். தனுஷ் இந்தப் படத்தில் முழுக்க காதலில் கரைந்து போகும் ஒரு மனிதனாக மாறி இருந்தார்.
அந்த காதல் அவரை எங்கே கொண்டு போகிறது, எப்படிச் சிக்கலில் தள்ளுகிறது என்பதுதான் படத்தின் மையம். கிரீதி சானன் கதாபாத்திரம், அந்த காதலுக்குள் சிக்கியிருக்கும் இன்னொரு மனநிலையை பிரதிபலிக்கிறது.
தியேட்டரில் இந்த படம் பெரிய வசூல் செய்தது என்றாலும், "இது எல்லோருக்கான படம் இல்லை" என்றே பலர் கருத்து தெரிவித்தனர். குறிப்பாக தனுஷின் நடிப்பு படத்தை ஒரு நிலை மேலே எடுத்துச் சென்றதாக விமர்சனங்கள் வந்தன. காதலில் தோல்வியடைந்த ஒருவனின் உடைந்த மனநிலையை அவர் வெளிப்படுத்திய விதம் பாராட்டுகளை பெற்றது.
இந்நிலையில், தியேட்டரில் பார்க்க முடியாத ரசிகர்களுக்கு இப்போது நல்ல செய்தி கிடைத்துள்ளது. Tere Ishq Mein திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix கைப்பற்றியுள்ளது. திரையரங்கு வெளியீட்டுக்குப் பிறகான வழக்கமான OTT காலக்கெடு முடிவடைந்த நிலையில், இந்த படம் 2026 ஜனவரி மாதம் Netflix-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், OTT வட்டாரங்களில் இதுவே உறுதியான தகவலாக பேசப்படுகிறது.
தியேட்டரில் இந்த படத்தை பார்க்க விட்டாலும், OTT-யில் வெளியாகும்போது இந்த காதல் கதையை புதிதாக பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். அமைதியாக வீட்டில் உட்கார்ந்து பார்த்தால், இந்த படம் சொல்ல நினைத்த உணர்ச்சிகள் இன்னும் ஆழமாக புரியும் என்பதே பலரின் கருத்து.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications