Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்
சென்னை: தமிழ் சினிமாவில் சமீப காலமாக பெண்களை மையப்படுத்திய கதைகள் மீண்டும் வலுவாக வர ஆரம்பித்துள்ள நிலையில், அந்த வரிசையில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்திருக்கும் படம் தான் 'தாய் கிழவி'. சிவகார்த்திகேயன் தனது SK Productions மூலம் தயாரித்துள்ள இந்த படம், கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தின் ஒடிடி ரீலிஸ் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரமாக ராதிகா சரத்குமார் நடித்திருப்பது பெரிய பலமாக அமைந்துள்ளது. அவருடன் பால சரவணன், சிங்கம்புலி, அருள்தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். புதுமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இப்படத்தை இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் நிவாஷ் கே. பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பவுனுத்தாயி கதாபாத்திரம்
இந்த படத்தின் மிகப்பெரிய பலம், ராதிகா சரத்குமார் நடித்த 'பவுனுத்தாயி' கதாபாத்திரம் தான். ஒரு சாதாரண பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் போராட்டங்களையும், குடும்ப உணர்வுகளையும் மிக இயல்பாகவும், உணர்ச்சிகரமாகவும் வெளிப்படுத்தியிருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
திரையரங்குகளில் படம் ஓடும் போதே பல இடங்களில் கண்கலங்கும் தருணங்கள் ஏற்பட்டதாக ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். இது படத்தின் எமோஷனல் கனெக்ஷனை வெளிப்படுத்துகிறது.
முதல் நாள் முதல் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்
படம் வெளியான முதல் நாளிலிருந்தே பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தன. கதை, நடிப்பு, இசை, குறிப்பாக ராதிகா சரத்குமாரின் பெர்பார்மன்ஸ் ஆகியவை பெரிதும் பாராட்டப்பட்டன. இதன் விளைவாக, படம் தினந்தோறும் வசூலில் உயர்வு கண்டது.
பாக்ஸ் ஆபிஸில் சாதனை
'தாய் கிழவி' படம் தற்போது வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்து வருகிறது. உலகளவில் ₹70 கோடிக்கு மேல் வசூல், தமிழ்நாட்டில் மட்டும் ₹50 கோடியை கடந்த வசூல் செய்ததாக கூறப்படுகிறது. பெண்களை மையப்படுத்திய படங்களில் மிகப்பெரிய வெற்றி இதன் மூலம், பெண்கள் மையப்படுத்திய கதைகளும் பெரிய வரவேற்பு பெற முடியும் என்பதையும் இந்த படம் நிரூபித்துள்ளது.
மேலும், இந்த ஆண்டில் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்த 'பராசக்தி' படம் ₹57 கோடியுடன் முன்னிலையில் உள்ளது. 'தாய் கிழவி' படம் ₹55 கோடிக்கு அருகில் இருப்பதால், இன்னும் சில நாட்களில் அந்த சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

தாய்க்கிழவி ஓடிடி ரிலீஸ்
படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது அனைவரும் எதிர்பார்க்கும் கேள்வி - "OTT-ல் எப்போது வெளியாகும்?" இந்த நிலையில் தற்போது வெளியான தகவல்களின்படி, இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை Jio Hotstar நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
பொதுவாக தமிழ் படங்கள் 28 நாட்களுக்குள் OTT-க்கு வரும் நடைமுறை இருப்பதால், மார்ச் 26ஆம் தேதி 'தாய் கிழவி' OTT-ல் வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால்... இங்கே தான் பெரிய ட்விஸ்ட்! படம் இன்னும் திரையரங்குகளில் நல்ல ஓட்டத்தில் இருப்பதால், தயாரிப்பாளர்கள் OTT ரிலீஸை தள்ளிப் போடலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது, ஏப்ரல் முதல் வாரத்தில் தான் படம் OTT-ல் வெளியாகும் வாய்ப்பு அதிகம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது ரசிகர்களுக்கு ஒரு பக்கம் காத்திருப்பு... இன்னொரு பக்கம் எதிர்பார்ப்பு என இரட்டை உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?
தற்போது வரை OTT ரிலீஸ் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. ஆனால் இன்னும் சில நாட்களில் இதுகுறித்து தெளிவான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications